முகப்பு

vendredi 11 mars 2011

அன்றே சொன்னார் கவியரசர்.


அன்றே சொன்னார் கவியரசர்.


கருணாநிதி பற்றி கண்ணதாசன் கவிதை

அஞ்சாதா சிங்கமென்றும்

அன்றெடுத்த தங்மென்றும்

பிஞ்சான நெஞ்சினர் முன்

பேதையர்முன் ஏழையர் முன்

நெஞ்சாரப் பொய்யுரைத்து



தன்சாதி

தன்குடும்பம்

தான்வாழ‌ தனியிடத்து

பஞ்சாங்கம் பார்த்திருக்கும்

பண்புடையான் கவிஞ‌னெனில்

நானோ கவிஞ‌னில்லை

என்பாட்டும் கவிதையல்ல‌



பகுத்தறிவை ஊர்க்குரைத்து

பணத்தறிவை தனக்குவைத்து

தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்

சோடனைகள் செய்து வைத்து

நகத்து நுனி உண்மையின்றி

நாள்முழுதும் வேடமிட்டு

மடத்தில் உள்ள சாமிபோல்

மாமாய‌ கதையுரைத்து



வகுத்துண‌ரும் வழியறியா

மானிடத்து தலைவரென்று

பிழைத்திருக்கும் ஆண்மையில்லா

பேதையனே கவிஞ‌னெனில்

நானோ கனவிஞ‌னில்லை

என்பாட்டும் கவிதையல்ல‌.

Aucun commentaire:

Enregistrer un commentaire