முகப்பு

samedi 1 janvier 2011

2011 ஆம் ஆண்டு

2011 ஆம் ஆண்டு விசாகம் நட்சத்திரத்தில் 4ஆம் பாதத்தில் பிறக்கிறது. விசாகம் நட்சநத்திரத்தை தீதுரு விசாகம் என்று சொல்வார்கள். அதாவது தீமையைத் தரக்கூடியது. அதன்பிறகு அந்தத் தீமையை அழிக்கக் கூடியது என்று சொல்வார்கள்.

பாய்தனில் படுத்தோர் தேறார், பாம்பின் வாய் தேரைதானே, வழிநடை போனார் மேலார் இவர்களெல்லாம் விசாக நட்சத்திரத்தில் புதிய பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு பயணம் மேற்கொண்டால் விபத்துகள் வந்து சேரும். அல்லது அந்தப் பயணம் வெற்றிகரகமாக இருக்காது. ஒரு குறிக்கோளுக்காக பயணம் செய்தால், அந்தக் குறிக்கோள் நிறைவடையாது. தோல்வியில் முடியும். அதனால்தான் வழிநடை போனோர் மேலார்.
அதற்கடுத்தது பாய்தனில் படுத்தோர் தேறார். உடம்பு முடியாமல் விசாக நட்சத்தில் படுத்தால் அவர்களை நிச்சயமாக காப்பாற்ற முடியாது. விசாக நட்சத்திரம் நடக்கும் நாளில் மருத்துவமனையில் சென்று படுத்துவிட்டால், பிழைப்பது கடினம். இதுபோன்ற நட்சத்திரத்தில்தான் இந்த வருடம் பிறக்கிறது. இது பெரிய பாதிப்புகளையெல்லாம் உண்டாக்கக்கூடியது. எங்கு பார்த்தாலும் சச்சரவுகள், பிரச்சனைகள் என்று எல்லா இடங்களிலும் மாறி மாறி இருக்கும்.
அதற்கடுத்தது, நீதி கிடைப்பது என்பது கடினம். நீதியின் கரங்கள் வளைக்கப்படும். நீதிக்கும், அதிகாரத்திற்கும் இடையே யுத்தம் நடக்கும். நீதிபதிகளுக்கும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மிகப்பெரிய யுத்தம் நடக்கும். நீதிபதிகள் கடுமையாகப் போராடி நீதியை நிலைநாட்ட வேண்டியிருக்கும். பல அச்சுறுத்தல்களையும் தாண்டி அவர்கள் நீதியை நிலைநாட்ட வேண்டியிருக்கும். இது எல்லோராலும் முடியாது. வலுவான கிரக அமைப்பு உள்ள நீதிபதிகளால்தான் அதிகாரத்தில் இருப்பவர்களில் அத்துமீறல்களையும் தாண்டி நீதியை நிலைநாட்ட முடியும். இதுபோன்று, இந்த வருடத்தில் பிறக்கக்கூடிய யுத்த நட்சத்திரமான விசாக நட்சத்திரம் கொடுக்கும்.
முருகப் பெருமான் கார்த்திகை, உத்திரம், விசாகம் என்று மூன்று அவதாரங்கள் உண்டு. அதில் சூரனை சம்காரம் செய்வதற்கென்றே அவதாரம் எடுத்த நட்சத்திரம் விசாக நட்சத்திரம். சம்கார நட்சத்திரம். என்னதான் அதிகார பலம், பண பலம் வந்து ஒரு பக்கம் மோதினாலும் இறுதியில் நீதி ஜெயிக்கும். அதனை இந்த 2011ல் நாம் கண்கூடாகப் பார்க்கலாம். அது கொஞ்சம் காலம் கடந்து நடக்கும், ஆனால் நடக்கும்.
அதற்கடுத்ததாக மழை போன்றதெல்லாம் வழக்கம் போல இருக்கும். பருவம் தவறிய மழைதான் இருக்கும். மகசூல் ஒரு பக்கம் அதிகரித்தல், இன்னொரு பக்கத்தில் இயற்கை சீற்றங்களால் மகசூல் அழிவது போன்றதெல்லாம் இருக்கும். கார்த்திகை போனால் கடும் மழை இல்லை என்றெல்லாம் சொல்வார்களே, அதெல்லாம் போய், மார்கழியிலும் கடும் மழை பொழியும்.
இதுபோன்ற பழமொழிகள் ஏன் பொய்த்துப் போகிறது?
காலப் போக்கில் கிரகங்களுடைய அமைப்புகள், சுழற்சிகள் எல்லாமே மாறி வருகின்றன. அது மாற மாற இயல்பாகவே இதுபோன்ற மாற்றங்கள் வரும். இது இல்லாமல், மக்கள், ஆள்பவர்கள், உலகெங்கிலும் நாட்டை ஆள்பவர்கள் ஆகிய காரணிகள், தனி மனித ஒழுக்கம் இதையெல்லாம் சார்ந்து ஒவ்வொரு மழை தவறும் என்று சொல்வார்கள். மன்னன் அதவறினால் ஒரு மழை தவறும் என்று சொல்வார்கள். மழை பொய்க்கும் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் மழை அதிகம் பொழிந்து கெடுக்கும். காய்ந்து கெடுத்தது, பேய்ந்து கெடுக்கிறது என்று சொல்வார்களே அதுபோல நடக்கும்.
மனசாட்சிக்கு குறைவான சம்பவங்கள், பதவியில் இருப்பவர்கள் அந்தப் பதவியை தவறாக பயன்படுத்துவது – யாராக இருந்தாலும் – அதனால்தான் சில விஷயங்களை நாம் பார்த்து செய்ய வேண்டும். நீதித்துறை என்று சொன்னேனே அதற்காகச் சொல்கிறேன். இதுபோன்று இந்த வருடம் முன்னும் பின்னுமாக இருக்கும்.
மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சி இருக்கும். உலகெங்கிலும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் எழுச்சி இருக்கும். கெட்டப் பழக்கங்களில் இருந்து தாண்டி வெளிவருவார்கள். அதற்கடுத்து, போராட்டங்கள் வெடிக்கும். ஏனென்றால், விசாகத்தில் வருடம் பிறப்பதால் எங்கு பார்த்தாலும் உண்ணாவிரதம், ஊர்வலம் போன்றெல்லாம் இருக்கும்.
அதன்பிறகு, ஒடுக்கப்பட்டாகிவிட்டது என்று கூறப்படும் இயக்கங்களெல்லாம் மீண்டும் உயிர்த்தெழும். சில விஷயங்கள் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும். ஏனென்றால் விசாகம் இதுபோன்று மாற்றி மாற்றி அமைக்கும்

Aucun commentaire:

Enregistrer un commentaire