முகப்பு

vendredi 22 octobre 2010

மணி மொழிகள் (சவுந்தா) சில மணி மொழிகள் வாசித்தவற்றில் பிடித்தவை

கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை.

நீங்கள் உண்பவற்றில் மிகச்சிறந்தது நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்

நல்ல நண்பர்களைப் பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது.
ஜாதி என்பது மனிதரால் உருவாக்கப்பட்டது. கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல.
என்னைப் பொறுத்த வரையில் ஜாதி கிடையாது. மதம் கிடையாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தான் எனது கடவுள் கொள்கை. நாமே நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்?
தன்னலம் தேவை தான். ஆனால் அது பொதுநலமாகப் பரிணமிக்க வேண்டும்.

கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது.
படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்!
பகைவனின் பலவீனத்தை அறிய, அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.
காலம் சாதகமாக இல்லாத வரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்!
விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்

தன் கையே என்றாலும், விஷம் ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்!
எந்தச் செயலுக்கும் மனமே சாட்சி
விதை எப்படியோ, பழமும் அப்படியே!
பகைவனே என்றாலும், அவனின் நல்ல பண்புகளும் நமக்கு ஆசான்!
பணத்தின் மிகப் பெரிய பயன், அதை இல்லாதவர் களுக்குக் கொடுத்து மகிழ முடிவதுதான்
நம்முடைய தொழில் எதுவானாலும் அதில் நமக்குச் சில போட்டியாளர்கள் இருப்பது நல்லதுதான்.
கோழையின் அச்சம்கூட சில சமயங்களில் அவனை வீரனாக்கிவிடுவது உண்டு.
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்
நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள், ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்.
உள்ளத்தின் ஒழுங்குமுற்றிலும் குலைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.
பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை
ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.
தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை வேறு யாரும் காப்பாற்ற முடியாது

Aucun commentaire:

Enregistrer un commentaire