முகப்பு

mercredi 20 février 2013

சிந்தனைகள்....

 
 
ஏற்கனவே எனது இணையத்தளத்தில் வெளிவந்தது மீண்டும் உங்களுக்காக
 
சிந்தனைகள்....
காலை எழுந்ததும் கைகளைப் பார்த்து வணங்குங்கள். விரல் நுனிப்பகுதியில் லக்சுமியும் மையப்பகுதியில் சரஸ்வதியும் மணிக்கட்டில் கோவிந்தனும் இருப்பதாகக் கூறுவார்கள். ஆலய தரிசனத்திற்கு உங்கள் கைகள் உள்ளன.

சிந்தனைகள்....
தன் தவறுகளை திருத்திக்கொண்டு தன்னைத் தொடர்ந்து புதிய மனிதனாக மாற்றிக் கொள்வதில்தான் மனிதனின் நல்ல குணம் இருக்கிறது. ஒரு மனிதனின் மனம்தான் அவனுடைய நண்பன்இ அதை அவன் தனது எதிரியாக மாற்றிவிடக் கூடாது.
 
சிந்தனைகள்....
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

சிந்தனைகள்....
தன் கிணற்றில் குளிக்கவிடாது..
தன் வாங்கில் படுக்க விடாது..
தனக்கு தேவையற்ற உணவை மற்றவருக்கு கொடுக்க மனமில்லாது..
வாழும் மனிதனாக புவியில் ஒருவன் காணப்பட்டால் அவனால் கடவுளும் கண்ணீர் வடிக்கிறார்.
பணத்தையும் உணவையும் பதுக்கி வைத்து சுயநலத்தோடு வாழ்வது வாழ்வல்ல.

சிந்தனைகள்....
பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.

சிந்தனைகள்....
நம்மைப்பற்றி நல்ல அபிப்பிராயத்தை உருவாக்காமல் நாம் எவரையுமே கவர இயலாது. செல்வத்தைச் சேமிப்பதைவிட நல்ல பெயரை உருவாக்குவதே சிறப்பானது.
 
சிந்தனைகள்....
சரியான ஜோடியை தேர்ந்தெடுப்பது முக்கியமல்ல சரியான ஜோடியாக இருப்பதுதான் முக்கியம்.
 திருமணம் வேருள்ளது வளர்ந்து பூ பூக்க வல்லது அதை விசுவாசமாகக் கவனிக்க வேண்டும்

சிந்தனைகள்....
ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்;
ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை....

சிந்தனைகள்....
எத்தனை நாள் பழகினோம் என்பது முக்கியமில்லை ;
எத்தனை நாள் உண்மையாக பழகினோம் என்பதே முக்கியம் ! 

mardi 5 février 2013

மழை

Photo : கொட்டி முடித்த மழையில் 
உடைந்திருந்த பள்ளங்களில் 
நிறைந்திருக்கும் மிச்சங்களில் 
கால் பதித்து துள்ளி விளையாடி
சேறுபூசிய அழுக்காகிய 
காலங்கள் அழியவில்லை 
இன்னும் என்னால் 
முடியும் அப்படி.....
என்தேசம் வாவென்றென்னைக் 
கை நீட்டி 
என்வாசல் தந்து 
வாடைக் காற்றில் அறையும்
என் அறையன்னலூடாய்
என் கடலை இரசிக்க விடுமானால்..
அதுவரை...
இரவல் தேசத்தின் 
இரவல் மழையில் 
இழந்தவற்றுடன் இருட்டில் 
குடைக்குள் தனியே
நனையாமல் ந(க)டக்கிறேன்!

வி.அல்விற்.
01.02.2013
 
கொட்டி முடித்த மழையில்
உடைந்திருந்த பள்ளங்களில்
நிறைந்திருக்கும் மிச்சங்களில்
கால் பதித்து துள்ளி விளையாடி
சேறுபூசிய அழுக்காகிய
காலங்கள் அழியவில்லை
... இன்னும் என்னால்
முடியும் அப்படி.....
என்தேசம் வாவென்றென்னைக்
கை நீட்டி
என்வாசல் தந்து
வாடைக் காற்றில் அறையும்
என் அறையன்னலூடாய்
என் கடலை இரசிக்க விடுமானால்..
அதுவரை...
இரவல் தேசத்தின்
இரவல் மழையில்
இழந்தவற்றுடன் இருட்டில்
குடைக்குள் தனியே
நனையாமல் ந(க)டக்கிறேன்!

வி.அல்விற்.
01.02.2013
 

dimanche 3 février 2013

உண்மையான நட்பு !!.

 
 
நினைவில் வைத்து
கனவில் காண்பதல்ல நட்பு !.
மனதில் புதைத்து மரணம்
வரை தொடர்வதுதான்
உண்மையான நட்பு !!.


தலைமைத் தகுதியை பெற முடியாது

 
 
உபதேசத்தைவிட நடந்து காட்டுவது மேலானது, முன்னுதாரணமாக நடந்து காட்டாமல் எவரும் தலைமைத் தகுதியை பெற முடியாது. 

வெளி வந்துவிடுகின்றன

 
 
அறையில் அழுகிய பொருள் இருந்தால் அதன் நாற்றம் உடனே அறையெங்கும் பரவுவதைப்போல பொறாமை, வெறுப்பு, தீமை ஆகியன இதயத்தில் இருந்தால் அவை உடனே வார்தையாக வெளி வந்துவிடுகின்றன

மனம் இருந்தால் மாட்டுக் கொட்டிலும் மாளிகை…!

 
 
நேசம் இருந்தால் விடுதியும் வீடு..!
பாசம் இருந்தால் வெட்ட வெளியும் அரண்மனை..!
இதயம் இருந்தால் இடுகாடும் சுவர்க்கம்..!
மனம் இருந்தால் மாட்டுக் கொட்டிலும் மாளிகை…!


இதனால்தான்.

 
 
கரும்பு – மிளகாய் – மலர்ச்செடி இந்த மூன்றையும் அருகருகாக நட்டு நீரை ஊற்றி வளர்த்தான் ஒருவன். ஊற்றியது ஒரே கிணற்றின் நீர்தான் ஆனால் மிளகாய் உறைத்தது, கரும்பு இனித்தது, பூ வாசமாக இருந்தது.. காரணம் இவை மூன்றும் ஒரே நீரை உண்டு வளர்ந்தாலும் தத்த...மது இயல்பை மாற்றவில்லை.
கரும்பு, மிளகாய், பூமரம் ஆகிய மூன்றும் மற்றவருக்காக தமது இயல்பை மாற்றவில்லை. மற்றவருக்கு பயந்து வாழ்ந்தால் மிளகாய் இனிக்னும் கரும்பு உறைக்கும். கடைசியில் இரண்டுமே சந்தையில் செல்லாக்காசாகப் போய்விடும். மற்றவர்களுக்கு பயந்து தமது இயல்பை மாற்றுவோர் செல்லாக்காசுகளாகவும், நடைப்பிணங்களாகவும் வாழ்வது இதனால்தான்.

 

mardi 29 janvier 2013

வனப்பைக் கூட்டும்!

 
 
ஏதோ பிறந்தோம்,
ஏதோ வாழ்ந்தோம்
என்றிருப்பதல்ல வாழ்க்கை!
எப்படி வாழ்ந்தோம்
என்பதும் ஒரு அங்கம்.
வாழக் கிடைத்த
... வாழ்க்கையில்,
ஒரு சிலருக்காவது
வசந்தத்தின் முகவரியை
அறிமுகம் செய்தோமேயானால்
அதுவே வசீகரத்தின்
வனப்பைக் கூட்டும்!

 

மனித மனங்களில் !

 
 
பாய்ந்தால் ஆறு
ஓடினால் ஓடை
வீழ்ந்தால் அருவி
நின்றால் குளம்
நிறைந்தால் ஏரி
கலந்தால் கடல்
... என்றழைக்கின்றோம்
எல்லாம் தண்ணீர்தானே!
அனைத்து உயிரிலும் உறைந்திருப்பன்
இறைவன் என்கிறோம் .
இறைவன் மதத்தில் இல்லை
உலக உயிர்களில்
நீக்கமற நிறைந்திருக்கிறான்
மனித மனங்களில் !
 

திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்

 
 
பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள். தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.


உன்னால்...

 
 
உன் நினைவுகளால்
வண்ணம் பூச மறந்து
வானில் அடையாளம்
தெரியாமல் வட்டமிட்டுக்
கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி நான்...
... உதிரம் இல்லாத இதயம்
உயிர் வாழ துடிக்குது
உன்னால்...

 

தமிழ் வாழ்த்து

 
 
தமிழ் வாழ்த்து
தாயின் முதற்பாலும்
தமிழின் முதற்சொல்லும்
நாவினில் பிறழாது
சாவிலும் பிரியாது
மண்ணோடு போகும்வரை
... தமிழோடு வாழ்கவென்றும்
மண்ணோடு போனபின்னும்
தமிழ்நாடு வாழ்க என்றும்

(படித்ததில் மிகவும் பிடித்தது)

இரு மன திருமணம்

 
 
இளவேனில் இளஞ்சிரிப்பில்
இடம்மாறி இதயங்கள்
இதையன்றி வாழ்வில்லை
இசைத்திடுவோம் இனியநாதமென
இணைத்திடும் இனிதாய்
இரு மன திருமணம்

பாசம் பகிர்ந்திருந்தால்
பண்பு குலையாது
எண்ணங்கள் பரிமாறப்பட்டால்
... மதித்தல் மேலோங்கும்
அன்பு அரணாய் உயர்ந்தால்
அரவணைத்துக் காத்திருக்கும்

அதுவே குற்றம்காணில்
குறுகிப்போம் நல்லுறவு
பற்றற வழிசமைக்கும்
சொற்கள் சுருள வைக்கும்
தொட்டதெல்லாம் துயராகும்
சுதந்திரம் எதுவெனக் கேட்கும்
கட்டவிழக் காத்திருக்கும்

கட்டல்ல திருமணம்
கண்டுணரும் அன்பின் வேரில்
புரிந்துணர்வின் கிளைகளில்
விட்டுக் கொடுப்பின் இலைகளில்
சந்ததிகள் செழித்தோங்கி
காலத்தில் பதிபடுவது
புரிந்தவருக்கோ கொள்ளையின்பம்
இழந்தவர்க்கோ நரகம்!

வி.அல்விற் .
29.01.2013.


samedi 26 janvier 2013

கண் கலங்காது எடுத்தவர் யாருமில்லை

 

 

தன்னை புரிந்து கொண்டவன் மனிதன்
மனிதனின் வலியேய் புரிந்துகொண்டவன்
மாமனிதன்

வெற்றிடம் என்பவன் முட்டாள்
காற்று நிறைந்திருக்கிறது என்பான்
அறிவாளி

மாற்றுக்கருத்தே மருந்தாகும்
மதயானை சமுதாயத்திற்கு .
மதிப்பெண்ணோ மதுபானை மாணவனுக்கு

ஆயிரம் பொய்களுக்கு
ஒரு உண்மை இணையாகாது
என்பதை உணர்ந்தவன் பகுத்தறிவாளன்

இருப்பதை கொடுப்பவன் கொடையாளி
திருடியதை கொடுப்பவன் சுயநலவாதி
அனைவரும் அறியார்

காலமறிந்து மாற்றிக்கொள்பவன்
திறமைசாலி
காலத்தை குறை கூறுபவன் கிணற்றுத் தவளை

பிறப்பை உணர்ந்தவன் என்றும்
இறப்பை தேடி வீதியில் அலையும்
உல்லாச பறவை .

இமையில் விழுந்த தூசியேய்
கண் கலங்காது எடுத்தவர் யாருமில்லை என
அறிவான் சாணக்கியன்




mardi 22 janvier 2013

அன்பில்லாத

 
 
உன் உடலைத் தானம் செய்ய விரும்புகிறாயா.. அப்படியானால் உன்னிடம் அன்பு இருக்கிறதா என்று உன்னை நீயே கேட்டுப்பார். அன்பில்லாத உன் உடல் உறுப்புகள் இன்னொரு மனிதனில் பொருத்தப்பட்டால் அவனும் அன்பற்ற இயந்திரமாகிவிடுவான்

அமைதியை தேடித்தேடி

 
 
அமைதியை தேடித்தேடி
தினம் ஆளாய்ப்பறக்கிறோம்......
அது நம் ஆன்மாக்குள்ளே
இருப்பதை அறிய மறுக்கிறோம்...................
எதையோ தொலைந்ததாய்
நினைத்து நினைத்து
...நித்தம் நித்தம் தேடுகிறோம் ...........
ஆனால் எதைத்தொலைத்தோம்
என்றுதான் “விடை தேடுகிறோம்”

 

உங்கள் இதயம்

 
சந்தோஷத்தை உங்களுக்கு
யாரும் கொடுக்க முடியாது.
உங்கள் மனதில்
இருந்து உருவாகுபவை....................
மகிழ்ச்சி சூழ்நிலைகள்
உருவாக்குபவை அல்ல......
உங்கள் இதயம்
உருவாக்குபவை...


என் மனதை

 
 
உயிரின் உருவம் நீயடி
என் உயிரைத்திண்பது ஏனடி..?
மனதில் நின்றவள் நீயடி,
என் மனதைக் குடைவது ஏனடி...?


வசீகரத்தின்

 
 
ஏதோ பிறந்தோம்,
ஏதோ வாழ்ந்தோம்
என்றிருப்பதல்ல வாழ்க்கை!
எப்படி வாழ்ந்தோம்
என்பதும் ஒரு அங்கம்.
வாழக் கிடைத்த
... வாழ்க்கையில்,
ஒரு சிலருக்காவது
வசந்தத்தின் முகவரியை
அறிமுகம் செய்தோமேயானால்
அதுவே வசீகரத்தின்
வனப்பைக் கூட்டும்!

 

உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்

 
 
நீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் போன்றவற்றை விட்டுச் செல், அது உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்.