வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது. saveiour@gmail.com
lundi 31 décembre 2012
jeudi 27 décembre 2012
திருமண நாளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அற்புதமான ஆலோசனைகள்.
ஒவ்வொரு, பெண்களின் வாழ்க்கையிலும் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்துவது திருமணம்!
அன்றைய நாளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அற்புதமான ஆலோசனைகள்.
திருமண நேரத்தில் எல்லோரின் பார்வையும் மணப்பெண்ணையே மையமாகக் கொண்டிருப்பதால்
பெண்மைக்கே
உரிய நாணம் அவளைத் தலை குனிய வைத்து விடும். இது போன்ற சூழலில் மணப்பெண் தனது
தன்னம்பிக்கையை ஒருபோதும் தளரவிட்டு விடக்கூடாது.
சில பெண்கள் பயத்தில் மணமேடையிலேயே கண்ணீர் உதிர்த்தபடி இருக்கிறார்கள்.
மகிழ்ச்சியான நாளில் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தேவை. அப்போதுதான் அன்று
எடுக்கப்படும் போட்டோ, வீடியோ காமிராவில் மிக அழகாக காட்சி அளிப்பீர்கள்.
அதுபோல திருமணத்தின் போது மணப்பெண்கள் புடவை கட்டுவதில் கவனமாக இருக்க வேண்டும்.
பட்டுப்புடவையானது அதிகம் தூக்கலாகவோ, தொங்கலாகவோ இருக்கக்கூடாது.
மணமேடையை நோக்கி நடக்கும் போது மிகவும் மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும்.
குறிப்பாக படிக்கட்டில் ஏறும்போது கவனமாக இருப்பது நல்லது.
வழக்கம் போல் அங்கும் இங்கும் பார்வையைச் சிதற விடாமல் கீழே கவனமாக பார்த்து
அடியெடுத்து
வைக்க வேண்டும்.
உங்கள் கவனத்தை திசை திருப்பும் வகையில் யாராவது குரல் கொடுத்தாலோ, சிரித்தாலோ அதை
கண்டு கொள்ளாதீர்கள்.
உங்கள் பட்டுப் புடவையின் டிசைன் மற்றும் நகைகளின் தேர்வு ஒன்றுக்கொன்று தொந்தரவு
செய்யாத
வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக நகைகளில், மாலையில் சுற்றப்பட்டிருக்கும் நூல் சிக்கிக் கொள்வதுண்டு.
நீங்கள் மண்டப வாசலில் இருந்து உள்ளே நுழையும் சமயத்தில் பாதையில் உறவினர்கள். பூக்கள்
தூவாமல் இருக்க வீட்டாரிடம் சொல்லி வையுங்கள்.
மனமகளுக்கு பீடா, புகையிலை, பபுள்கம், அடிக்கடி சாக்லேட், ஐஸ்கிரீம் சாப்பிடுவது...
போன்ற பழக்கம் இருந்தால் மணநாளின் போது அதை தவிர்ப்பது நல்லது.
சில மணப்பெண்கள் அளவுக்கு அதிகமாக மேக்-அப் போட்டு வலம் வருகிறார்கள். இது நல்லதல்ல.
ஒரிஜினல் முகம் தெரியாத அளவுக்கு ஒரு போதும் மேக்-அப் போடாதீர்கள்.
போட்டோ கிராபர் சொல்லாத வரை கண்களை அகல விரிக்க வேண்டாம். அதுபோல வீடியோ எடுத்துக்
கொண்டிருக்கும் போது கண்களை அங்கும் இங்கும் அலைய விடக்கூடாது. மணப்பெண் நடந்து வரும்
போது அருகில் உள்ள தோழியுடன் அனாவசியமாகப் பேசவேண்டாம். பற்கள் தெரிய சிரிப்பதோ,
கோபப்படுவதோ தவறு.
மணமேடையில் அமர்ந்திருக்கும் போது யாருடைய பேச்சாவது உங்களுக்கு பிடிக்காமல் போனால்,
உங்கள் அதிருப்தி அல்லது கோபத்தை உடனே காட்டக்கூடாது.
அப்போது நீங்கள் கோபப்பட்டால் மணமகன் வீட்டார் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும்.
அதனால் அந்த ஒரு நாள் மட்டும் கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்ளுங்கள். வாழ் நாள்
முழுவதும் நினைவில் வைத்து பூஜிக்க வேண்டிய புனித நாள் அல்லவா?

vendredi 21 décembre 2012
மாமரி மடியில் பிறந்திட்டான்
மார்கழிக் குளிரில் மாட்டுத்தொழுவத்திலே
மாமரி மடியினிலே மங்கையர் வயிற்றினிலே
மன்னவன் பிறந்திட்டான்
மண்ணில் வேந்தனாய் மக்கள் மத்தியில்
மானிடர் பாவம் போக்க மமதையை மறந்திட
... மலர்ந்திடும் சமாதானத்தை தந்திடவே
மன்னவன் பிறந்திட்டான்
மணம் வீசும் தூபத்துடன் மன்னர்கள் சூழ்ந்திடவே
மண்ணுலகில் ஒளி பிறந்திடவே
மானிடர் அனைவரும் சந்தோசத்தில் திழைத்திடவே
மன்னவன் பிறந்திட்டான்
மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி ஊட்டும் செய்தியொன்றாம்
மண்ணின் வேந்தன் விண்ணில் ராஜன்
மனுக்குலத்தை மீட்டெடுக்க மாபரன் இயேசு பாலன்

வந்து பாரும் இயேசுவே! வந்து பாரும்
மண்ணுலகில் மாந்தர் பாவம் போக்கிடவே
மனித அவதாரம் எடுத்து இம்மண்ணில்
பிறக்கத் திருவுளம் கொண்ட இயேசுவே
மண் மீதினில் மாந்தர் படும் அவலநிலையை
வந்து பாரும் இயேசுவே! வந்து பாரும்
... பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள்!
பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்
மற்றும் உற்றார் உறவினரின் பரிதாப வாழ்வால்
நாடும் வீடும் சாவீடாய்ப்போன நிலையை
வந்து பாரும் இயேசுவே! வந்து பாரும்
நியாயம் கேட்போரும் நீதி தேடுவோரும்
அடக்கு முறையில் அடைபட்டுக் கிடக்கும்
அநியாய சிறை வாழ்க்கை நிலையை
வந்து பாரும் இயேசுவே! வந்து பாரும்
வயிற்றுப் பசியினால் ஒரு வேளை உணவிற்காக
ஏங்கி வாடும் குழந்தைகளையும்
முவேளையும் நன்றாக உண்டுவிட்டு
அரக்கர் போல ஆணவத்துடன் அலைமோதும்
ஆட்சியாளரின் அட்டகாச நிலையையும்
வந்து பாரும இயேசுவே! வந்து பாரும்
சமாதானம் சமாதானம் என ஏங்கி
தவிப்போரின் ஏக்க நிலையையும்
சமாதானம் வந்தால் உழைக்க முடியாது என
பெருமுச்சுவிடும் பித்தர்களின் நிலையையும்

mercredi 12 décembre 2012
"கடவுளே! உதவி செய்!"
ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.
கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்!" என்றான்.
"கடவுளே! உதவி செய்!" என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.

“ஐயோ”
ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம்.
உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாராம்.
இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.
அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான்.
உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவி “ஐயோ” வை அல்லவா கூப்பிட்டான். அதான், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.
அதான் “ஐயோ” என்று ஏன் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு சின்ன கதை.
mardi 11 décembre 2012
வாய் வீச்சில் வீரரடி
வாய் வீச்சில் வீரரடி - இவர்
நெஞ்செங்கும் வஞ்சமடி
வான் திறந்து பால் பொழிகின்றது என்பர்
பூகம்பத்தில் பன்னீர் கொப்புளிக்கின்றதென்பர்
தேனூற்று தெருவில் பாயுதென்பர்
தெவிட்டாதது தம் சொல்லுரை என்பர் ( வாய் வீச்சில் வீரரடி...)
பொய்யுரைத்து சிறு நெருப்பூட்டுவர்
தந்திரக் கதையால் தடுமாற்றம் வரவைப்பர்
தெள்ளமுதில் நஞ்சைக் கலந்தூற்றுவர்
தெரியாமல் சிறு நெருப்பூட்டுவர் (வாய் வீச்சில் வீரரடி...)
வீரம்செறி பரம்பரைக்கோர் வினை வைப்போர்
சிறுபிள்ளை விளையாட்டாய்க் குழி வைப்போர்
பிணக் குவியல் நடுவிலும் பேரம் பேசுவர்
மனக் கதவைக் கொஞ்சமும் திறப்பிலர் ( வாய் வீச்சில் வீரரடி...)
வரலாறு மறந்தெமக்கு வதை செய்வர்
வழி மறித்தெமக்கு பகை செய்வர்
கோடிகள் வைக்காக் கோடிக்குள்
நாலடித் துண்டை சிந்திக்கார்! ( வாய் வீச்சில் வீரரடி...)
இரு கையைக் கண்ணுக்குள் குறிவைப்பர்
இனமானம் இழந்தொரு விதி முனைவர்
வளமான வாழ்வுக்கு தணல் வைப்பர்
இழிவாக வரலாற்றில் பதிபடுவர் ( வாய் வீச்சில் வீரரடி...)
மிதிபட இனமொன்றும் புல்லல்ல கேட்பீர்
வழிகாட்டும் விடிவெள்ளி மறந்திடிலர் -எம்
மதி கண்டு ஏனோ பயந்திட்டார்
தலைகீழாய் தப்புகள் கீறுகின்றார் ( வாய் வீச்சில் வீரரடி...)
10.12.2012
வி. அல்விற்(france)
நீங்கள் யார்? சல்லடையா? முறமா?
பல ஆண்டு காலம் பயின்றுவிட்டுத் தனது குருகுலத்திலிருந்து வெளியுலகுக்குச் செல்லும் மாணவன் ஒருவனைப் பார்த்து அந்த குரு சொன்னார்: "நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!"
இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
சல்லடை நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கசடுகளையும் கல்லையும் மண்ணையும், தான் வைத்துக் கொள்ளும். முறமோ, பதர், கல், மண் ஆகியவற்றை கீழே தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும்!

உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது
உருவத்தில் சிறியவனாக இருப்பதால் யாரையும் ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு ஒரு வகையில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு அருகே செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.
ஆனால் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது. அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் கீறுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.
அதற்கு 'ஈ' ஏய் ! நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.
இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் முடியுமாயின் அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் கடிக்க முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.
ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே கீறிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.
சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை.
அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை பாடாய் படுத்தி பாடம் புகட்டிவிட்டதே!. .

வெற்றியின் ரகசியம்
வெற்றியின்
ரகசியம்
அன்பு காட்டு
ஆனால் அடிமையாகி விடாதே!
இரக்கம் காட்டு
ஆனால் ஏமாந்து விடாதே!
பணிவாய் இரு
ஆனால் கோழையாய் இராதே!
கண்டிப்பாய் இரு
ஆனால் கோபப்படாதே
சிக்கனமாய் இரு
ஆனால் கஞ்சனாய் இராதே!
வீரனாய் இரு
ஆனால் போக்கிரியாய் இராதே!
சுறுசுறுப்பாய் இரு
ஆனால் பதட்டப்படாதே!
தர்மம் செய்
ஆனால் ஆண்டியாகி விடாதே!
பொருளைத்தேடு
ஆனால் பேராசைப்படாதே!
உழைப்பை நம்பு
ஆனால் கடவுளை மறந்துவிடாதே!
11,12,2012
அன்பு காட்டு
ஆனால் அடிமையாகி விடாதே!
இரக்கம் காட்டு
ஆனால் ஏமாந்து விடாதே!
பணிவாய் இரு
ஆனால் கோழையாய் இராதே!
கண்டிப்பாய் இரு
ஆனால் கோபப்படாதே
சிக்கனமாய் இரு
ஆனால் கஞ்சனாய் இராதே!
வீரனாய் இரு
ஆனால் போக்கிரியாய் இராதே!
சுறுசுறுப்பாய் இரு
ஆனால் பதட்டப்படாதே!
தர்மம் செய்
ஆனால் ஆண்டியாகி விடாதே!
பொருளைத்தேடு
ஆனால் பேராசைப்படாதே!
உழைப்பை நம்பு
ஆனால் கடவுளை மறந்துவிடாதே!
11,12,2012
dimanche 9 décembre 2012
மாற்றி சிந்திக்கப் பழக வேண்டும்.
ரயில் தண்டவாளத்தில் சிக்குப்பட்டுவிட்டான் ஒருவன். நள்ளிரவு நேரம்..! காப்பாற்ற எவரும் வரவில்லை. தூரத்தே ரயில் வண்டி வருகிறது. மரணம் ஏறத்தாழ நிச்சயமாகிவிட்டது. என்ன செய்யலாம்.. பாக்கட்டை பார்த்தான் சிகரட் கொழுத்தும் லைட்டர் மட்டும் இருந்தது. அதை கொழுத்தி கையில் பிடித்து அங்கும் இங்கும் ஆட்டினான்… யாரோ நிற்பது தெரிந்து ரயில் நின்றது. சிகரட் பற்ற மட்டும் பயன்படும் என்ற லைட்டரின் பாவனையை மாற்றி சிந்தித்த காரணத்தால் அவன் உயிர் தப்பியது. ஆகவே எப்போதும் மாற்றி சிந்திக்கப் பழக வேண்டும்.
samedi 8 décembre 2012
அகங்காரம் இன்றி வாழ்ந்திடுவோம்!
ஒரு பள்ளி ஆசிரியர் வண்ணப் புத்தகத்தில் யானையின் படத்தை வரைந்து கொண்டு வந்து, அதை சுட்டிக் காட்டி “இது என்ன?” என்று மாணவர்களைக் கேட்டார்.
சின்னக் குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியான குரலில் “யானை!”, “யானை!” என்றார்கள். அவர்களை பாராட்டி விட்டு அடுத்த வகுப்பை நோக்கிச் சென்றார். அங்கு ஒரு சின்ன குழந்தையின் அறிவு ஆசிரியரின் அறிவை அறியாமையாக்கியது.
ஒரே ஒரு சின்ன குழந்தை எழுந்து, “ஐயா, அது யானை அல்ல… யானையின் படம் என்றது”. ஐம்பது வயது மூளை அப்படியே அமைதியாகி போனது! உண்மை தானே. பிஞ்சு மூளையில் உதித்த அறிவு தமது அறியாமையை ஆசிரியருக்கு உணர்த்தியது.
“படிப்பாலும் கல்வியறிவாலும் வருகிற அகங்காரம் இருக்கிறதே அது அழியாது! இந்த அறிவு வெறும் அறியாமை என்று அடுத்தவர் அறிவால் அடிவாங்கினால் ஒழிய, இது ஒழியாது”.
ஆகையால் நாம் இந்த துன்பத்திற்கு ஆளாகாமல் அகங்காரம் இன்றி வாழ்ந்திடுவோம்!

mercredi 5 décembre 2012
பயம்
பயம்
ஏழு
அடிப்படைப்
பயங்களை
வெற்றிகொள்ள
முடியாதவர்கள்
வாழ்வில்
வெற்றிபெற
முடியாது.
அவையாவன.
01.ஏழ்மை
பற்றிய
பயம்
02.
குறை
சொல்வார்களோ
என்ற
பயம்
03.
உடல்
நலம்,
வலி
பற்றிய
பயம்
04.
அன்பின்
இழப்பு
பற்றிய
பயம்
05.
சுதந்திரத்தை
இழப்பது
பற்றிய
பயம்
06.
முதுமை
பற்றிய
பயம்
07.
சாவு
பற்றிய
பயம்.
ஆறு
பயங்களையும்
வென்று,
கடைசியில்
சாவு
பற்றிய
பயத்தால்
எல்லாவற்றையும்
இழந்தவர்களே
உலகில்
அதிகம்.
வாழ்க்கை
வாழ்க்கை
“வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவருமே அறிய முடியாது”. இப்போது இருக்கின்ற காலம் தான் உங்களுக்குச் சொந்தமானது.
மன உறுதியோடு வாழ்க்கை நடத்துங்கள்!
பிறரிடம் அன்பு செலுத்துங்கள்!!
உழைத்துக் கொண்டிருங்கள்!!!
நாளைய தினத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள்.
ஒரு வேளை நாளைக்குக் கடிகாரம் நின்று போய்விடலாம்.
நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது நம்முடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடியம். ஆனால் வாழ்க்கையின் மற்ற பரிமாணங்களை உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். அதனுடைய ஆழம் அகலம் மற்றும் உயரம் ஆகியவை உங்களுடைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையே. இந்த பரிமாணங்களுக்குள் வாழ்க்கை என்கிற அதிசயத்தை நீங்கள் வாழ முடியும். திரும்பவும் நிகழ முடியாத அதிசயம் இது.

Inscription à :
Articles (Atom)