முயற்சி செய்.. முயற்சி செய்.. மீண்டும் முயற்சி செய்.. முதல்முறை நீ தோல்வியடைந்தாலும் முயற்சி செய்.. முயற்சி செய்.. மீண்டும் முயற்சி செய்..
தைரியம் இல்லாதவன் தைரியம் இருப்பது போல நடிக்கும்போது நடிப்பு தொடர்ந்தால் இயல்பாகவே தைரியம் வந்துவிடும்.
துயரமுள்ளவன் சிரித்து மகிழும்போது அவனை அறியாமலே துயரம் ஓடி, மகிழ்வு வந்துவிடும் : இதையே பாவனா யோகம் என்பார்கள்.
சிரிக்கத் தெரியாதவனுக்கு துயரமான மனமே இருக்கும். அவன் வீட்டிற்குள் இருளில்தான் மூழ்கிக் கிடக்க வேண்டும். அவனுக்கு பகல் என்பதே இல்லை என்கிறார் வள்ளுவர்.
துயரம் ஓட ஆடி மகிழ வேண்டும், கோபம் ஒழிய அமைதி காக்க வேண்டும். நோய் தீர நோய் பற்றிய எண்ணங்களை விரட்ட வேண்டும்.
கோபம் வருகிறதா அமைதி பற்றி சிந்தி.. துன்பம் வருகிறதா மகிழ்ச்சி பற்றி சிந்தி.. நோய் வந்தால் உடல் நலத்தை சிந்தி.. பயம் வந்தால் தைரியத்தை சிந்தி..