வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது. saveiour@gmail.com
samedi 30 juillet 2011
அன்பான செயலை செய்ய காத்திருக்காதீர்கள். காலம் குறுகியது நாளை மிகவும் தாமதமாகிவிடலாம்.
மன்னியுங்கள், மறந்துவிடுங்கள், உங்கள் தவறுகளை மற்றவர்கள் எப்படி மன்னிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களை மன்னியுங்கள். பொறுமையோடும் புரிதலோடும் இருங்கள் விரோதம் பாராட்டவோ பழிவாங்கவோ நேரமில்லை வாழ்க்கை குறுகியது.
வாழ்க்கை குறுகியது, நம் பகைமையை தொந்தரவுகளை மறக்க வேண்டும். இன்னும் காலம் இருக்கும்போதே மறக்க, மன்னிக்க வேண்டும். சண்டையை நிறுத்த காத்திருக்காதீர்கள். அன்பான வார்த்தையை சொல்ல அன்பான செயலை செய்ய காத்திருக்காதீர்கள். காலம் குறுகியது நாளை மிகவும் தாமதமாகிவிடலாம்.
நன்மை
வாழ்வின் சந்தோஷத்திற்கு ஓர் அடிப்படை தேவை. ஆகவேதான் எந்த மனிதனுக்காவது எதாவது அன்பைக் காட்ட முடிந்தால் இப்போதே காட்டிவிடுங்கள்.
நாம் நமக்காக மட்டும் வாழ்வதில்லை, அடுத்தவருக்கு உதவ நம்மாலானதைச் செய்ய வேண்டும். துக்கத்தை குறைக்க, மனப்பாரத்தை இறக்க முடிந்தபோதெல்லாம் உதவ வேண்டும்.
நமக்கு வாழ்வதற்கு நல்லதோர் வாழ்வு கிடைத்திருக்கிறது, அதனால் எல்லோருக்கும் நன்மை செய்வோம்.
ஒரு மனிதனின் உண்மையான சொத்து அவன் இந்த உலகிற்கு செய்த நன்மைதான்.
jeudi 28 juillet 2011
mercredi 27 juillet 2011
maman
les milliers d'abeilles sur les fleurs,
les milliers d'abeilles sur les fruits,
les milliers d'étoiles dans le ciel,
les milliers de nuages dans le ciel,
les milliers d'oiseaux dans les arbres,
les milliers d'écureuils dans les arbres
les milliers de crabes sur la plage,
les milliers de rochers sur la plage,
Et seulement
Et seulement
Une maman.!
vendredi 22 juillet 2011
உன் இதயத்தின் கொள்கைகளுக்கு உண்மையாக இரு.
உன்னை நீ நம்பு.. ஒவ்வொரு இதயமும் அந்த இரும்புக் கம்பியின் இசைக்கு துடிக்கிறது. ஒரு மனிதன் தன் சொந்தத் திறமையை அறிய வேண்டும். கொள்கைகளின் வெற்றி தவிர, வேறெதுவும் உனக்கு அமைதி தராது.
இயற்கை நீ என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறது என்பதைக் கண்டுபிடி. உன் இதயத்தின் கொள்கைகளுக்கு உண்மையாக இரு. மற்றவரின் கொள்கைகளுக்கு நீ உண்மையாக இருப்பதாகக் கூறி, உன் வாழ்வை போலி விசவாச நாடகமாக்காதே. உன் சொந்த எண்ணங்களை நம்பு, நம்பிக்கையாய் இரு, சுய சார்போடு நடந்து கொள்.
இந்த உலகில் நன்மைகள் நிறைந்திருந்தாலும் போஷாக்கூட்டும் சோளம் தானாக வராது. உழுவதற்காக உங்களுக்குக் கிடைத்த நிலத்தில் உழுதால் மட்டுமே கிடைக்கும்.
நல்ல எண்ணங்கள்
எண்ணமும் நடத்தையும் ஒன்றுதான். நல்ல எண்ணங்கள் நல்ல பலனைத் தருகின்றன. ஒரு மனிதன் எவ்வளவு தூரம் தன் எண்ணங்களை உயர்த்துகிறானோ அவ்வளவு தூரம் வெற்றி பெறுவான். உங்கள் கனவுகளை குறிக்கோள்களை மதியுங்கள். உங்கள் இலட்சியங்களை எப்போதும் உங்கள் மனதில் நிறுத்துங்கள். ஒரு மனிதன் தான் நினைப்பதாகவே மாறுகிறான். இதுதான் முடிவில்லாத வாழ்க்கை மர்மம்.
பலன்
உங்கள் சொந்த எண்ணங்களின் பலன் உங்கள் கைகளிலேயே இருக்கிறது. நீங்கள் சம்பாதித்ததைத்தான் நீங்கள் பெறுவீர்கள், கூடக்குறைய இருக்காது. உங்களுடைய தற்போதய நிலை எதுவாக இருந்தாலும் எண்ணங்கள், கற்பனைகள் குறிக்கோள்களைப் பொறுத்தே உங்கள் எழுச்சியோ, வீழ்ச்சியோ, அல்லது நிலையாக இருப்பதோ நிகழும். இலட்சியத்திற்கு ஏற்பவே நீங்கள் பெரிதாவீர்கள்.
samedi 9 juillet 2011
உலக வெப்பமயமாதலால் பூமியின் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
நாம் வாழும் பூமியின் பருமன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலக தொழிற்சாலைகளில் வெளியேறும் கரியமில வாயுக்களால் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த வெப்ப அதிகரிப்பால் பூமியின் வட துருவம் மற்றும் தென் துருவத்தில் ஆண்டுக்கு 38 ஆயிரத்து 200 கோடி டன் பனிக்கட்டி உருகி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பனிக்கட்டி உருகலால் கடல்நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது. 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஐஸ் யுகத்திற்கு பின்னர் பூமி மிகுந்த அளவு எடை குறைந்து காணப்பட்டது. இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. இப்போது பூமியின் மையப்பகுதி உலக வெப்பம் அதிகரிப்பால் பெருத்து உள்ளது. அண்டார்டிகாவிலும், கிறீன்லாந்திலும் ஐஸ் உருகி ஓடுவது தொடர்கிறது. ஐஸ் கட்டி காலத்தின் போது பூமியின் எடை பருமன் ஆண்டுக்கு ஒரு மில்லி மீற்றருக்கும் குறைவான அளவில் இருந்து வந்தது. ஐஸ் கட்டியின் அடுக்குகள் கடுமையானதாக இருந்த போது பூமியின் மேல் பகுதியிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. கிரேஸ் எனப்படும் புவி ஈர்ப்பு மீட்பு சோதனை செயற்கை கோள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் பூமியில் பனிக்கட்டி உருகுவது அதிகரித்து பூமியின் வடிவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதை அறிய முடிந்தது. |
vendredi 8 juillet 2011
தவறு.
பத்து ரூபா விலையில் தரமான பொருள் தருவதற்குப் பதில் ஐந்து ரூபா விலையில் தரக்குறைவான பொருளைத் தருவது தவறு, அதை வாங்குவதோ அதைவிடத் தவறு.
மந்திரங்கள்.
வாழ்க்கையில் அவமானப்பட்டிருக்கிறீர்களா ?
அதற்காக சந்தோஷப்படுங்கள்.
துரோகத்தை சந்தித்திருக்கிறீர்களா ?
அதற்காகவும் சந்தோஷப்படுங்கள்.
யாரையாவது நம்பி கெட்டிருக்கிறீர்களா ?
அதற்காகவும் சந்தோஷப்படுங்கள்.
அவமானமும், துரோகமும், ஏமாற்றமும்
நம்முடைய பலத்தை நாமே
தெரிந்து கொள்ள உதவும் மந்திரங்கள்.
நல்வழி
வாழ்க்கையின் ஆறாத காயங்களில்தான் இறைவனின் தீராத கருணை இருக்கிறது.
கடவுள் நடாத்தும் நாடகத்தில் கொடுத்த வேஷத்தைப் போடுகிற பொறுப்பு மட்டும்தான் நமக்கு, போடுங்கள் அவரே நல்வழி காட்டுவார்.
vendredi 24 juin 2011
மண வாழ்க்கை மிக சிறந்ததாக அமைய
இல்லற பந்தத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான உறவு என்பது மிகவும் புனிதமானது. வெவ்வெறு தளங்களில் இருந்து வந்திருக்கும் இருவர் இணைந்து வசிக்கும் போது அவர்களுக்கிடையேயான பரஸ்பரம் புரிதலும் அன்புமே வாழ்க்கை பயணத்தில் இனிமையை கூட்டும். அபரிமிதமான அன்பும், எதிர்பார்ப்பில்லாத நேசமுமே உறவுச்சங்கிலியின் நெருக்கத்தை அதிகரிக்கும். பிறந்து வளர்ந்த இடங்களையும் உறவுகளையும் விட்டு விட்டு கணவனின் வீடே உலகம் என்று வரும் பெண்ணிற்கு சரியான பாதுகாப்பினை வழங்க வேண்டியது கணவனின் கடமை. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் கணவனுக்காக எதை வேண்டுமானலும் செய்ய மனைவி தயாராகி விடுகிறாள். மனைவியின் நன்மதிப்பு புத்தகத்தில் இடம் பெற கணவன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: அதிக நேரம் செலவிடுங்கள்: மனைவி என்பவர் உங்களை மட்டுமே நம்பி வந்தவர். அவருக்காக அதிக நேரம் செலவிடுவது ஒன்றும் தவறில்லை. உறவுகளும் மிகவும் முக்கியம் தான். ஆனால் வாழ்க்கையின் அனைத்து சுக துங்கங்களையும் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளும் மனைவிக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குவதில் தவறொன்றும் இல்லை. பொழுது போக்கில் ஆர்வம்: அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கணவருக்காகவும், அவரது குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிடுகின்றனர் பெண்கள். அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அக்கறை காட்டுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். பொறுப்பான தந்தையாக நடந்து கொள்ளுங்கள்: கணவனுக்கு அடுத்தபடியாக பெண்கள் அதீத அக்கறை செலுத்துவது குழந்தைகள் மீது தான். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் பெண்களுக்கு எந்த அளவிற்கு உரிமையும் கடமையும் இருக்கிறதோ அதே அளவு ஆண்களுக்கும் உண்டு. குழந்தைகளுக்கு பொறுப்பான தகப்பனாக நடந்து கொள்ளும் ஆண்களை கொண்டாடும் பெண்கள் அதிகம் உள்ளனர். மனைவியின் நட்புக்கு மதிப்பு ஆண்களுக்கு என்று நட்பு வட்டம் இருப்பதைப் போல பெண்களுக்கு உயிர்தோழிகள் உண்டு. திருமணத்திற்குப் பிறகு அதை தொடர முடியவில்லையே என்ற ஏக்கம் அநேகம் பேருக்கு ஏற்படுவதுண்டு. மனைவியை அழைத்துக்கொண்டு அவரது தோழிகளின் வீட்டுக்குச் சென்று நட்பை புதுப்பிப்பதில் தவறொன்றும் இல்லை. பரிசுப் பொருட்களால் அசத்துங்கள்: ஒவ்வொரு பெண்ணிற்கும் விலை மதிப்பில்லாத பரிசுப்பொருள் கணவன் மட்டுமே. இருந்தாலும் கணவர் ஒரு முழம் வாங்கிக் கொடுத்தாலே அதை நான்கு பேரிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார்கள். பிறந்தநாள், திருமணநாள் என வாழ்வின் முக்கிய தருணங்களை நினைவில் வைத்துக் கொண்டு அந்த நாளில் மனைவிக்கு பரிசுகளை வாங்கித் தந்து அசத்துங்கள். எந்த சந்தர்ப்பத்திலும் திருமண நாளை மறந்துவிடாதீர்கள். விடுமுறையை அனுபவியுங்கள்: ஆண்டு முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவியை ஆண்டுக்கு ஒருமுறையாவது வெளியூருக்கு அழைத்துச் சென்று வாருங்கள். அது அவர்களுக்கு பரவசமான தருணமாக இருக்கும். இவற்றை சரியாக கடைபிடித்தாலே உறவுபந்தத்தின் நெருக்கம் அதிகரிக்கும். எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்காகவும் மனைவி உங்களை விட்டுக்கொடுக்க மாட்டார். |
தமிழிலும் இனி மொழிமாற்றம் செய்யலாம்: கூகுளின் சாதனை
தமிழிலும் இனி மொழிமாற்றம் செய்யலாம்: கூகுளின் சாதனை
தமிழிலும் இனி மொழிமாற்றம் செய்யலாம்: கூகுளின் சாதனை |
கூகிள் Translate பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கட்டுரைகளை மாற்ற உதவுகிறது.இதுவரை தமிழ் மொழிக்கு மாற்றும் வசதி இல்லை. தற்போது அதனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது சோதனை முறையாகவே அறிமுகம் செய்துள்ளது. அதனால் சரியாக மொழிமாற்றம் செய்யவில்லை. பல ஆங்கில வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளாகவே கொடுக்கிறது. அதே போல தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றினால் பல தமிழ் வார்த்தைகளை தமிழிஷ்[Tamil word in English] வார்த்தைகளாகவே கொடுக்கிறது. மொழிமாற்றம் செய்ய: http://translate.google.com/ தளத்திற்கு சென்று நீங்கள் டைப் செய்யுங்கள். நீங்கள் எந்த மொழியில் டைப் செய்தாலும் முடிந்த வரை அது தானியங்கியாக கண்டுபிடித்து விடும். பிறகு மேலே TO என்ற இடத்தில் எந்த மொழிக்கு மாற்றம் செய்ய வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும். பிறகு Translate என்பதை க்ளிக் செய்யவும். தமிழுடன் சேர்த்து வங்காளம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகள் தற்போது சோதனை முறையில் இருக்கின்றன. Google Translate Gadget-ல் இன்னும் இந்த வசதி வரவில்லை. http://translate.google.com |
Inscription à :
Articles (Atom)










