முகப்பு

dimanche 17 avril 2011


உன்னைக் காணும் முன்
என் இதழ்கள கூட
பேசியதில்லை
உன்னைக் கண்ட பின்
என் இமைகளும் பேசுகிறதே
இது தான் காதல் வித்தையா??????

மலடி என்று பட்டம் சூட்டி அழைத்தது - 
இந்த உலகம்.....
ஆனால்...
அவள் வீட்டு வாசலில் 'அம்மா' என்று
வாஞ்சையுடன் அழைத்தான்
பிச்சைக்காரன்......

நட்பின் தனி அழகு....



தொட நினைத்து நினைத்து
தொடாமல் பேசுவது தான்
காதலின் தன்மை
ஆனால்....
தொடநினைக்காமலே
தொட்டுப் பேசுவது
நட்பின் தனி அழகு.... 

புத்தாண்டு

வருகின்ற காலம்
வசந்த காலம் ஆகட்டும்
வீசுகின்ற காற்றெல்லாம்
தென்றல் காற்றாகட்டும்

வருகின்ற மழையால்
மரங்களெல்லாம் சிரிக்கட்டும்
வருடுகின்ற மகிழ்ச்சியால்
மனமெல்லாம் மகிழட்டும்

வருகின்ற புத்தாண்டு
புத்துணர்ச்சி கொடுக்கட்டும்
காழ்ப்புணர்ச்சி இல்லாமல்
விழிப்புணர்ச்சி உண்டாகட்டும்

vendredi 8 avril 2011

தன்னம்பிக்கை



என்னை செதுக்கிய உளிகளை விட
என்னை உடைத்த உளிகள் அதிகம்
என்னை உசுப்பிய சம்பவங்களை விட
என்னை நசுக்கிய சம்பவங்கள் மிகுதி
நேற்றைய எனது தன்னம்பிக்கைதான்
இன்று எனது வெற்றிகள்.

mardi 5 avril 2011

சிறந்த செல்வம்.



காலையில் நீங்கள் எழுந்திருக்கிறீர்கள்.. என்ன ஆச்சரியம் உங்கள் கைகளில் மந்திரம் போல 24 மணி நேரம் நிரம்பி இருக்கிறது. அதுதான் உங்கள் செல்வங்களில் சிறந்த செல்வம்.
நேரம்தான் விலைமதிப்பற்ற பொருள், அதுதான் வாழ்வின் விலை மதிப்பற்ற சாறுள்ள தசையாகும்.

தைரியமும் விடா முயற்சியும்



தைரியமும் விடா முயற்சியும் இருந்தால் நீ உன் இலட்சியத்தை அடைவாய். எனவே உன் பாதையைத் தீர்மானித்து, அதில் தொடர்ந்து செல் ! என்ன நடந்தாலும் சரி கைவிடாதே.. ! தொடர்ந்து செல் விரைவில் நீ உன் இலட்சியத்தை அடைவாய். இதுதான் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க விரும்புவோர்க்கு  நற்செய்தி.

ஒரு நாள் உன் தாய் நாட்டைக் காண்பாய் !




 அவனுக்கு முன்னால் கரையற்ற கடல்..
நம்பி வந்தவர்கள் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்தனர்..
வெளுத்து களைத்த மாலுமிகள் பிரேதம் போல ஆனார்கள்..
பயங்கரமான அந்தக் கடலில் இருந்து கடவுளும் விலகிவிட்டார்..
நம்பிக்கை போனால் நாம் என்ன செய்வது ?
பயணம் செய் ! பயணம் செய் ! பயணம் செய் !
அந்த இரவோ இரவுகளில் எல்லாம் இருண்டது !
பிறகு ஓர் ஒளி !
வெளிச்சம் ! வெளிச்சம் ! வெளிச்சம் !
கொலம்பஸ் அன்று உலகை வென்றான்
உலகுக்கு ஒரு பாடம் சொன்னான்..
பயணம் செல் தொடர்ந்து பயணம் செல்..
ஈழத் தமிழா நீயும் கலங்கிவிடாதே
பயணம் செல்..! தொடர்ந்து பயணம் செல்..!
நீயும் கொலம்பஸ்போல சுதந்திர மாலையுடன்
ஒரு நாள் உன் தாய் நாட்டைக் காண்பாய் !

mercredi 30 mars 2011

நேர்மை



நேர்மையான வழியில் நேர்மறையாக சிந்தித்த காரணத்தால் மகாத்மா காந்தி என்ற தனி மனிதனால் இங்கிலாந்து சாம்ராஜ்யத்தையே வெல்ல முடிந்ததுஆனால் மகாத்மாவை விட பெரு வலிகொண்ட படைகளை வைத்திருந்த ஹிட்லரால் அதைச் செய்ய முடியாமல் போய்விட்டதுகாந்தியிடமிருந்தளவு நேர்மை ஹிட்லரிடம் இருக்கவில்லை.


* தன்னம்பிக்கை, துணிவு, பயம் இந்த மூன்றில் முதல் இரண்டும் அழகான உயர்வான வாழ்க்கையை அமைத்து தருகின்றன. தன்னம்பிக்கை இருந்தால் துணிந்து காரியத்தில் இறங்கி செயல்பட முடியும். தன்னம்பிக்கை இல்லை என்றால் அது பயத்தை நமக்கு பரிசாகத் தருகிறது. பயந்தவர்கள் எதிலும் துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட மாட்டார்கள். துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கவேண்டும்.

dimanche 27 mars 2011

முயற்சி


முத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.

வாழ்க்கை முறையாகும்


இப்படித்தான் வாழவேண்டும் என்று பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவதைவிட அதை நீங்களே வாழ்ந்து காட்டுவதுதான் பெற்றோருக்கான சிறந்த வாழ்க்கை முறையாகும்.

vendredi 25 mars 2011

மனிதன்.



அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி, 
ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன், 
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை, 
தன்னையறியாமல் தவறு செய்து, 
தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

jeudi 24 mars 2011

நட்பு



நேற்றைய நினைத்தால்
கவலை பிறக்கும்
இன்றைய நினைத்தால்
இன்பம் சுரக்கும்
நாளைய நினைத்தால்
நடுக்கம் கொடுக்கும்
நேற்றைய இறப்பையும்
நாளைய பிறப்பையும் விட
நமக்குத் தேவையெல்லாம்
நட்பு வாழ்க்கை தானே...

அம்மா - நீ



அம்மா - நீ
காலையில் பூத்து
மாலையில் சருகாகும்
வாசமலர் அல்ல.
கணவனின் இல்லறத்தின்

இன்ப துன்பங்களை சுமந்து
அன்பு பண்புகளை அளித்த-எந்தன்
பாசமலர் நீ!

வாழ்க்கை


“வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவருமே அறிய முடியாது”. இப்போது இருக்கின்ற காலம் தான் உங்களுக்குச் சொந்தமானது.

மன உறுதியோடு வாழ்க்கை நடத்துங்கள்!

பிறரிடம் அன்பு செலுத்துங்கள்!!

உழைத்துக் கொண்டிருங்கள்!!!

நாளைய தினத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள்.

dimanche 20 mars 2011

என் சுவாசம்



மலரோடு 
மரங்கள் 
அழகாகத்தானிருக்கும்
வேர்கள் இல்லையெனில் அது 
விறகாகிப் போயிருக்கும்
உன் நினைவு எப்போதும் 
எனக்குள்ளே உறைந்திருக்கும்
அது சுத்தமான காற்றாகி 
என் சுவாசம் நிறைந்திருக்கும்

நிலவு ரசிக்குமே



காற்றும் இங்கே 
கவிதை சொல்லுமே
கற்கள் கூட
கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே
பூக்கள் மலருமே
காதலின் ஊடலை
நிலவு ரசிக்குமே

vendredi 18 mars 2011

அம்மா



அம்மா
போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்.......

பாசமலர் நீ!



அம்மா - நீ
காலையில் பூத்து
மாலையில் சருகாகும்
வாசமலர் அல்ல.
கணவனின் இல்லறத்தின்
இன்ப துன்பங்களை சுமந்து
அன்பு பண்புகளை அளித்த-எந்தன்
பாசமலர் நீ!