முகப்பு

dimanche 31 octobre 2010

பூக்களே...

பூக்களே...
ஏன் நீங்கள் வெளியில் சுதந்திரமாய்
பூத்துக்குலுங்குகிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று உங்களுக்கு
எதிரிகள் யாரும் இல்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் இன்று பூத்து
நாளை உதிர்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று
நீங்கள் பாவம் செய்ய விரும்புவதில்லை.


12 உயர்ந்த செல்வங்கள்


உலகத்தில் 12 உயர்ந்த செல்வங்கள் இருக்கின்றன,
அவற்றில் 11 பணமே அல்ல. அவையாவன
01. நேர்மறையான மனோபாவம்
02. உடல் ஆரோக்கியம்
03. மனித உறவுகளில் சமாதானம்
04. பயத்தில் இருந்து விடுதலை.
05. எதிர்கால சாதனை குறித்த நம்பிக்கை
06. விசுவாசத்திற்கான ஆற்றல்
07. தனது ஆசீர்வாதங்களை பகிர தயாராக இருப்பது
08. அன்போடு செய்யும் வேலை
09. எல்லாவற்றிலும் திறந்த மனம்
10. சுய கட்டுப்பாடு
11. மக்களை புரிந்து கொள்ளும் திறன்
12. பணம்.

யாழ். சித்தர் யோகர் சுவாமி



யாழ். சித்தர் யோகர் சுவாமிகளை பார்க்கவும், தனது எதிர்காலம் பற்றிக் கேட்கவும் ஒருவர் போயிருந்தார். அவருக்கு பதில் சொன்ன சுவாமிகள் – எல்லாம் முடிந்துவிட்டது போ ! – என்று கூறி அனுப்பிவிட்டார். ஆம் ! எல்லாமே எழுதி முடிக்கப்பட்ட கணக்குகள்தான் அவை சாஸ்திரமும், சோதிடமும் பார்த்தாற் போல மாறப்போவதில்லை. சகல கணக்குகளும் முடிந்துவிட்டது, விடை வரும் பார்த்துக்கொள் என்பது சுவாமிகளின் கருத்து. எல்லாம் முடிந்துவிட்டது என்பது தெரியாமல் கூத்தடிக்கும் மனிதர்களை பார்த்து சித்தர்கள் சிரித்தார்கள்.

என் மனசு


ஆகாயப் பட்டுடுத்தி


அசத்தலாய் நட்சத்திர

ஆபரணம் அணிந்து

சந்திரனை முழுமதியாய் கொண்ட

பட்டொளி வீசி நீ

நடந்து வருகையில்

வேகமாய் கரைந்து போனதடி

என் மனசு

மலர்


அன்பே நிலவை நேசிக்கிறேன்


நீ நிலவோடு வாழ்வதால்

நான் மலர்களை முத்தமிடுகிறேன்

நீ நித்தம் சூடிக்கொள்வதால்

நான் தென்றலை சுவாசிக்கிறேன்

தினம் உன்னை தீண்டிச் செல்வதால்

நான் பனித்துளிகளை ஆதரிக்கிறேன்

உன் கண்களில்

பிரசவம் செய்வதால்.

முத்தம்......

முத்தம்......


பத்துமாத பந்தம் அதைப் பக்குவமாய் காத்து

மொத்தமாகச் சேர்த்து முத்து முத்தாய் கோர்த்து

பெத்த நேரம் அணைத்து சொத்தையோரம் பார்த்து

கொத்து கொத்தாய் அன்னை நித்தம் தருவாள் முத்தம்

vendredi 29 octobre 2010

முழுமை

உள்ளத்தால் உண்மையாக இருந்தால் அது உண்மை !


உடம்பால் உண்மையாக இருந்தால் அது மெய்ம்மை !

வாயால் உண்மையாக இருந்தால் அது வாய்மை !

இந்த மூன்றுமே சேர்ந்தால் அதுவே முழுமை !

அம்மா

கருவினில் தாங்கி


உருவாகி உயிர் பெற

உழைத்தவள் அம்மா.

உயிர் எழுத்தின்

உண்மைப் பொருள் அம்மா

அம்மா

அருவரி குழந்தை கூட ..அழகாய் சொல்லும் ஒரு வரி கவிதை .. அம்மா

jeudi 28 octobre 2010

நட்பு

நேற்றைய நினைத்தால்
கவலை பிறக்கும்
இன்றைய நினைத்தால்
இன்பம் சுரக்கும்
நாளைய நினைத்தால்
நடுக்கம் கொடுக்கும்
நேற்றைய இறப்பையும்
நாளைய பிறப்பையும் விட
நமக்குத் தேவையெல்லாம்
நட்பு வாழ்க்கை தானே.....

சிறப்பு

நண்பா


நீ தூங்குவது தவறில்லை

எப்போது எழுந்திருக்கிறாய்

என்பதே முக்கியம்

என்ன வாழ்க்கை வாழ்ந்தாய்

என்பதல்ல உயர்வு

எப்படி வாழ்ந்தாய்

என்பதே சிறப்பு

இதயம்


அன்பே
எறும்பு ஊர்ந்து
கல் தேய்ந்து விடும் என்றாய்
உன் நினைவுகள் ஊர்ந்து
என் இதயம்
தேய்ந்ததை
நீ அறிவாயா...???

இருட்டறை

முதியோர் இல்லத்தில் ஒரு தாயின் கண்ணீர்:- மகனே! நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில்....... நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில்........

கருவறை !

பிஞ்சுப் பாதங்கள் கொஞ்சி விளையாடும் சுகமான சிறை - கருவறை !

mercredi 27 octobre 2010

உள்ள்வரை

கண்ணீர் வரலாம்
கண்கள் உள்ள்வரை
கவலைகள் வரலாம்
காலங்கள் உள்ளவரை
கண்ணீரானாலும்
கவலைகளானாலும்
நிச்சயம்ஓர் நாள்
மறையலாம்.
நம்பிக்கையாய்
நடைபோட்டால்.....!

அழகு !

நிலவால் இரவுக்கு அழகு !

இரவால் நிலவுக்கு அழகு !

இரண்டும் சேர்ந்து வானத்திற்கு அழகு !
...

தாமரையால் தண்ணீருக்கு அழகு !

தண்ணீரால் தாமரைக்கு அழகு !
...
இரண்டும் சோந்து தடாகத்திற்கு அழகு !

அதுபோல நல் மாணவரால் ஆசிரியருக்கு அழகு !
நல்லாசிரியரால் மாணவருக்கு அழகு !

இருவராலும் பாடசாலைக்கு அழகு !

நீ

பிரியமுடன் காதலித்தேன்,

பிரிந்து நீ செல்வதற்கா..?

அனல்

என்னை
அலையவிட்டு சென்றவளே...!
அலையடிக்கும் மனசிக்குள்ளே
உன் நினைவால்
அனல் வந்து வீசுதடி .....

மறு ஜென்மம்

மணம் முடித்து சென்றிருந்தால்

மறைந்திருந்து பார்த்திருப்பேன்
மரணித்து சென்று விட்டாய்
மறு ஜென்மம் காத்திருப்பேன்......

mardi 26 octobre 2010

அம்மா ..

கருவில் உயிர் கொடுத்து ...
உயிருக்கு உருவம் கொடுத்து ..
உருவத்துக்குஉன் உதிரும் கொடுத்து ...
என்னை உருவாகியவள் நீ ..
படைத்ததும் நீயே
என்னை காத்தவளும் நீயே ..
இல்லாத கடவுளை நான் எதற்கு வழிபட போகிறேன் ...
அம்மா ..
உன்னை என் கண்முன் வைத்து கொண்டு
 .......