முகப்பு

vendredi 22 octobre 2010

கர்வம்

பெண்னே
உன்வீட்டு விடிவிளக்குக்கு கூட
கர்வம் அதிகம் தான்........நீ
உறங்கும் அழகை
ஒயாது பார்ப்பதால்

காதல்


கண் அசைவில்
வருவதல்ல காதல்
காலம் முழுவதும்
வருவது தான் காதல்
உறக்கம் இழப்பதல்ல காதல்
உறுதியாய் இருப்பதே காதல்
அழகில் மலர்வதல்ல காதல்
அன்பால் பூப்பதே கா......ல் ...

தடுமாற்றம்.......

இரண்டு மலர்கள் இருக்க
எந்த மலரை மொய்ப்பது
பூவையா......?பூ வைத்த
பூ வையரையா...?தடுமாற்றம்.......எனக்கல்ல....வண்டுக்கு...

இழப்பு.

சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு.
அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

**************************************************

உன்னை மறக்க...

உன் அழகை வர்ணிக்க
கவிதைகள் வரைந்தேன்
உன் திறமையை வர்ணிக்க
கதைகள் எழுதினேன்
உன் நினைவுகளுக்காக
தூக்கத்தையிழந்தேன்
உன்னை மறக்க...நான் என்ன செய்ய?

***********************

முடியாதா?

அவள் முடிவை
இல்லையென்று முடித்த
பின்னரும் முயற்சிக்கிறது
முடியாதா? என்று,
**********************

காலம்

உயிரில் கலந்துவிட்ட
உணர்வுகளை போல
உள்ளம் முழுதும்
உன் நினைவுகள்..!
உள்ளுக்குள் ரணமும்
உதட்டில் புன்னகையுமாய்
உலா வருகிறேன் நான்...!
காலம் இயக்கும்
வாழ்வெனும் வண்ண நாடக்கத்திலே..
வண்ணமிழந்த வான்வில்லின்
வேடமா எனக்கு.....?

********************** 

வாழ்க்கை.....

நண்பா
நீ தூங்குவது தவறில்லை
எப்போது எழுந்திருக்கிறாய்
என்பதே முக்கியம்
என்ன வாழ்க்கை வாழ்ந்தாய்
என்பதல்ல உயர்வு
எப்படி வாழ்ந்தாய்
என்பதே சிறப்பு...

******************

விடிவிளக்குக்கு.....

பெண்னே
உன்வீட்டு விடிவிளக்குக்கு கூட
கர்வம் அதிகம் தான்........நீ
உறங்கும் அழகை
ஒயாது பார்ப்பதால்.....

**********************

இதய குடத்தில்.......

என்னவளே
உன்னை நான் பார்க்க நினைக்கையில்
பகலாய்...
உன்னுடன் பேச நினைக்கையில்
நிலவாய்...
உன்னுடன் உறங்க நினைக்கையில்
கனவாய்.....
உன்னை நான் தொட நினைக்கையில்
தென்றலாக மாறுகிறாய்
என் காலமெல்லாம் நீ
வருவாயா?
என் இல்லத்தரசியாய்......


*************************



அன்பே
என் கவிதை வரிகள்
வசீகரமானது  உணமையானால்
எனது முயற்சி
மகுடம் சூட்டியது உண்மையானால்
என் இதயம் உன்னால்
ஒளிபெற்றது உண்மையானால்
நீ மட்டும் போதும்
என் இதயத்துக்கு
நினைத்ததெல்லாம் சாதிக்க

-------------------------



என் இனிய கண்ணே
உன் நினைவலைகள்
என் இதய குடத்தில்
நிரம்பி வழிகிறது
அதன் மிச்சம் தான்
குளத்தில் விழுந்ததால்
தாமரையாக மலர்கிறது
காற்றுடன் கலந்ததால
தென்றல் ஆகிறது
காகிதத்தில் விழுந்ததால்
கவிதையாகிறது!!!!!!!!!


***********************


நேற்றைய நினைத்தால்
கவலை பிறக்கும்
இன்றைய நினைத்தால்
இன்பம் சுரக்கும்
நாளைய நினைத்தால்
நடுக்கம் கொடுக்கும்
நேற்றைய இறப்பையும்
நாளைய பிறப்பையும் விட
நமக்குத் தேவையெல்லாம்
நட்பு வாழ்க்கை தானே.....
***********************

வாசித்த கவிதைகளில்...

பாடும் குயிலோ
அவள் மொழி
ஆடும் மயிலோ
அவளின் நடை
சிரிக்கும் ஆறோ
அவளது பேச்சு
சிங்கார மீனோ
அவள் கண் வீச்சு
பூக்களின் குத்தகையோ
அவளது புன்னகை
அவள்
இளமைத் தடாகத்தில்
நீர்க்குமிழியோ
என் இதயம்...
***************

உயிரே
உன்னோடு நானில்லை
உன் நினைவோடு நானுண்டு
உன் கண்களில் நானில்லை
என் கனவுகளில் நீயுண்டு
நீ உயிர் வாழும் வரை
உன் உறவு வேரொருவனோடு
நான் உயிர் வாழும் வரை
என் உறவு உன்னோடு
*************************
உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வைத்து நீ உன்னை மதிப்பிடுகிறாய் ஆனால் மற்றவர்கள் நீ செய்ததை வைத்து உன்னை மதிப்பிடுகிறார்கள்.
ஒரு மனிதனுடைய கால்கள் நாட்டில் ஊன்றியிருக்க வேண்டும் ஆனால் கண்கள் உலகத்தை ஆராய வேண்டும்.

jeudi 21 octobre 2010

மகிழ்ச்சியில் நீ இருக்கையில் உன்னுடன் சிரிக்க ஓராயிரம் உறவுகள் வரும் .. துன்பத்தில் நீ அழுகையில் உன்னுடன் அழ உன் நிழல் மட்டுமே வரும் ..


என்னை செதுக்கிய உளிகளை விட
என்னை உடைத்த உளிகள் அதிகம்
என்னை உசுப்பிய சம்பவங்களை விட
என்னை நசுக்கிய சம்பவங்கள் மிகுதி
நேற்றைய எனது தன்னம்பிக்கைதான்
இன்று எனது வெற்றிகள்.
உள்ளத்தால் உறவாடும்
என் இனிய நண்பர்கள்
அனைவருக்கும்
என்  வணக்கங்கள்..
இனிய பொழுதுகள்
இன்பமாய் அமையட்டும்.
புகழ் எதிர்பார்க்காதது நட்பு, சுயநலம் தெரியாதது நட்பு, தலைக்கனம் இல்லாதது நட்பு