முகப்பு

dimanche 29 octobre 2017

thenam


alla


thapu


selar


yerum


dimanche 22 octobre 2017

நமது அறியாமையா....???



எவ்வளவு தான் நன்றாக பழகினாலும் ஒரு சிலரின் உண்மை குணம் சில சந்தர்ப்பங்களில் தான் நமக்கு தெரிகிறது.....
இவ்வளவு நாட்கள் அவர்களின் உண்மை குணத்தை மறைத்து வைத்திருந்தது அவர்களின் திறமையா...? அல்லது அறியாமல் இருந்தது நமது அறியாமையா....???


வாழும் வரை


உன்னை நேசிக்கும் இதயத்தை, சாகும் வரை மறக்காதே...
உன்னை மறந்த இதயத்தை, வாழும் வரை நினைக்காதே....


தெரிவதில்லை



ஒவ்வொருவருக்கும் மற்றவரின் குறைகள் "பளிச்"சென்று தெரிகிறது.
ஆனால்... அவரவரின் குறைகள்
மங்கலாகக் கூடத்தெரிவதில்லை....

அனுபவ பாடம்.....


அவமானம், தோல்வி, வறுமை இவை எல்லாம்
நம்மை நல்ல சிலையாக மாற்றும் சிற்பிகள்...
அதனால், அவற்றை எண்ணி வருந்தாதீர்கள்.. இது தான் அனுபவ பாடம்.....

dimanche 10 septembre 2017

mm


பிறர் நலம் நாடும்



பணத்தை வைத்து வெற்றியை எடை போடாதீர்கள். பிறர் நலம் நாடும் குணம், சந்தோஷம், செழிப்பு போன்றவையும் வெற்றிக்கு அவசியமாகும். ஆனாலும் பணத்திற்கும் வெற்றிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதையும் மறுக்க இயலாது.
ஆனால் இந்த உலகம் பணத்தையே பெரிதாக எண்ணுகிறது. பணம் இல்லாத மனிதனை குப்பையாக தூக்கி வீசிவிடுகிறது. அறிவாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இடம் இதுவாகும்.--சொளந்தா

வாய்ப்பு



இந்த உலகில் எந்த உத்தரவாதமும் கிடையாது, வாய்ப்பு வரும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பழக்கம்



எல்லாவற்றையும் தொடங்குவது பலரது பழக்கம் ஒன்றை தொடங்கி ஒழுங்காக முடிக்கத் தெரியாதவனே பலதை புதிதுபுதிதாக தொடங்கி எதையும் சரிவர செய்ய முடியாது இறுதியில் தோல்வியடைவார்கள். செய்து முடிக்கத் தெரியாதவன் தலைவன் இல்லை. முடிவில்லாத நாடகத்தை யாரும் பார்க்கமாட்டார்கள்... சொளந்தா

vendredi 18 août 2017

நம் பலமே தனி!!!



நீங்கள்
ஒரு கல்லை எடுத்து
நாயை பார்த்து அடியுங்கள், அந்த நாய் பயந்து ஓடிவிடும்...

அதே கல்லை கொண்டு தேன் கூட்டில் உள்ள ஈக்களின் மீது அடியுங்கள், உங்களை
ஒரு கை பார்த்து விடும்...

தேனீக்களை விட வலிமையானது
நாய் தானே?

அப்படியானால்
நாய் ஏன் பயந்து ஓடியது?

தேனீக்கள் ஏன்,
நம்மை ஓட வைத்தது?

காரணம் நாய் தனியாகவும்,
தேனீக்கள் கூட்டாக இருந்ததால்...!

நாம் எவ்வளவு தான் சக்திவாய்ந்த தனிமனிதனாக
இருந்தாலும்,

ஒற்றுமையாக இருந்தால் நம் பலமே தனி!!!

வலி



என்னை காயபடுத்திய எந்தவொரு வலியையும் பிறருக்கு நான் தந்துவிடக் கூடாது என்றே விரும்புகிறேன்.....

போதும்



சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்

நம்பிக்கை



வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது.
நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது.
ஒவ்வொரு மனிதனின் கையிலும்  அழகான வாழ்க்கை இருக்கிறது.
அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில் தான் தோன்ற மறுக்கிறது.

மற்றவர்களாக அல்ல.



மற்றவர்களைப்பார்த்து அவர்களைப்போல் வாழமுடியவில்லையே என்று நீ வருந்துகிறாயா? நீ.... நீயாக வாழத்தான் பிறந்திருக்கிறாய்... மற்றவர்களாக அல்ல.