முகப்பு

samedi 19 mars 2016

உண்மை


ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலர் வந்து வேண்டிக் கொள்கின்றனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, ’இறைவா... நான் தினமும் உன்னை வணங்குகிறேன்' என்று சொல்கின்றனர்... இதில் உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அந்த சந்தேகம்' நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன.
அப்போது இறைவன், ’தேவதைகளே! இந்த ஊரில் பலரையும் போய் சந்தித்து யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்' என்றார்.
உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.
...
ஒருவன், ’நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்,' என்றான்.
அடுத்தவன், /நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்,' என்றான்.
மற்றவன், ’நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்,' என்றான்.
இன்னொருவன், ’எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்,' என்றான்.
இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, ’இதில் யார் உண்மையான பக்தன்' எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.
அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, ’அப்பனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது.
அதற்கு அவன், ’எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.
தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.
எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.
’தேவனே... உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?' என்று கேட்டன.
’கண்டுபிடித்துவிட்டேன்!' என்றார் கடவுள்.
’யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?' என்று கேட்டன தேவதை கள்.
கடவுள் புன்னகைத்தபடியே, ’இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே... உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,' என்றார்.
அப்போது தான் உண்மை புரிந்தது தேவதைகளுக்கு.

samedi 12 mars 2016

குற்ற_உணர்வு

படித்ததில் வலித்தது

பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின்
 ஒரு மானை வேட்டையாடி பிடித்து இறையை துண்டிக்க ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்டது.

இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய
 சிங்கம் உடனே தாயின் வயிற்றிலிருந்து
 வெளியேறிய
 குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத
 பிரயத்தனம் மேற்கொண்டது.

இறுதியில் நீண்ட நேர
 முயற்ச்சி பலனளிக்காது குட்டி இறக்க
 நேரிட்டது. இதைத் தாங்க முடியாத
 சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது.

சிறிது நேரத்தின் பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக்
 கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது சிங்கம் இறந்து கிடந்தது....
 #குற்ற_உணர்வு

மனிதர்களிடம் தொலைந்து போன கருணை..
‎இன்று‬ விலங்குகளிடம்

படித்ததில் வலித்தது

vendredi 11 mars 2016

இதுதான் விதி என்பதோ


இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாகவளர்த்துவந்தாள்.

ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.

அதை பரிசோதித்த மருத்துவர்
இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.

உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,
இந்த கிளியை எப்படியாவதுக்காப்பாற்றுங்கள்.
கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.

இந்திரன்,
கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...
ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?

அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு
பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..

விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,

இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை.

உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.

நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு
மஹாவிஷ்ணுவிடம்சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.

மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான்.

ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது.

அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.

வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு.

விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.

உயிர்களையெடுக்கும்பொறுப்பை நான்
எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.

வாருங்கள் ....நாம் அனைவரும்சென்று எமதர்மனிடம்கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.

தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார்.

விஷயம் முழுவதையும்கேட்ட அவர் ,
ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில் ,
எந்தசூழ்நிலையில் ,
என்னகார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.

அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்.

வாருங்கள் அந்த அறைக்குச்சென்று
கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்.

இப்படியாக
இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது.

உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.

அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.

அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....

அதில்,,,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,

இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ,
அப்போது இந்த கிளி இறந்துவிடும்..... என்று எழுதப்பட்டிருந்தது.

இதுதான் விதி என்பதோ!

lundi 7 mars 2016

குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு...

குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு...

குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை. - சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்)

சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம்.

குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான்

அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது.

படிப்பில் முழுத் திறனையும் வெளிப் படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும்.

எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமை யுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன. ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக் கிறது. தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக் கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும்.

அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும்போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது (பிரெய்ன் ஸ்டிமுலேசன்). அப்பாவுடன் நேரம் செல வழிக்கும் குழந்தைகளின் திறன் மேம்படுவது உலகளவில் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக் கிறது.

தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை - ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது.

அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை. அம்மாவோடு அப்பாவும் சேர்ந்து வளர்த்த குழந்தைக்கு எவ்வளவு சிக்கலான சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருக்கும்.

படிப்பு, விளை யாட்டு, உறவு, சமூகம் என எல்லா இடத்திலும் தானாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.

எது சரி, தவறு என்பதை உணர்ந்து செயல்படும் பக்குவத்தை அவர்களிடம் பார்க்க முடியும். தேடல் வேட்கையுடன் இருப்பார்கள். கோடிக்கணக்கான முகங்களுக்கு மத்தியில் தங்களுக்கான தனி அடையாளத்தை காட்ட எப்போதும் குழந்தைகள் விரும்புவார்கள். அதற்கு அவர்களுக்குத் தேவை அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பற்றிக் கொண்டு நடக்கிற சந்தோஷம்தான் - தீர்க்கமாகச் சொல்கிறார் மனநல மருத்துவர் மீனாட்சி..

mercredi 2 mars 2016

உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய பதிவு

உறவு முறைகள் ....பற்றி ....
மிகவும் சிந்திக்கவேண்டிய பதிவு

----------
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா,
பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,
தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,
பெரியப்பா பையன்,
பெரியப்பா பொண்ணு,
அத்தை பையன்,
அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்
காரணம்,
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!
அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?
பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!
திருமணத்தின் போது அரசாணைக்கால் நட
எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை, குழந்தைக்கு மோட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?
கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,
இனி யார் போவார்?
ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்
ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்
அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,
அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!
உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !
உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!
சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான் வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!
கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!
ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!
பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!
ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!
கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,
வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?

வணக்கம்.

வணக்கம்.
தமிழர்கள் சொல்லும் ‘வணக்கம்’ பல்தரப்பட்ட பொருளினை உணர்த்துகின்றது. இறைவன் முதற்கொண்டு எளிய மாந்தர் வரையிலாக எல்லாரும் வணக்கம் என்னும் சொல்லுக்கு ஏற்புடையவராக உள்ளனர். இத்தகைய உயர்வுமிக்க கருத்தின் குறியீடாக வணக்கம் அமைந்துள்ளது.
இன்றைய நாளில் இச்சொல்லின் பயன்பாட்டில் பிற இனத்தவர் பண்பாடு கலந்துவிட்டது. காலையில் சந்திக்கும்போது ‘காலை வணக்கம்’, மாலை நேரச் சந்திப்பின்போது ‘மாலை வணக்கம்’, பின்னர் இரவின்போது ‘இரவு வணக்கம்’ எனச் சொல்லும் வழக்கத்தைத் தமிழர்கள் கொண்டுள்ளனர். இவ்வாறு காலத்தை முன் வைத்து வணக்கம் சொல்லும் மரபு தமிழர்களுடையதன்று. இஃது ஆங்கிலேயரின் மரபாகும். ‘குட் மார்னிங்’ (Good morning), குட் ஆஃப்டர்னூன் (Good afternoon), குட் ஈவினிங் (Good evening) எனச் சொல்வது ஆங்கிலேயரின் வழக்கமாகும். இதனையே தமிழர்களும் பின்பற்றுகின்றனர். தமிழரின் பண்பாட்டுடன் ஆங்கிலேயர் பண்பாடு கலப்புற்றதால் ஏற்பட்ட விளைவு இது.
“இன்றைய காலைப்பொழுது நற்பொழுதாக அமையட்டும்”, என்னும் கருத்தினையே ‘காலை வணக்கம்’ என்னும் தொடர் உணர்த்துகின்றது. இத்தகைய வணக்கம் குறிப்பிட்ட ஓர் எல்லையைக் கொண்ட பொருளினை மட்டுமே உணர்த்துகின்றது. ஆனால், தமிழர்களின் வணக்கம் பரந்துபட்ட நிலையினைக் கொண்டிருக்கின்றது. தமிழர்களின் தனிப்பெரும் சிந்தனையும் பண்பாடும் சிதைந்துள்ளது. குறிப்பிட்ட காலத்தினை முன்னிட்டு வணக்கம் சொல்வது தமிழர் மரபன்று. ‘நீடுழி வாழ்க’, ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’, என வாழ்த்துவது தமிழர் மரபு. தமிழர்களின் வாழ்வியல் மரபுக்கு முரணாக ‘காலை வணக்கம்’, ‘மாலை வணக்கம்’ போன்ற தொடர்கள் அமைந்துள்ளன.
பிறருக்கு வணக்கம் சொல்லும்போது மனம் நிறைவு கொள்கின்றது. ஏற்றத் தாழ்வுகள் ஏதுமின்றி சொல்லப்படும் வணக்கத்தால் மனிதன் பண்பாளனாக ஆகின்றான். எளிய தமிழர் வாழ்வில் வணக்கம் தொடர்பான சில பழமொழிகள் உள்ளன. ‘வணங்கின புல் பிழைக்கும்’ என்பது தமிழ்ப் பழமொழிகளுள் ஒன்றாகும். இப்பழமொழியில் கையாளப்பட்டுள்ள வணக்கம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை உணர்த்துகின்றது. விட்டுக் கொடுத்து வாழ்வது மிக உயர்ந்த பண்பாட்டுக் கூறாகும்.
பகைவரும் நமக்கு வணக்கம் சொல்வர் என்னும் அரிய தகவலைத் தருகின்றது திருக்குறள். வில்லின் வணக்கம் என்பது தீமை செய்திடும். வில்லின் தன்மை வெளிப்படையாகத் தெரியக்கூடியது. ஆனால், பகைவரின் சொல் வணக்கம் அத்தகையதன்று. பகைவரின் வணக்கம் நன்மையளிக்க வல்லது என நம்பிடக்கூடாது. இக்கூற்றினைக் கீழுள்ள திருக்குறள் எடுத்துரைக்கின்றது.
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான் (குறள் 827)
அரசன் மக்களிடம் சொல்லும் வணக்கமும் மக்கள் அரசனிடம் சொல்லும் வணக்கமும் வேறுபட்ட பொருளினை உணர்த்துகின்றன. “என்னுடைய ஆட்சியில் நற்பேறு பெற்று வாழ்வாயாக”, எனும் வாழ்த்தின் குறியீடாக அரசனின் வணக்கம் அமைந்துள்ளது. “உங்கள் ஆட்சிக்கு உட்பட்ட இந்நாட்டில் நல்வாழ்வு பெற்றுள்ளமைக்காக என் நன்றியினைப் புலப்படுத்துகின்றேன்”, என்னும் பொருளில் மக்களின் வணக்கம் அமைந்துள்ளது.
தமிழர் வாழ்வியலில் ‘வணக்கம்’ எனும் சொல் குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டுமே பயன்படுத்துவதன்று. அரசன் முதல் ஆண்டி வரை எல்லாருக்கும் உரிய பொதுச்சொல்லாக வணக்கம் விளங்குகின்றது. 

mattaver


josanai


monam


vendredi 19 février 2016

nilai


moli


koli


thanimai


illa


mlo


urimai


vali


illa