முகப்பு

lundi 15 septembre 2014

அன்பின் அணைப்பு...



மெத்தை மேல் 
படுத்து உறங்கினாலும் 
அம்மாவின் சேலையில் 
தொட்டில் கட்டி ஆடியது 
ஆயுசுக்கும் மறையாது..

கொஞ்ச கொஞ்ச
நெஞ்சமெல்லாம் 
இன்பத்தேன் 
நிறைந்திடுமே .... 
தாய்மையின் 
பாசமொழி ... 
இறுகிய 
அன்பின் அணைப்பு...

பிடிவாதக்காரர்களையும், முட்டாள்களையும் திருத்த நேர்வழி பயன்படாது.



ஒரு நாட்டை ஆண்ட அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.

தலைமை மருத்துவன் "மன்னா! இதற்கு மருந்தே கிடையாது" என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.

ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.

மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர். "வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா" என்று கூறினர்.

நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை.

அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் "என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்" என்று கூறினான்.

வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.

அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். "மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்" என்றான்.

மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "இப்போதே அந்தப்புரத்திற்குப் போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்" என்று கிளம்பினான்.

அப்போது மருத்துவன் "மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!" என்றான்.

முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான். மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள்.

அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. "குரங்கை நினைக்கக் கூடாது" என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை.

மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.

ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது.

பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.

நீதி : பிடிவாதக்காரர்களையும், முட்டாள்களையும் திருத்த நேர்வழி பயன்படாது.

samedi 13 septembre 2014

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...



1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்

2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ
தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை 
ஆரம்பிக்கிறது.

5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட
மோசமான சாபமும் இல்லை.

7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு
வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை
உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.

10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது.
ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு
பெற்று விட்டான் என்பதே.

12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி
விடாதீர்கள்.

13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக்
கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப்
பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு
இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.

14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன்
பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின்
காவலன்.

15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும்,
கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.

16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு
எல்லாமே எளிதாகத் தோன்றும்.

17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும்
கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த
சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன்
ஆவான்.

19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல
பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ
விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

kuz mwptpj;jy;


dimanche 7 septembre 2014


s


s


s


s



கலர் பிலிமை கண்டு பிடித்த ஈஸ்ட்மேன்


கலர் பிலிமை கண்டு பிடித்த ஈஸ்ட்மேன்
திரைப்படங்களில் ஈஸ்ட்மேன் கலர் என்று போடப்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள். கமேராவில் கோடாக் பிலிம் என்று போடப்பட்டிருப்பதையும் பார்ப்பீர்கள். இவற்றைக் கண்டு பிடித்தவர்தான் ஈஸ்ட்மேன்.

1854 ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் உள்ள வாட்டர் வில்லா என்ற இடத்தில் யூலை 12ம் திகதி இவர் பிறந்தார். அக்காலத்தில் புகைப்படம் எடுப்பது பெரும் செலவு கொண்ட விடயமாக இருந்தது. இதைக் குறைத்து எளிமையாக படம் எடுக்கும் வழியை கண்டறிவதாக சபதமெடுத்தார். இதன் பயனாக 1884ல் அவர் பிலிம் ரோலை கண்டு பிடித்தார். தொடர்ந்து 1888ல் எளிதாக இயங்கும் கமேராவை கண்டு பிடித்தார். அதற்கு அவர் வைத்த பெயர்தான் கோடாக். 1897 ல் பாக்கட்டில் வைத்துச் செல்லும் கமேராவை கண்டு பிடித்தார். 1898 ல் மடித்து செல்லும் கமேராவை கண்டு பிடித்தார். 1928 ல் சினிமாவிற்கான கலர் பிலிமை அறிமுகம் செய்தார். கமேராவில் முதன் முதலில் பிளாஸ் பயன்படுத்தியவரும் இவர்தான். பெரும் புகழும் பணமும் சம்பாதித்த இவர்தான் தொழிலாளிகளுக்கு இலாபத்தில் பங்கு கொடுத்தவராகும்.
இவருடைய வாழ்க்கையில் நாம் காணும் உண்மை சபதம்தான். மற்றவரை அழிக்க வேண்டும் என்று சபதமெடுக்காமல், ஆக்க சக்திக்காக சபதமெடுத்தார் என்பதுதான். சபதம் எடுங்கள் நல்ல செயல்களுக்காக மட்டும். இறைவன் உங்களுக்கு ஈஸ்ட்மேனுக்கு கொடுத்தது போல வெற்றியைத் தருவார்.

மரணத்தைச் சந்திக்கின்ற துணிச்சல்



ஒருவன் தின்னாமல் குடியாமல் பணத்தைச் சேர்த்து குவித்தான். அவன் எதிர்பார்த்த பணம் சேர்ந்ததும் இனி செலவழித்து மகிழ்ச்சியாக இருக்கப்போவதாக துள்ளிக் குதித்தான். அப்போது அவன் முன் தோன்றிய கடவுள் முட்டாளே நீ இறப்பதற்கு மேலும் ஒரு மணி நேரமே இருக்கிறது என்றார்.
வாழ்க்கையைப் பயனுள்ள வகையில் கழித்தால் மரணத்தைச் சந்திக்கின்ற துணிச்சல் ஏற்படும்.

சாமுவேல் கோல்ட



சாமுவேல் கோல்ட
தனது 17 வது வயதிலேயே சிறிய இரக துப்பாக்கியை கண்டு பிடித்தவரே சாமுவேல் கோல்ட் ஆகும். இவர் 1814ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக 16வயதிலேயே வேலைக்கு சென்றார். இவர் மரக்கட்டையில் செய்த சிறிய துப்பாக்கியை கொல்ல பட்டறையில் கொடுத்து வடிவமைத்தார். அதன் பின்னர் அமெரிக்க இராணுவம் இவருடைய துப்பாக்கிகளை வாங்க ஒப்பந்தம் எழுதியது. திடீரென உலகின் பிரபல தொழிலதிபராக உயர்வடைந்தார். அமெரிக்கா – மெக்சிக்கன் யுத்தத்தில் அமெரிக்காவின் வெற்றிக்கு இவருடைய துப்பாக்கிகளே உதவின. புதிய சிந்தனை இருந்தால் உலகத்தை வெல்லும் ஆயுதத்தை தனி மனிதனே உருவாக்கலாம் என்பதற்கு இவருடைய கோல்ட் என்னும் பெயர் கொண்ட துப்பாக்கிகளே காரணமாகும். ஆட்களோ படையணியோ ஆயுதமல்ல அறிவே ஆயுதம் என்பதற்கு கோலட் சிறந்த உதாரணமானவர்.

samedi 6 septembre 2014

ss


mother


சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


பிரச்சனை வரும்போது அந்தப் பிரச்சனையில் மூழ்கிவிடக் கூடாது. பிரச்சனை ஏன் ஏற்பட்டது, எதனால் ஏற்பட்டது, இதன் விளைவுகள் என்ன ? இது தேவையா ? என்று பிரச்சனைக்கு வெளியே நின்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நீங்களே முடிவு செய்ய வேண்டும்


இருபது வயதில் பிணமாகி எழுபது வயதில் புதைக்கப்பட்டான் என்று கருதத்தக்க சுவாரஸ்யமற்ற வாழ்க்கை வேண்டுமா அல்லது சவால்களை எதிர் கொள்ளும் சாதனை வாழ்க்கை வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும்.

வெற்றியின் மந்திரம் – கஷ்டப்பட்டு முயற்சி செய்



ஒரு நாய் தன்னால்தான் வேகமாக ஓட முடியும் என்று பெருமையாக நினைத்து வந்தது. ஒரு நாள் அது முயல் ஒன்றைத் துரத்தியது. அப்போது அதனால் முயலைப் பிடிக்க முடியவில்லை. மற்ற நாய்கள் அதைக் கேலி செய்தன. அப்போது நாய் கூறியது, மறவாதீர்கள் முயல் உயிருக்குப் பயந்து ஓடியது, நானோ அதைத் துரத்தும் வேடிக்கைக்காகவே ஓடினேன் என்றது. ஆனால் இதனுடைய முதன்மை விடயம் சிரத்தையாகும். உயிரைப் பணயம் வைத்து போராடியதால் முயல் தப்பியது.
வெற்றியின் மந்திரம் – கஷ்டப்பட்டு முயற்சி செய் – என்பதுதான்

lundi 1 septembre 2014

வெற்றி வாகை சூட வாழ்த்துகள்


ஈழத் தமிழச்சியே-உன்னை
ஈன்ற நாடு பெருமை
கொள்ளுது. 
எமது உறவு நீ என்று
சொல்வதில்
தமிழனாகிய நாமும்
பெருமை கொள்கிறோம்.
இறை அருள் உனக்கு பூரணமாக கிடைக்க பெற்று வெற்றி வாகை சூட வாழ்த்துகள் super singer junior jessica