முகப்பு

jeudi 22 février 2018

vanakkam


kannade


dimanche 18 février 2018

valkai


mudevu


ampurathuni


natpu


vanakkam


maraga


kopam


anpu


anpu


nampe


vendredi 16 février 2018

uravu


idayam


vanakkam


mun


raham


manam


malarr


mudeyethu


kathal


valii


mercredi 7 février 2018

athiham


ஐந்தின் ரகசியங்கள்!



ஐந்தின் ரகசியங்கள்!
• பஞ்சலோகம் – இரும்பு, பொன், வெள்ளி, செம்பு, ஈயம்.

பஞ்சவர்ணம் – கருப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை.

பஞ்சவாசம் – ஏலம், இலவங்கம், கற்பூரம், திப்பிலி, ஜாதிக்காய்.

பஞ்சரத்தினம் – பொன், சுகந்தி, மரகதம்,
• மாணிக்கம், முத்து.

பஞ்சபூதம் – ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு.

பஞ்சபாண்டவர் – தர்மர், பீமன், அர்ஜுனன்,
நகுலன், சகாதேவன்.

ஐவகை நிலங்கள் – குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல், பாலை.

ஐம்பெருங் குழு – மந்திரியர், புரோகிதர்,
சேனாதிபதியர், தூதர், சாரணர்.

ஐம்பெருங்காப்பியம் – சிலப்பதிகாரம்,
மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

ஐஞ்சிறு காப்பியங்கள் – நாக குமார காவியம், யசோதர காவியம், உதயன குமார காவியம்,நீலகேசி, சூளாமணி.

“ஆணவம் ஆயுளை குறைக்கும்…”



நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
“ஆணவம் ஆயுளை குறைக்கும்…”

வாழ்க்கை வாழ்வதற்கே!


மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,
*
மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.
*
அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.
*
பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
*
நண்பர்களிடம் அளவளாவு.
*
நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி;
*
இறை பக்தி கொண்டு; குடும்பத்தினர்,
நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்.
*
இன்னும்; இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள்;
சுலபமாக ஓடிவிடும்.
*
வாழ்வை கண்டு களி! ரசனையோடு வாழ்!
வாழ்க்கை வாழ்வதற்கே!

lundi 29 janvier 2018

மறுக்க முடியாத உண்மை.

மறுக்க முடியாத உண்மை.

விட்டொழியுங்கள்.



ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.

மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்பு குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .

தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை, எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு, மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.

"ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.

அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.

சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார். குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".

அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது. அட... நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா...

குரங்குக்கு உயிர் வந்தது. அவரை நன்றியுடன் பார்த்தது "இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

விட்டொழியுங்கள்.

சந்தோசமாய் இருங்கள்,

jeudi 4 janvier 2018

பிணைப்பை வலுவாக்கும்.



நீங்கள் ஏதாவது தவறு செய்தால் குழந்தையிடம் மன்னிப்புக் கேட்கலாம்.. தவறில்லை. தப்பு செய்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனும் பழக்கத்தை அது குழந்தைகளிடம் ஆழமாகப் பதித்து விடும்.
 குழந்தைகளுடன் குடும்பமாக அவ்வப்போது வெளியே சென்று வருவது, பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பை வலுவாக்கும்.                             

குழந்தை



உங்களுக்குப் பிடித்த எல்லாமே உங்கள் குழந்தைக்கும் பிடிக்க வேண்டும் என்பதில்லை. எனவே, குழந்தைகளின் ரசனைக்கும் மதிப்பு கொடுங்கள்.
  குழந்தைகள் உங்களை எரிச்சல் படுத்தும். மதிக்காதது போல் தோன்றும். உங்களுக்குப் பிடிக்காததைச் செய்யும். பொறுமை ரொம்ப முக்கியம். அவர்கள் குழந்தைகள்தானே?! 

ஆனந்தமான நாள்



தினமும் காலையில் ஒரு ஆனந்தமான நாள் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்று விழித்துக் கொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அன்றைய நாளின் சந்தோஷங்களை அசைபோடுங்கள். யாரையேனும் காயப் படுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென முடிவெடுங்கள்.

காலம்



கவலைகள் இல்லாத மனிதன் இல்லை. அவற்றையும் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். காலம், கவலைகளை ஆற்றிவிடும். 

samedi 30 décembre 2017

மகிழ்ச்சி



மனசுக்கு பிடித்த ஒரு சொந்தம் இருக்கும் வரை இதயத்தில் மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும்

மகிழ்வான வாழ்வை



மகிழ்வான வாழ்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமெனில், நாம் செய்ய வேண்டியது ஒன்றே.., நமது குறைகளை ஏற்றுக் கொள்ளவதும், உணர்ந்து கொள்வதுமே..

"மனுஷங்க"



பணத்துக்காக மட்டுமே
மதிக்கிற பல உறவுகள்
வேண்டாம் எனக்கு,
என் மனசுக்காக மட்டுமே
என்னை மதிக்கிற நாலு...
"மனுஷங்க" இருந்தாலே
போதும்!

அன்பு



அன்பு காட்டுவது என்றால் உண்மையாய் அன்பு காட்டுங்கள் வெறுப்பது என்றால் வெறுத்து விடுங்கள் இரண்டையும் கலந்து செய்யாதீர்கள்

lundi 25 décembre 2017

கிருஸ்துமஸ் நல்வாழ்த்து



வானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் அனைவரின் மனங்களை வென்றார் பரமபிதா இயேசு பெருமான் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்