முகப்பு

vendredi 7 juillet 2017

தீர்க_சுமங்கலி_பவா ...!



தீர்க_சுமங்கலி_பவா ...!
அறிந்துகொள்ளுங்கள் !!.
🌼 தீர்க சுமங்கலி பவா ...!
என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம்
5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
🌼 திருமணத்தில் ஒன்று,
🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,
🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,
🌼 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,
🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!.
இவைகள்_பற்றி_ஒரு_சிறு_விளக்கம் ;
🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.
🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.
🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.
🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.
🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.
🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.
🌼 பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும்,
புதனுக்கு ஒரு வருடமும்,
வியாழனுக்கு 12 வருடங்களும்,
வெள்ளிக்கு ஒரு வருடமும்,
சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.
🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.
🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.
🌼 ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.
🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.
🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.
🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.
🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?
🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.
🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...
அக்னி,
சூரியன்,
சந்திரன்,
வாயு,
வருணன்,
அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
அமிர்த கடேஸ்வரர்,
நவநாயகர்கள்..
சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.
🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,
🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,
🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,
🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள்.
🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.
🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.
🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.
🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.
🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.
🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.
🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.
🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்
🌼 இறையோடு இரண்டரக் கலந்து
இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு
96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.
🌼 #தீர்க_சுமங்கலி_பவா ...!
என்ற_ஆசிக்கு_மனைவி_கணவனிடம்... ஐந்து_மாங்கல்யம்_பெற_வேண்டும்!.
படித்தேன்! பகிர்ந்தேன்!! நன்றி. நன்றி..

lundi 3 juillet 2017

கடவுள்



ஒரு மனிதன் சந்தோஷமின்றி இருந்தால் அதற்குக் காரணம் அவனுடைய சொந்தத் தவறுதான். ஏனெனில் கடவுள் எல்லோரையும் சந்தோஷமாகத்தான் படைத்துள்ளார்.
சந்தோசம் என்பது நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை, என்ன செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.

வருவதில்லை.




உங்களை சந்தோஷப்படுத்திக் கொள்ளுங்கள் நீங்கள் நினைப்பதைவிட காலம் இன்னமும் குறைவாகவே இருக்கிறது.
வாழ்வை அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்கு இதுதான் நேரம். அது நாளையோ அடுத்த வருடமோ, நாம் இறந்த பின்போ வருவதில்லை.

சந்தோசம்


சந்தோசம் என்பது நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை, என்ன செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.


mercredi 21 juin 2017

வன்மம் தவிர்ப்போம் !...



ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒன்றை புரியவைக்க நினைத்தார். எல்லாரையும் அழைத்து உக்கார வைத்து, அவங்களுக்கு தன்னோட பொக்கை வாயை திறந்து காண்பித்தார்.
அவ்வளவுதான், 'வாழ்க்கைத் தத்துவம் இதுதான்'னு சொல்லி போகச் சொல்லிட்டார்.
சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஒரே ஒரு சீடன் மட்டும் வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத்தத்துவம் இருந்துதிட போகுதுன்னு குழம்பினவன், மெதுவாக குருவையே எழுப்பி கேட்டான்.
அவர் கேட்டார்.. 'என் வாய்குள்ள என்ன இர...ுந்தது?'
'நாக்கும் உள்நாக்கும் இருந்தது!'
'பல் இருந்ததா?'
'இல்லை.'
'அதுதான் வாழ்க்கை..
வன்மையானது அழியும்,
மென்மையானது வாழும்.'.........
ஆம் நண்பர்களே !......வன்மம் தவிர்ப்போம் !...மென்மையான நல்ல குணத்துடன் வாழ்வோம் !.....

மனசு சஞ்சலப்படுகிறதா?



மனசு சஞ்சலப்படுகிறதா?
ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.
புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட...்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.
ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
It will happen. It is effortless.
மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல!
இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை!


mardi 20 juin 2017

பழகிப் போகும்




இதுவும் கடந்து போகும் என்பதை விட
இதுவும் பழகிப் போகும் என்பதே
வாழ்க்கைக்கு பொருந்துகிறது..!!

anpu