முகப்பு

mercredi 1 juin 2016

விலை மதிக்க முடியாத ஓரே சொத்து


வாழ்வின் முன்னேற்றங்களுக்கு நினைவாற்றல் எவ்வளவு அவசியமோ, அதே போல் வாழ்வின் மகிழ்ச்சிக்கு ஞாபகமறதி மிக அவசியம்..!!

தன்தேவைக்காக தேனொழுகபேசிவிட்டு தேவைகள் முடிந்தபின்னே தேளினைபோல் கொட்டுகிறார்கள்,தேகமெங்கும் நஞ்சினை வைத்துக்கொண்டுள்ள சில மனித விஷஜந்துக்கள்

மனம் நிறைந்த சிரிப்பில் எல்லோரிடமும் இருப்பது... அழகு மட்டுமே !!!
என் இதயம் அழகான பூஞ்சோலை .... அதில் அழகான நட்பூக்கள் பூத்திருக்கிறது அன்புதான் இதன் பசளை

தனிமையை விரும்பிகிறேன் அது என்னை புரிந்து கொண்ட அளவிற்கு கூட மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை..

பணத்தை தேடி ஓடுகிறவன் ஒரு நாள் அதை விட வேகமா திரும்ப வருவான்.. அப்பொழுது அனுபவிக்க வாழ்க்கை மீதம் இருக்காது..!

பூக்கள் அழகானவைதான் அதன் வாழ்நாள் குறைவு ஆனால் செடிகள் அப்படி இல்லை எனவே பூக்களாக இருக்க ஆசைபடாமல் செடிகளாகஇருப்போம்
விட்டு கொடுக்கும் தன்மை நமக்கு இருந்தால் நாம் விட்டுக் கொடுத்த அனைத்தும் ஒரு நாள் நம்மை தேடி வரும்

மனசுக்கு பிடித்த ஒரு சொந்தம் இருக்கும் வரை இதயத்தில் மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும்

ஆழமான அன்பிற்கு ஆணிவேராக அமைவது கடுகளவும் சந்தேகமில்லாத நம்பிக்கை மட்டுமே.

உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு., தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் "சுயநலம்".,

வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத ஓரே சொத்து இந்த "நொடி" மட்டுமே... நற்காலை வணக்கம்

இன்பமான அழகு,இறைவனின் படைப்பே



மரியாதைக்குரியவர்கள் மனதை காயப்படுத்தும் போது தான் சொல்லொண்ணா வலி மனதில் ஏற்படுகிறது .

மெல்லினமாய் இருக்கும் பெண்கள் வல்லினமாய் வார்த்தைகள் உதிர்ப்பது ஏனோ

ஒவ்வொரு விடியலிலும் இன்றாவது நம் வாழ்வில் விடியல் வராதா என்ற ஏக்கத்துடனே விடிகிறது.. காலை வணக்கம் தோழமைகளே.

அருகில் இருப்பவருக்கோ அன்பு காட்ட தெரியவில்லை அன்பு காட்டுபவருக்கோ அருகில் வர முடியவில்லை

ருவரை கெட்டவன் என்று அவர்களே தீர்மானித்து விடுகிறார்கள் நல்லவன் என்பதற்கு மட்டும் அடுத்தடுத்து ஆதாரம் கேட்கிறார்கள்

விமர்சனங்களைப் பற்றி கவலை படாமல் உங்கள் வேலையை செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்

பென்சிலில் இருந்து பேனாவிற்கு மாறும் தருணத்தில் வாழ்க்கையில் ஒன்றையும் அழித்து எழுத முடியாது என்று உணர தொடங்கிவிடுகிறது குழந்தை!!!

கிடைக்கும் போது பெற தவறினால் தேடும்போது கிடைக்காது அன்பு...

ஒருவரை மிகவும் பிடித்து விட்டால் அவர் மீது எவ்வளவு கோபங்கள் வந்தாலும் அவர்மீதான அன்பு மட்டும் ஒருபோதும் குறைவதில்லை
1.                         
   குழந்தைகள் முன் பெற்றோர் சண்டையிடுவது மிக தவறு குழந்தைகள்      மனதில் எளிதாக பாதிப்பை ஏற்படுத்தி தவறு செய்ய தூண்டுகிறது

நட்பு எப்போதுமே சாதி மத இன வேறுபாடு என்றும் பார்ப்பது இல்லை நட்பு என்றும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும்

இயற்கையின் அழகே ஒரு இன்பமான அழகு,இறைவனின் படைப்பே இனிசைப்பாடும் அழகு...

யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள் இந்த உலகிலே மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்

போனதை மறந்து இருப்பதை மகிழ்ந்து வருவதை எதிர்கொண்டு வாழ்வதே வாழ்க்கை!

மகிழ்ச்சி



பிறரின் வேதனையில் பங்கு கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை அதில் ஏதேனும் மகிழ்ச்சி இருக்கா என்று தேடாதீர்

குழந்தையிடம் அம்மாவை பிடிக்குமா இல்ல அப்பாவை பிடிக்குமா என்று கேட்டால் யாராவது ஒருவரை சொல்லும் அதற்காக இன்னொருவரை வெறுப்பதாக அர்த்தம் இல்லை

எப்பொழுது நம்மை ஒருவருக்கு பிடிக்கவில்லை என்று தெரியுதோ அப்பவே அவர்களை விட்டு விலகிடனும் கூடவே இருந்தா நமக்கு அவமானம் மட்டும் தான் மிஞ்சும்

நம்பிக்கையை பெறுவதை விட பெற்ற நம்பிக்கையை தக்க வைத்து கொள்வதில் தான் இருக்கு நம் சாமர்த்தியம்
  
   என்னை யாருக்கும் பிடிக்கவில்லை என கவலைபட நீசந்தையில் நிற்கும் பொம்மையல்ல நீஎன்பது நீயே உன்னைஉனக்கு பிடித்தால் போதும்

மற்றவர்களை குறை கண்டுபிடிக்கும் போட்டி வச்சா எல்லாருக்கும் முதல் பரிசு கொடுக்க வேண்டி இருக்கும்.

தனிமையைப் போன்ற ஒரு கொடுமையும் இல்லை அதைப் போல் ஓர் உண்மையான நண்பனும் இல்லை