முகப்பு

mercredi 1 juin 2016

இன்பமான அழகு,இறைவனின் படைப்பே



மரியாதைக்குரியவர்கள் மனதை காயப்படுத்தும் போது தான் சொல்லொண்ணா வலி மனதில் ஏற்படுகிறது .

மெல்லினமாய் இருக்கும் பெண்கள் வல்லினமாய் வார்த்தைகள் உதிர்ப்பது ஏனோ

ஒவ்வொரு விடியலிலும் இன்றாவது நம் வாழ்வில் விடியல் வராதா என்ற ஏக்கத்துடனே விடிகிறது.. காலை வணக்கம் தோழமைகளே.

அருகில் இருப்பவருக்கோ அன்பு காட்ட தெரியவில்லை அன்பு காட்டுபவருக்கோ அருகில் வர முடியவில்லை

ருவரை கெட்டவன் என்று அவர்களே தீர்மானித்து விடுகிறார்கள் நல்லவன் என்பதற்கு மட்டும் அடுத்தடுத்து ஆதாரம் கேட்கிறார்கள்

விமர்சனங்களைப் பற்றி கவலை படாமல் உங்கள் வேலையை செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்

பென்சிலில் இருந்து பேனாவிற்கு மாறும் தருணத்தில் வாழ்க்கையில் ஒன்றையும் அழித்து எழுத முடியாது என்று உணர தொடங்கிவிடுகிறது குழந்தை!!!

கிடைக்கும் போது பெற தவறினால் தேடும்போது கிடைக்காது அன்பு...

ஒருவரை மிகவும் பிடித்து விட்டால் அவர் மீது எவ்வளவு கோபங்கள் வந்தாலும் அவர்மீதான அன்பு மட்டும் ஒருபோதும் குறைவதில்லை
1.                         
   குழந்தைகள் முன் பெற்றோர் சண்டையிடுவது மிக தவறு குழந்தைகள்      மனதில் எளிதாக பாதிப்பை ஏற்படுத்தி தவறு செய்ய தூண்டுகிறது

நட்பு எப்போதுமே சாதி மத இன வேறுபாடு என்றும் பார்ப்பது இல்லை நட்பு என்றும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும்

இயற்கையின் அழகே ஒரு இன்பமான அழகு,இறைவனின் படைப்பே இனிசைப்பாடும் அழகு...

யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள் இந்த உலகிலே மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்

போனதை மறந்து இருப்பதை மகிழ்ந்து வருவதை எதிர்கொண்டு வாழ்வதே வாழ்க்கை!

மகிழ்ச்சி



பிறரின் வேதனையில் பங்கு கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை அதில் ஏதேனும் மகிழ்ச்சி இருக்கா என்று தேடாதீர்

குழந்தையிடம் அம்மாவை பிடிக்குமா இல்ல அப்பாவை பிடிக்குமா என்று கேட்டால் யாராவது ஒருவரை சொல்லும் அதற்காக இன்னொருவரை வெறுப்பதாக அர்த்தம் இல்லை

எப்பொழுது நம்மை ஒருவருக்கு பிடிக்கவில்லை என்று தெரியுதோ அப்பவே அவர்களை விட்டு விலகிடனும் கூடவே இருந்தா நமக்கு அவமானம் மட்டும் தான் மிஞ்சும்

நம்பிக்கையை பெறுவதை விட பெற்ற நம்பிக்கையை தக்க வைத்து கொள்வதில் தான் இருக்கு நம் சாமர்த்தியம்
  
   என்னை யாருக்கும் பிடிக்கவில்லை என கவலைபட நீசந்தையில் நிற்கும் பொம்மையல்ல நீஎன்பது நீயே உன்னைஉனக்கு பிடித்தால் போதும்

மற்றவர்களை குறை கண்டுபிடிக்கும் போட்டி வச்சா எல்லாருக்கும் முதல் பரிசு கொடுக்க வேண்டி இருக்கும்.

தனிமையைப் போன்ற ஒரு கொடுமையும் இல்லை அதைப் போல் ஓர் உண்மையான நண்பனும் இல்லை

vendredi 27 mai 2016


kalai


nam


perapu


manithan


ninaivu


idayam



anpu



mercredi 25 mai 2016

kannire


nammidam


inke


pathai


vali


ithayam


karanam


manam



தவறாகப் பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் சரியான அர்த்தங்களும் ...!


தவறாகப் பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் சரியான அர்த்தங்களும் ...!
1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தப்
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்தப் பண்ணு...
இதாங்க சரி...
2.படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டைக் கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான் ....
3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......
4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....
5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...
காலப்போக்கில்....
நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரைக் குறை கூற
உபயோகிக்கிறோம்...
மாறுவோம்... பிறரை மாற்றுவோம்.

jeudi 19 mai 2016

மனைவி கடவுளின் மறு உருவம்




    பெண்களின் உணர்வுகளை மதி
    மனைவி கடவுளின் மறு உருவம்
    ஒரு பெண்...
    மழலையாகி,
    மகளாகி,...
    தமக்கை,
    தங்கையாகி,
    தாயாகி,
    அண்ணியாகி,
    அத்தையாகி,
    காதலியாகி,
    மனைவியாகி....
    இத்தனை ஆனாலும்,
    மனைவி ஸ்தானத்திற்கே
    மதிப்பும் மரியாதையும் அதிகம்.
    மனைவி. தவிர
    மற்ற உறவுகள், இரத்த சம்பந்தமானது.
    பாசம் என்பது
    அவர்களின் D.N.A. விலே இருக்கும்.
    ஆனால்
    எங்கிருந்தோ வந்து......
    நம் சுக துக்கங்களில் பங்கெடுத்து,
    நோய் காலங்களில் பணிவிடை செய்து,
    தேவை, தேவையற்றதை அறிந்து..
    உனக்கே உரியவளாகிறாள்.
    மட்டுமல்லாது,
    நம் கோப வெறுப்புகளையும் தாங்கிக் கொண்டு
    உன் சுமைகளையும் சுமக்கிறாள்.
    உலகிலேயே யாரும் கொடுக்கமுடியாது.
    உயரிய "தந்தை " எனும் அங்கிகாரத்தை கொடுக்கிறாள்.
    அவ்வளவு ஏன் ?
    நீ இறந்த பின் உன் உறவுகளே செய்யாத
    மழலை பருவத்திலிருந்தே
    பூண்ட...
    " பூவை பொட்டை
    இழந்து வெள்ளை உடை தரித்து... "
    தன் வாழ்வையிம் இழக்கிறாள்....
    அறிவீர்.. உணர்வீர்... போற்றுவீர்...
    காதலிப்பீர் உண்மையாக...!

    ப்பவர்கள் மட்டும் படிக்கவும்...!

yeram



idayam



velai


negal



matham



un



payanam



jeudi 12 mai 2016

பெண்களை மதிக்காத ஆண்களுக்கு மட்டும்.



ஆண்களே பதில் இருக்கிறதா உங்களிடம்?
( பெண்களை மதிக்காத ஆண்களுக்கு மட்டும் )
சமைந்த பெண்ணின் அந்த நேரக் கலவர முகத்தை நீங்கள் காண நேர்ந்ததுண்டா?
சடங்கு தினத்தில் சந்தனத்தையும் மீறிக் கன்னங்கள் குங்கும நிறமடையும் ரசாயன மாற்றத்தை வியந்ததுண்டா?
சிறுமிக்கும் மனுஷிக்கும் அந்தக் குழந்தை சில நாட்கள் தடுமாறுவதை உணர முடிந்ததுண்டா?
கொஞ்சம் கொஞ்சமாக அவளில் பெண்வாசம் குடியேறுவது கண்டு பெருமைப்பட்டதுண்டா?
அக்காக்களின் கவலைகளைப் பற்றி, தங்கைகளின் பயங்களைப் பற்றி என்றேனும் யோசித்ததுண்டா?
கல்யாண நாள்வரை ஒரு கண்ணாடிப் பாத்திரம்போல அவள் தன்னைக் கையாள்வதைக் கவனித்ததுண்டா?
கர்ப்பிணியின் கணவனாக ஒரு பெண்ணின் அருகில் உறங்க வாய்த்ததுண்டா? தூக்க மத்தியில் அவளின் வலியொலியில் பதறி விழித்து, விழிக்கவைத்து விசாரித்ததுண்டா?
ஒரு சுலபப் புன்னகையில் அவள் சமாதானப் படுத்தும்போது, வெட்கத்தில் தன்னைக் குழந்தையாகவும், அவளைத் தாயாகவும் உணர்ந்ததுண்டா?
ஆஸ்பத்திரி வார்டில், அவளின் வலிப் பிளிரல் கேட்டு காமம் நொறுங்கிக் கண் கலங்கியதுண்டா?
ஜில்லிட்ட கைப்பிடித்து குழந்தையைச் சிலாகித்து, அவளில் ரோஜா நெற்றியில் நரம்புகளின் முறுக்கலற்ற முதல் ‘குளிர் முத்தம்’ இட்ட அனுபவம் உண்டா?
குழந்தைக்குப் பாலூட்டும் தருணத்தில் அதன் தாயின் முகத்தை ரசித்ததுண்டா?
முதிர்கன்னியின் வெள்ளை முடிகளைக் கண்டு மனம் கருத்ததுண்டா?
முதுமைக்கு ஏங்கிய இளம் விதவையின் உணர்வுகள் பரிந்து அழுததுண்டா?
குழந்தையற்றவள் ஒவ்வொரு மாதமும் வடிக்கும் ரத்தக்கண்ணீரைப் பார்த்ததுண்டா?
மழலை செத்தவளின் மார்பில் பாறாங்கல் போன்று பால் இறுகுமென்பதைக் கேள்விப்பட்டதுண்டா? அவளின் கண்ணீரில் பால் வாசம் கண்டதுண்டா?
அம்மா உங்களைப் பிரசவித்த அந்த நேரத்து வலியை அப்புறம் எப்போதாவது அவளிடம் விசாரிக்கத் தோன்றியதுண்டா?
இன்னும்… இன்னும்… உள்ளுக்குள் பொங்கிப் பெருகும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளையும் கேட்கலாம். ஆனால் பதில் இருக்கிறதா ஆண்களே உங்களிடம்??
.
.
.
.
.
.
.
பெண்களை மதிக்காத ஆண்களுக்கு மட்டும்..........

mercredi 11 mai 2016

வாழைப்பழம் தேங்காய்



    வாழைப்பழம் தேங்காய்
    தெய்வங்களுக்கு படைப்பது ஏன்..?
    எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் தேங்காய் படைக்கிறார்கள்.ஏன்...?
    ...
    மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.
    ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.
    இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.
    எனது இறைவா!
    மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!
    என வேண்டவே....
    நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.
    அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.
    அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.
    மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.
    ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது.
    முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும்.
    அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.
    பழம் கொட்டை என்பது கிடையாது.
    அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.
    நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.

மாறுமா இந்த நிலை....???




    பட்டுடுத்தி 
    வரும் பெண்ணை 
    ஸ்ரீதேவி 
    என்றும்... 
    அதே ...
    பெண் 
    வெள்ளை உடுத்தி வந்தால் 
    மூதேவி 
    என்கிறதே இவ்வுலகம்.... 
    ஏன் இந்த நிலை.....
    மாறுமா இந்த நிலை....???

என்ன செய்ய முடியும்



    என்ன செய்ய முடியும் என்பதை அறிவதைவிட நம்மால் என்ன செய்ய முடியாது என்பதை அறிவதே முக்கியம். வேறு யாராகவும் இருக்க முயலாமல் தானாகவே தன் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வதுதான் வீரமும் விவேகமும்.
    ஒரு மனிதன் சந்தோஷமின்றி இருந்தால் அவனது சொந்தத் தவறுதான் அதற்குக் காரணம் என்பதை நினைவில் வையுங்கள். ஏனெனில் கடவுள் எல்லோரையுமே சந்தோஷமாகத்தான் படைத்திருக்கிறார்.

புதுமையில் அவள் அழகு





    கல்லில் சிலை அழகு 
    சொல்லில் தமிழ் அழகு 
    மானில் விழி அழகு 
    தேனில் சுவை அழகு 
    வானில் நிலவு அழகு ...
    இளவேனிலில் தென்றல் அழகு 
    இதயத்தில் காதல் அழகு 
    காதலில் மாலை அழகு 
    மாலையில் மலர் அழகு 
    மலரில் மது அழகு 
    மதுவில் அருந்தும் வண்டு அழகு 
    புருவத்தில் வில் அழகு 
    புன்னகையில் முத்து அழகு 
    கண்களில் கயல் அழகு 
    கற்பனையில் கவிதை அழகு 
    கவிதையில் பொய் அழகு 
    பொய்யில் புதுமை அழகு 
    புதுமையில் அவள் அழகு

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க,



    கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நிறைய கிடைக்கும்
    ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான்.அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.
    ஆனால் அந்த பையன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை.கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை.அதை பார்த்த அவன் அம்மா சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார்.அப்பவும் அவன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.
    பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அ...வன் கைகளில் வைத்தார்.அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிகொண்டான்.
    வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.
    அம்மா என் கையை பாருங்கள் எவ்வளவு சின்னதா இருக்குது.நானே பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும் இப்ப பாருங்க அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமா சாக்லேட் கிடைச்சிருக்கு பாருங்கள் என்றான்.
    எதையுமே நாமளா நாடிப்போனா குறைவா தான் கிடைக்கும் அதுவா தேடி வந்தா அதிகமா கிடைக்கும்...

ஒரு குட்டிக் கதை!



    ஒரு குட்டிக் கதை!
    ஆற்றங்கரைக்குத் தன் மகனை அழைத்துப் போயிருந்தார் ஒருவர்.
    அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
    ...
    பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.
    “இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு” என்றார். மகன் நிரப்பி எடுத்து வந்தான். “இதற்கு மேல் நிரப்ப முடியாது” என்றான்.
    அப்பா கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார். அதே பையில் போட்டுக் குலுக்கினார்.
    அவை கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.
    ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.
    “இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா?” கேட்டான் மகன்.
    தந்தை அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார். பையை மேலும் குலுக்கினார்.
    கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.
    “இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?
    ”“இருந்திருக்காது” என்று ஒப்புக் கொண்டான் மகன்.
    “வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்கள் போன்றவை.
    வேலை, வீடு, கார் போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.
    கேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.
    முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடு.
    அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.
    ஆனால், உன் சக்தியை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது

pesu


urimai


nalai


kathal


verupam


dimanche 8 mai 2016

அன்னையர் தினம்




    இன்று உனக்கென
    அன்னையர் தினமாம்!
    அகிலத்தில் எம்மை
    ஆளாக்கி காட்டிய உனக்கு
    இன்று மட்டும் தான்...
    அன்னையர் தினமா?
    ஆயுள் முழுவதும்
    தினமும் வாழ்த்தினாலும்
    ஈடாகுமா இங்கு
    உனக்கு பட்ட கடன்?

samedi 7 mai 2016

உன் மடியை தந்தால் போதும்..


    சொந்தமென்று சொல்ல நீ மட்டும் போதும்...!
    துன்பங்களில் தாங்கிக்கொள்ள உன் பாசம் போதும்...!
    இன்பங்களில் கலந்து கொண்டு நீ புன்னகைத்தால் போதும்...!
    கடைசி மூச்சி நிற்கும் போது
    உன் மடியை தந்தால் போதும்..

vendredi 6 mai 2016

காதல் என்றால் என்ன??



காதல் என்றால் என்ன??

5 வயசு பொண்ணு :
என் பொம்மைய அவன் புடுங்கிட்டு போனான்
எனக்கு கோவம் வந்திடுச்சு
அவன் சைக்கிள தள்ளி விடலாம்னு போறப்ப
என் பொம்மைக்கு புது சட்ட போட்டு
எடுத்துட்டு வருவது.

10 வயசு பொண்ணு :
அவன் சோசியல் சயன்ஸ் புத்தகத்துல
கலர் பென்சிலாலக் கிறுக்கிட்ட்டேன்
டீச்சர் கேட்டப்ப என்ன மாட்டி விடாம
அவனே முட்டி போட்டு நிறபது .

15 வயசு பொண்ணு :
ரெகார்ட் நோட் ஒன்னா ஒக்கார்ந்து எழுதும் போது
அந்த பேனாவ தான்னு வாங்கும் போது
அவன் கைல லேசா உரசுவது

20 வயசு பொண்ணு :
நான்கு வருடம் எதையுமே சொல்லாமல்
கல்லூரி கடைசி நாளில் விடை பெறும் போது
"அப்புறம் எப்ப பார்க்கலாம் ?"
என்று அவன் கேட்டது

25 வயசு பொண்ணு :
கையில ஒத்த ரோசாவோட வந்து
என்னைக் கல்யாணம் பண்ணிப்பாயா
என்று கேட்டு அவனையே முட்டாளாக்கி கொண்டது .

35 -45 வயசு பெண் மணி :
நான் ரொம்ப களைப்பா இருக்குறதப்
பார்த்து நான் காபி போட்டு தரவா
என்று அவர் கேட்பது

55 வயசு பெண்மணி :
அவருக்கு மைசூர்பான்னா உயிர்
எனக்கு சர்க்கரை நோய் நான் சாப்பிட
முடியாதென்று அவரும் சாப்பிடாமல்
அதை ஒதுக்குவது

65 வயது பெண்மணி
நான் கடைசி மூச்ச விடும் போது
என் கைய பிடிச்சிகிட்டே
என்னையும் கூட்டிட்டு போ என்று
அவர் கண்ணீர் விட்டது. 

துணை



ஒரு பெண் மௌனமாக இருக்கிறாள் என்றால்...
அவள் எண்ண அலைகளில் பல ஆயிரம் விஷயங்கள்
நிழலாடிக்கொண்டிருக்கின்றன என்றுபொருள்...!

நீ வம்பிழுக்கும்போது, அவள் வாதாடவில்லை
எனில்...
அவள் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கின்றாள்
என்று பொருள்...!

ஒரு பெண் பல
கேள்விக்குறியோடு உன்னை
பார்க்கிறாள் என்றால்...
நீ எதுவரை அவளுடன் நீடித்து இருப்பாய் என்று
சிந்திக்கிறாள் என்று பொருள்...!

நீ நலமா என்று கேட்கும்போது, ஒரு பெண் சில
வினாடிகள் கழித்து "நான் நலமாய்
இருக்கிறேன்" என்று பதிலளித்தாளானால்...
அவள் நலமாக இல்லை என்று பொருள்...!

ஒரு பெண், நீ பேசும்போது கண் இமைக்காமல்
உற்றுப்பார்த்துக் கொண்டிருகிறாளானால்...
நீ ஏன் அவளிடம் உண்மையை மறைக்க
முயற்சிக்கிறாய் என்று வியக்கிறாள் என
பொருள்...!

ஒரு பெண் உன் தோளில் சாய
விரும்புகிறாளானால்..
நீ காலம் முழுதும் அவளுடன் இணைந்து
இருக்க வேண்டும் என விரும்புகிறாள் என்று
பொருள்...!

ஒரு பெண் உன்னை
தினம் தினம் சந்திக்க
வேண்டும் என்று விரும்புகிறாளானால்...
அவள் உன்னிடம் மிக நெருக்கமாக, அன்பாக
இருக்க விரும்புகிறாள் என்று பொருள்...!

ஒரு பெண் உன்னிடம் "நான் உன்னை
நேசிக்கிறேன்" என்று கூறுகிறாளானால்...
அதன் அர்த்தமறிந்தே அந்த வார்த்தையை
உச்சரித்திருக்கிறாள் என்று பொருள்...!

ஒரு பெண் "நான் உங்கள் பிரிவால்
துயருறுகிறேன் " I MISS YOU" என்று
கூறுகிறாளானால்...
அவள் அளவிற்கு வேறு எவரும் உங்கள்
பிரிவால் வாடவில்லை என்று பொருள்...!

வாழ்க்கை ஒரு முறை தான்...
இந்த வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தமான
சரியான உறவுடன் இணைத்துக்கொள்ளுங்கள்...

உங்கள் மனம் அறிந்து, அன்பை
பகிர்ந்துக்கொள்ளும் ஒரு உறவை
தேர்ந்தெடுங்கள்...

உண்மையான அன்புடன் உங்கள் உள்ள அழகை
ரசிக்கும் ஒரு துணையை தேர்ந்தெடுங்கள்...