முகப்பு

samedi 15 août 2015

தமிழர் நாட்டுப்புறக் கலைகள்


தெருக்கூத்து-thamil.co.uk
தெருக்கூத்து
தமிழகத்தின் மிகப்பழமையான அரங்கக் கலை வடிவம் தெருக்கூத்து ஆகும். தெருக்களையே ஆடுகளமாகக் கொண்டு நிகழ்த்தப்படுவதால் தெருக்கூத்து எனப்பெயர் பெற்றது.  ஒரு கதையைப் பாடியும் ஆடியும் உரையாடியும் நடித்தும் நிகழ்த்தப்படும் கலையாக இது விளங்குகிறது.
சிலபகுதிகளில் தெருக்கூத்து நடிகர்கள் தலைக்கிரீடம், புஜக்கட்டை இவற்றை ஒப்பனைப் பொருளாக அணிவதால் கட்டைக் கூத்து எனவும் வழங்கப்படுகின்றது. சில பகுதிகளில் இத்தகைய ஒப்பனை இல்லாமலும் தெருக்கூத்து நிகழ்த்தப்படுவதுண்டு.
தெருக்கூத்தில் எடுத்துரைக்கப்படும் கதைப் பொருளிற்கேற்ப ஒப்பனைகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆண்களே பெண் வேடமிட்டு நடிக்கின்றனர். கட்டியக்காரன் என்ற நகைச்சுவைப் பாத்திரம் தெருக்கூத்தில் மிகவும் குறிப்பிடத் தக்கதாகும்.
வடார்க்காடு, தென்னார்க்காடு, செங்கல்பட்டு, வேலூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெறும் திரௌபதையம்மன் விழாக்களின் போது வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாகத் தெருக்கூத்து இடம்பெற்று வருகிறது. இதில் பெரும்பாலும் மகாபாரதக் கதைச் சம்பவங்களே கூத்தாக நிகழ்த்திக் காட்டப்படுகின்றன.
பகல் வேடம்பகல் வேடம்
புராணக் கதை மாந்தர்களைப்போல வேடமிட்டுப் பகல் நேரங்களில் வீடுவீடாகச் சென்று பாடல்பாடி உரையாடி நிகழ்த்தப்படும் கலையாகப் பகல் வேடம் விளங்குகிறது. பகலில் வேடமிட்டு நிகழ்த்தப் படுவதால் இது பகல் வேடம் என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் கதை எடுத்துரைக்கப் படாமல் செல்லும் இடமெல்லாம் உதிரியாகப் பாடல்களைப் பாடிச் செல்லும் நடமாடும்  நிகழ் கலையாக இது உள்ளது.
கிருஷ்ணர், இராமர், சீதை, அனுமராக வேடம் புனைந்து இராமாயணம், மகாபாரதக் கதைச் சம்பவங்களைப் பாடியும் உரையாடியும் நடித்தும் எடுத்துரைத்துச் செல்வர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குல்லுக்கவர நாயுடு என்ற  இனத்தாரே இக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலாவணி-thamil.co.ukஇலாவணி
தஞ்சை மராட்டியர் ஆட்சிக்காலத்தில் மராட்டிய மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த கலைவடிவம் இலாவணி ஆகும். இலாவணி என்றால் நடுதல் என்ற பொருள். மராட்டியத்தில் நாற்று நடும்போது காமச்சுவை ததும்பப் பாடப்படும் பாடல்களை இலாவணி என்று அழைப்பதுண்டு. அதுவே தமிழ்ப் பெயராகவும் நிலைத்து விட்டது.
தமிழகத்தில் காமன் கோயில் வழிபாட்டோடு தொடர்புடையதாக இலாவணி நிகழ்த்தப்படுகிறது. மன்மதன் எரிந்தான் என ஒரு கட்சியினரும், மன்மதன் எரியவில்லை என ஒரு கட்சியினரும் வாதிடுவதாக இலாவணிப்பாடல் அமைந்திருக்கும். டேப் என்ற தோலிசைக் கருவியினை இசைத்துக்கொண்டு ஒரு பிரிவினர் தங்களது வாதத்தினைப் பாடலாகப்பாட, அடுத்த பிரிவினர் அதற்குப் பாடலிலேயே பதில் கூறுவதாக இலாவணி நிகழ்ச்சி அமையும். இவ்வாறு வினாவிடைப் பாணியில் இலாவணி நிகழ்ச்சி விடியவிடியத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
திருச்சி, தஞ்சை மாவட்டப் பகுதிகளிலேயே இலாவணி நிகழ்த்திக் காட்டப்படுகின்றது. மன்மதன் கதை மட்டுமே இலாவணியில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இக்கலை இன்றைய நிலையில் மறைந்துகொண்டு வருகின்றது.
உடுக்கைப்பாட்டு-thamil.co.ukஉடுக்கைப்பாட்டு
உடுக்கை என்னும் இசைக்கருவியை இசைத்துக் கொண்டு ஒரு கதையைப் பாட்டாக எடுத்துரைப்பது உடுக்கைப்பாட்டு எனப்படும். கொங்குமண்டலப் பகுதிகளில் உள்ள கோயில் விழாக்களில், குறிப்பாக அண்ணமார்சாமி வழிபாட்டில், உடுக்கைப்பாட்டு சிறப்பிடம் பெறுகிறது. இறந்தோருக்காவும் ஆவிவயப்பட்டோரைக் குணப்படுத்துவதுற்கும் கூட உடுக்கைப்பாட்டுப் பாடும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக உள்ளது.
தலைமைப்பாடகர் உடுக்கினை இசைத்துக்கொண்டு பாட, இருவர் பின்பாட்டுப் பாடுவர். சில பகுதிகளில் ஆண்கள் பெண் வேடமிட்டு உடுக்கைப் பாட்டிற்கேற்ப ஆடுவதும் உண்டு.
கணியான் கூத்துகணியான் கூத்து
கணியான் என்னும் இனத்தாரால் மட்டுமே இக்கூத்து நிகழ்த்தப்படுவதால் கணியான் கூத்து என வழங்கப்படுகிறது. கணியான் கூத்தில் மகுடம் என்னும் தோலிசைக் கருவி சிறப்பிடம் பெறுவதால் மகுடாட்டம், மகுடக்கச்சேரி எனவும் சுட்டப்படுவதுண்டு.
தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுடலைமாடன் கோயில் வழிபாடுகளில் சடங்குக் கலையாகக் கணியான் கூத்து நிகழ்த்தப்படுகிறது.
மகுடச்சத்தம் கேட்டாலொழிய மாடன்பூசை கொள்வானோ என்ற வழக்காறு சுடலைமாடன் வழிபாட்டிற்கும் கணியான் கூத்திற்கும் உள்ள உறவை உணர்த்தும்.
தலைமைப்பாடகர் ஒருவர் (அண்ணாவி என அழைக்கப்படுவார்). மகுடம் வாசிப்போர் இருவர், ஆட்டம் ஆடும் பெண்கள் இருவர் (ஆண்களே பெண் வேடமிட்டு ஆடுவர்), ஒரு பின்பாட்டுக்காரர் என்று ஆறுபேர் கணியான் கூத்தில் இடம்பெறுவர்.
அம்மன் கூத்து-thamil.co.ukஅம்மன் கூத்து
அம்மன் கூத்து என்பது, அம்மனைப் போல் வேடம் புனைந்து ஆடுவதாலும், அம்மன் கோவில்களில் ஆடுவதாலும் அம்மன் கூத்து எனப் பெயர்பெற்றதோர் கூத்தாகும். இக்கூத்து கணியான் கூத்திற்கு, துணை ஆட்டமாகவும் கருதப்படுகிறது. இக்கூத்து பல மாவட்டங்களில் பெரிதும் விரும்பப்படுகிறது. இக்கலை, சடங்கு சார்ந்ததாகவும், அம்மனின் அருளைக் காட்டுவதாகவும் அமையும் ஒன்றாகும். அம்மன் கூத்து, இன்றும் நடைமுறையில் நிகழ்த்தப்படுவதாகும்.
வில்லுப்பாட்டு-thamil.co.ukவில்லுப்பாட்டு
வில் என்ற இசைக்கருவியைக் கோலால் அடித்து ஒலி எழுப்பிப் பாடியும் உரையாடியும் நிகழ்த்தப்படும் கலை வில்லுப்பாட்டு ஆகும். வில்லிசை, வில்லடிச்சான் பாட்டு என்றும் இது வழங்கப்படும். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள சிறு தெய்வக் கோயில்களின் வழிபாட்டில் வில்லுப்பாட்டு தவறாமல் இடம்பெறும்.
தலைமைப்பாடகர், பின்பாட்டுக்காரர், இசைக்கருவி வாசிப்போர் என்று வில்லுப்பாட்டுக் குழுவில் ஆறுபேர் இடம்பெறுவர்.
வில்லுப்பாட்டில் முதன்மை இசைக்கருவியாக விளங்குவது வில் ஆகும். நீளமாக அமையும் இந்த வில்லின் இருபுறமும் மணிகள் கட்டப்பட்டிருக்கும். தலைமைப்பாடகர் கையிலுள்ள கோல்களினால் வில்லினை அடிக்க இனிய இசை எழும்பும். வில்லுப்பாட்டில் மற்றொரு முக்கிய இசைக்கருவி உடுக்கை ஆகும். வெண்கலத்தாலான சிறிய உடுக்கையே வில்லுப்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. அடுத்துச் சிறப்பிடம் பெறுவன குடம் அல்லது பானைத்தாளம், ஆர்மோனியம், வில்லுப்பாட்டில் இடம்பெறும் பாடல்களும் அதற்கேற்ப அமையும் இசையும் கேட்போரை வெகுவாகக் கவரும்.
சிறுதெய்வக் கதைகள், இராமாயணம், சிலப்பதிகாரம், நாயன்மார் கதைகள், காந்திமகான் கதை போன்றவை வில்லுப்பாட்டில் எடுத்துரைக்கப் படுகின்றன. அரசின் திட்டங்கள், விழிப்புணர்வுக் கருத்துகள் போன்றவற்றை மக்களிடையே பரப்பும் பணியில் வில்லுப்பாட்டு முக்கிய பங்காற்றி வருகின்றது.
ஒயிலாட்டம்-thamil.co.ukஒயிலாட்டம்
கிராமத்து இளைஞர்களால் பாடலுடன் நேர்வரிசையில் ஆடப்படும் ஆட்டம் ஒயிலாட்டம் ஆகும். ஒயில்கும்மி, இராமாயணக் கும்மி என்ற பெயர்களில் இது அழைக்கப்படுகின்றது. பெண்கள் ஆடும் வட்டக் கும்மியிலிருந்து ஒயில்கும்மி வேறுபட்டதாகும். ஒயில் என்றசொல்லுக்கு ஒய்யாரம், அழகு, நளினம், சாயல், அலங்காரம் என்று  அகராதிகள் பொருள் தருகின்றன. ஒய்யாரம் என்பதற்குக் கம்பீரம், எடுப்பு (Majestic) என்ற பொருளைத் தற்காலத் தமிழ் அகராதி கூறுகிறது. ஒயிலாட்டம் ஆண்கள் ஆடும் ஆட்டமாக இருப்பதால் கம்பீரமும் எடுப்பும் மிக்க ஆட்டமாக விளங்குகிறது.
ஒயிலாட்டத்திற்கென்று தனித்த ஒப்பனை முறைகள் கிடையாது. ஆனால் கையில் வண்ணக் கைக்குட்டை பிடித்திருப்பதும் காலில் கெச்சம் (சலங்கை மணிகள்) அணிவதும் அவசியமாகும். வண்ணக் கைக்குட்டையை வீசிச் சுழற்றி ஆடும்போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இத்தனை பேர்தான் ஒயிலாட்டம் ஆடவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. ஆடத்தெரிந்த, ஆடும் விருப்பமுள்ள எவரும் கலந்து கொண்டு ஆடலாம். இராமாயணக் கதையைப் பாடிக்கொண்டு ஒரே வரிசையாகவோ, இரண்டு வரிசையில் நின்றோ ஆடுகின்றனர். ஒயிலாட்டி (ஒயிலாட்ட ஆசிரியர்) பாடலைப்பாட ஆட்டக்காரர்கள் பின்பாட்டுப் பாடிக்கொண்டே முன்னும் பின்னும் சென்று பலவகையான ஆட்டங்களை ஆடுவர், ஆடிக் காட்டுகின்றனர்.
மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டச் சிறுதெய்வக் கோயில் விழக்களில் ஒயிலாட்டம் ஆடப்பட்டு வருகின்றது.
சேவையாட்டம்-thamil.co.ukசேவையாட்டம்
கம்பளத்து நாயக்கரால் ஆடப்படும் ஆட்டம் சேவையாட்டம் ஆகும். சேவை என்றால் சேவித்தல், வணங்குதல் என்று பொருள்படும். இறைவனை ஆட்டத்தின் மூலமாக வணங்குவதால் இது சேவையாட்டம் எனப்பட்டது.
இராமாயணக் கதையைப் பாடலாகப் பாடிக்கொண்டு விடியவிடிய இவ்ஆட்டம் ஆடப்படும். தேவதுந்தமி, சேவைப் பலகை, சேமக்கலம் ஆகிய இசைக்கருவிகள் ஆட்டத்தின் போது பயன்படுத்தப்படும்.
சேவையாட்டக் கோமாளி பாடலைப்பாடி  ஆட்டத்தைத் தொடங்க, ஏனைய ஆட்டக்காரர்கள் பின்பாட்டுப்பாடி வட்டமாக ஆடி வருவர். திருமால், பெருமாள், ரெங்கநாதர் ஆகிய தெய்வங்களின் வழிபாட்டில் சேவையாட்டம் தவறாது இடம்பெறாது.
பொம்மலாட்டம்-thamil.co.ukபொம்மலாட்டம்
மரத்தால் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளை இயக்கிக் காட்டி நிகழ்த்தப்படுவது பொம்மலாட்டம் ஆகும். தோற்பாவைக் கூத்திலிருந்து இது வேறுபட்டதாகும். கட்டை பொம்மைக்கூத்து, கட்டை பொம்மை நாடகம் என்ற பெயரிலும் இது வழங்கப்படும். கும்பகோணம், மயிலாடுதுறை, சேலம் ஆகிய பகுதிகளில் பொம்மலாட்ட சபா என்ற பெயரில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
பொம்மைகளின் உறுப்புகள் கயிற்றால் தனித்தனியே இணைக்கப்பட்டுக் கலைஞர்களால் உரையாடலுக்கேற்ப இயக்கிக் காட்டப்படுகின்றன. கரகாட்டம், காவடியாட்டம், நெல் குத்துதல், கத்திச்சண்டை போடுதல் போன்றவை பொம்மையைக் கொண்டு செய்துகாட்டும் போது மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர். இராமாயணக் கதைகளே பொம்மலாட்டத்தில் பெரிதும் எடுத்துரைக்கப் படுகின்றன.
திரைப்படம் என்ற சாதனம் வருவதற்கு முன்பு தோற்பாவைக் கூத்தும் பொம்மலாட்டமுமே அரங்கக் கலையாக மக்கள் முன் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளன. திரைப்படம், தொலைக்காட்சி இவற்றின் தாக்கத்தால் இக்கலைகள் இன்று மறைந்து வருகின்றன.
தோற்பாவைக் கூத்து-thamil.co.ukதோற்பாவைக் கூத்து
பாவைக் கூத்து, தோற்பாவைக் கூத்து, தோற்பாவை நிழற்கூத்து என்ற பெயர்களில் இக்கலை வழங்கப்படுகிறது. தோலினாலான உயிரற்ற பாவைகளை உயிருள்ள மாந்தர்களாய் மாற்றிக் கலைஞர்களால் நிகழ்த்தப்படும் கூத்தாக தோற்பாவைக் கூத்து விளங்குகிறது. மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்ட ராவ் என்னும் பிரிவினரால், குடும்பக் கலையாக இது நிகழ்த்தப்படுகிறது. திரைகட்டி அதன் பின்னே தோற்பாவைகளை இயங்கச் செய்து இக்கூத்து நிகழ்த்திக் காட்டப்படுகிறது.
தோற்பாவைக் கூத்தில் இராமாயணக் கதைகளே மிகுதியும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. சிறுவர்களை மகி்ழ்விப்பதற்காக உச்சிக்குடும்பன், உழுவத்தலையன் என்ற நகைச்சுவைப் பாத்திரங்களும் கிடாய்ச் சண்டை (ஆட்டுக்கிடாய்கள் சண்டையிடுவது) என்னும் நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன. தோற்பாவைக் கூத்து சீனாவில் தோன்றிப் பிறநாடுகளுக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது.
அனுமன் ஆட்டம்அனுமன் ஆட்டம்
அனுமன் ஆட்டம் என்பது, இராமாயண அனுமனைப் போல் வேடம் புனைந்து ஆடும் ஆட்டமாகும். இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டமாகும்.  இவ்வாட்டமானது தமிழகத்தில் பரவலாகவும், தென் மாவட்டங்களில் வைணவ சாதியினர் வாழும் இடங்களில் சிறப்பாகவும் நிகழ்த்தப்படுகிறது. இது ஒரு கலையாகவும், தாளத்திற்கும், இசைக்கும் ஏற்ப ஆடப்படுகிறது.
அன்னக்கொடி விழாக் கூத்து
சிவனடியாரான சிறுத்தொண்டரின் கதையை பக்தி உணர்வுடன் நிகழ்த்தும் கூத்து வடிவிலான கலை அன்னக்கொடி விழாக் கூத்து ஆகும் அன்னம் என்றால் உணவு என்று பொருள். எனவே இவ்விழாவினை உணவு படையல் விழா என்றும் பொருள். சிறுத்தொண்டர் முக்தியடைந்த நாளான சித்திரைத் திங்கள் பரணி நட்சத்திர நாள் இதற்கு சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. இவ்விழா பெரும்பாலும் ஆற்றங்கரை ஏரி குளம் பொது நீர்நிலை போன்ற இடங்களிலேயிருந்தே தொடங்கும். இவ்விழாவினில் பங்கேற்பதன் மூலம் மகப்பேறு கிட்டும். கெட்ட ஆவியோ அல்லது நோயோ அண்டாது என்ற நம்பிக்கை இன்றளவும் மக்கள் மனதில் உள்ளது

பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்!




வீட்டுக் குறிப்புகள்!
1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.
2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.
4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.
5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.
6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.
7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.
9. எப்பொழுதாவது உபயோகிக்கும் “ஷூ”க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு “ஷூ”விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.
10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்.
11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.
12. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.
13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.
14. பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.
15. வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.
16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.
17. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.
18. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.
19. கடையில் மூக்குப் பொடி வாங்கித் தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.
20. குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய கசுக்கொட்டையை (முந்திரி) பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.
21. புளித்த பாலில் (மோரில்) வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.
22. வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்ககை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.
23. வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் பானை (Fan) ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே பரவாது.
24. வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.
25. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.
26. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.
27. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.
28. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.
29. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
30. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.
31. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.
32. தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.
33. நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது பொலிவுடன் இருக்கும்.
34. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.
35. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.
36. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.
37. சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.
38. கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்த படி வெட்டலாம்.
39. மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.
40. எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.
41. மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.
42. ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.
43. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.
44. பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.
45. கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.
46. சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.
47. எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.
48. இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைக்க வேண்டும்.
49. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
50. வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.
51. கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.
52. எரிந்து கொண்டிருக்கும் பல்பின் மேல் இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை பரவும்.
53. நைலான் துணியை தைக்கும் போது ஊசி லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில் குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.
54. டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும் வந்துவிடும்.
55. உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.
56. மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.
57. வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.
58. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.
59. பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.
60. கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.
61. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.
62. வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.
63. கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.
64. சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.
65. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
66. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.
67. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
68. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.
69. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.
Must Visit & Like our page : fb.com/OurErode
70. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.
71. சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.
72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.
73. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.
74. மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.
75. வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.
76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டைக் கசக்கச் செய்துவிடும்.
77. பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
78. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.
79. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.
80. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.
81. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.
82. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.
83. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.
84. முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.
85. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.
86. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.
87. குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி விட்டால், சாக்ஸ் ஓரத்தில் அதன் சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம் தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும்.
88. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகோலனைத் தடவிய பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை தூக்கும்.
89. மிக்ஸியில் அரைக்கப் போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால், தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.
90. வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறி இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.
91. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.
92. சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.
93. வீட்டில் மரச் சாமான்களுக்கு உபயோகிக்கும் பெயிண்டை முறத்தில் தடவி காய வைத்தால் நீண்ட நாட்கள் முறம் புதுசு போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.
94. டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப் பசையை உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.
95. செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.
96. துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.
97. கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.
98. கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.
99. குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன சைஸ் கொசுவலை துணியில், embroider கைவண்ணம் காட்டி டி.வி. கவராக பயன்படுத்தலாம்.
100. துணிகளில் ஹேர்-டை பட்டால் அந்த கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.
101. ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.
102. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.
103. தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.
104. மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா? ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.
105. அரை வாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.
106. புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.
107. ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.
108. சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.
109. கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.
110. பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.
111. இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.
112. பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால் திரியாது.
113. காபி பொடியை போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாஷன் கலகலவென்று இறங்கும்.
114. நெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.
115. தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
116. கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.
117. தயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.
118. ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.
119. தேங்காயை சரிபாதியாக உடைக்க, தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
120. கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
121. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் “பிரஷ்”ஷாக இருக்கும்.
122. உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.
123. குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா? வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.
124. முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
125. சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.
126. மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்து போகாமல் இருக்க பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப் போட்டு ஒரு டப்பாவில் போட்டு மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.
127. உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.
128. தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.
129. கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.
130. சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.
131. வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.
132. துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.
133. பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.
134. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.
135. இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.
136. உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா? அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை இலையின் மீது தேயுங்கள். பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.
137. காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.
138. பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்.

உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமல் காத்த நாகரீகத்தில் அழிந்த நம் பனை ஓலை பெட்டிகள்..!




உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமல் காத்த நாகரீகத்தில் அழிந்த நம் பனை ஓலை பெட்டிகள்..!
பலஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலையால் செய்யக்கூடிய பெட்டிகள், முறத்திற்கு கிராக்கி பயங்கரமாக இருக்கும். அனைவரின் வீட்டிலும் பனை ஓலைப்பெட்டி, முறம் இல்லாமல் இருக்காது. ஏனென்றால் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆராக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும்.
இதனால் மக்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கடைகளில் மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்கள் பனைஓலைப் பெட்டிகளிலேயே வைத்து கொடுப்பார்கள். பனை ஓலைப் பெட்டிகள் இல்லாத மிட்டாய் கடைகளையே பார்க்க முடியாது. மக்கள் அதிகளவில் பயன்படுத்தியதால் பனை ஓலைப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பனை ஓலை பொருட்கள் தொழில் மிகவும் நன்றாக இருந்தது.
ஆனால் காலப்போக்கில் பிளாஸ்டிக் பைகள், அட்டை பெட்டிகள் வரத்தொடங்கின. இவை மிகவும் எளிதாக கையாளக்கூடியதாக இருப்பதால் மக்கள் அதனை பயன்படுத்த தொடங்கினார்கள். ஆகையால் பனை ஓலை பெட்டிகள் உள்ளிட்ட பனைப் பொருட்களின் தேவை குறைந்து விட்டது.

மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி



பூண்டு: பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.
இஞ்சி: நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.
தயிர்: தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.
பார்லி, ஓட்ஸ்: பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டாக்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
கோப்பி தேனீர்: கோப்பி தேனீர் ஆகிய இரண்டுமே மூளையை சுறுசுறுப்படையச் செய்யும் குணம் கொண்டவை. பல கொடுமையான மனச் சூழ்நிலைகளை தடுக்கவல்லவை.
சர்க்கரைவள்ளி கிழங்கு: பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் விட்டமின் A சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
காளான்: உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான இரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.
பழங்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் பழங்கள் முதலிடத்தில் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் விட்டமின் B1, C, A மற்றும் உலோகச் சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது.
ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள க்ளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது.
எலுமிச்சையில் அதிக அளவு விட்டமின் C சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது.
கீரைகள், காய்கறிகள்: பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், விட்டமின் B1, A மற்றும் C சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. இந்த உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டால் நோய்களை அண்ட விடாமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.

கைமருந்து..01



*வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.
* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர்ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.
* கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
* தேன் மூன்று  மேசைக்கரண்டி எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை( கறுவா) தூள் கலந்து கரும்புள்ளிகள்உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
* முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதேபோல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.
* முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.
* ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர,கரும்புள்ளிகள் மறையும்.
* கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
* உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
* எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர அவை நாளடைவில் மறைந்து விடும்.
* வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.
* முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.
* முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.
* வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் கரும்புள்ளிகள் நீங்கும்.
* சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.
* தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
* முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளியைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும்புள்ளியின் மேல் போட்டு வரவும். தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும்புள்ளி மறைந்து விடும்.
கோபி சந்தனம் – ஒரு தேக்கரண்டி, பாதாம் பருப்பு – மூன்று(நீரில் ஊற வைத்தது), தயிர்- 2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி. இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதிகளில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்பரு, கரும்புள்ளி, தழும்புகள் நீங்கி முகம் அழகுபெரும்.
முகத்தில் தழும்புகள் – தீப்புண் தழும்புகள் மறைய:
அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவிவர தழும்புகள் படிப்படியாக மறையும்.

mercredi 12 août 2015

ஒவ்வொரு வருடமாக என் வாழ்வை வாழ்கிறேன்



ஒவ்வொரு வருடமாக என் வாழ்வை வாழ்கிறேன்
எதிர் காலத்தை நோக்கி தளராத இதயத்துடன்
பரபரப்பின்றி இலட்சியத்தை விட்டு விலகாமல்
மறைந்து போனவற்றுக்காக புலம்பாமல்
கடந்த காலத்தின் பயத்தில் பின்னடையாமல்
எதிர்காலம் அதை மறைக்கலாம் ஆனால் முழுமையான
சந்தோஷமான இதயத்துடன் இறுதியை அடையும்
இளமையிலும் முதுமையிலும் சந்தோஷத்துடன் பயணமாகும்
எனவே வழி மலைமேல் ஏறட்டும், இறங்கட்டும்
கரடுமுரடாக வழுவழுப்பாக இருக்கட்டும்
பயணம் சந்தோஷமாக இருக்கும்
சிறுவனாக நான் தேடியதை இன்றும் தேடுவேன்
புதிய நட்பு, பெரிய சாகசம், மணி மகுடம்
எனக்கு வயதாகும் ஆனால் வாழ்வின் துடிப்பை இழக்கமாட்டேன்
ஏனெனில் தெருவின் இறுதி வளைவுதான் சிறந்த வளைவு

இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமாக இருக்க போவதுமில்லை..



ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...
விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்...
அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.
மருத்துவரைக் கண்டதும் கோபமாக,
"என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்...
ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்?
உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?"
என்று கதறினார்.
மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள்,
நான் மருத்துவமனையில் இல்லை...
எனக்கு அழைப்பு வந்ததும் என்னால்
இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று பொறுமையாக இருங்கள்"
என்று கூறினார்.
"பொறுமையாக இருக்கவா?" அந்த தந்தை மேலும் ஆத்திரத்துடன், "உங்கள் மகன்
இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால்
நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா?
உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்"
என்று கொந்தளித்தார்.
மருத்துவர் சிரித்த முகத்துடன், "எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம், நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்.
"கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது" தந்தை முனுமுனுத்தார்.
அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது...
மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார்,
"உங்கள் மகன் பிழைத்துவிட்டார்" என்று சொன்னபடி,
"மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்" என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்.
சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம்,
"அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா?
என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட அவருக்கு நேரமில்லையா?"
என்று நொந்துகொண்டார் தந்தை.
அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, "அந்த மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்...
இன்று, அவர் மகனை அடக்கம் செய்யும் காரியங்களில் ஈடுபட்டிருந்தார்... உங்கள் மகனுக்காக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று அழைத்தவுடன்
அந்த வேலையை ஒத்தி வைத்துவிட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார்...
இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்" என்று கூறினாள்.

எவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,
அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப்
பற்றியும் நாம் அறிந்திருக்காதவரை!!
"நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் கற்பனையானவை...
மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை..."
இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமாக இருக்க போவதுமில்லை...
பின்பு ஏன்...???

வீட்டிலிருக்கும் பெண்



நான் வேலைக்கு போறேன்...(என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா!'')
கணவன் ஒருவர், நண்பரான உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்...
நிபுணர் : நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.
நிபுணர் : உங்கள் மனைவி?
கணவர் : அவள் வேலைக்கு போகல . வீட்டில்தான் இருக்கிறாள்.
நிபுணர் : குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்?
கணவர்: என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே.
நிபுணர் : தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்?
கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!
நிபுணர் : உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்?
என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்குதான் வேலையில்லையே.
நிபுணர்: பள்ளியில் விட்டுவந்தது பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். உங்களுக்கு தெரியுமா... அவளுக்குதான் வேலையில்லையே
நிபுணர்: மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?
நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.
நிபுணர்: பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.
ம்... காலை முன் எழுவது முதல் இரவு வரை வேலை வேலை வேலை... என ஓடும் பெண், 'வீட்டுல சும்மாதானே இருக்கா... வேலையே செய்யாம' என்று பேசுவது எத்தனை கொடுமை?
மனைவியை பாராட்டுங்கள், ஏனென்றால் அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது. அவளை மதித்து , பாராட்ட, புரிந்து கொள்ள இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.
ஏனெனில்
தோளோடு தலைசாய்க்க
தோழனைபோல் தோள் கொடுக்க
நிஜத்தை உணரவைக்க
நிழலாய் கூடவர
நம்முயிராய் வந்தவள் !......
''நீங்கள் வேலை செய்கிறீர்களா அல்லது வீட்டில் சும்மாயிருக்கிறீர்களா?' என்று எந்த ஒரு பெண்ணிடமும் இனிமே கேட்டுத்தொலைக்காதீர்கள் !
''ஆம் நான் முழுநேரம் பணியாற்றும் வீட்டிலிருக்கும் பெண்,
ஒரு நாளின் 24 மணிநேரங்களும் பணியாற்றுகிறாள்.
அவள் ஒரு தாய்
அவள் ஒரு மனைவி
அவள் ஒரு மகள்
அவள் ஒரு மருமகள்
அவள் ஒரு அலாரம்
அவள் ஒரு சமையல்காரி
அவள் ஒரு வேலைக்காரி
அவள் ஒரு ஆசிரியர்
அவள் ஒரு செவிலியர்
அவள் ஒரு பணியாளர்
அவள் ஒரு ஆயா
அவள் ஒரு பாதுகாவலர்
அவள் ஒரு ஆலோசகர்
அவள் ஒரு நலன் விரும்பி
அவளுக்கு விடுமுறைகள் கிடையாது

என்ன சாதித்திருக்கிறோம் என்பதே பெரிது



எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பது பெரிதல்ல
வாழ்ந்த நாட்களில்
என்ன சாதித்திருக்கிறோம் என்பதே பெரிது.... !!!!

வீரமும் விவேகமும்


என்ன செய்ய முடியும் என்பதை அறிவதைவிட நம்மால் என்ன செய்ய முடியாது என்பதை அறிவதே முக்கியம். வேறு யாராகவும் இருக்க முயலாமல் தானாகவே தன் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வதுதான் வீரமும் விவேகமும்.sountha..

தீர்க்கலாம்



வருடா வருடம் மன வேற்றுமைகளை வளர்த்துக் கொண்டு அவற்றை ஒரு நாள் தீர்க்கலாம் என்று எண்ணுவது தப்பு. இன்று திருந்தாவிட்டால் பிறகு அதற்கான வாய்ப்பு வரப்போவதில்லை.sountha


நினைப்பில்லாமல் வாழ்வு முளைக்காது


ஒரு மனிதன் தான் நினைப்பதாகவே ஆகிறான். ஒரு மனிதனின் நடத்தை என்பது அவனுடைய உள் மன எண்ணங்களின் வெளிப்புற வெளிப்பாடாகும். விதை இல்லாமல் செடி முளைக்காது, நினைப்பில்லாமல் வாழ்வு முளைக்காது.sountha