முகப்பு

vendredi 22 août 2014

silainthy


nam


nallathu


time


ss


samedi 16 août 2014

உன் காதில் சங்கே ஊதினாலும் உன் வழி செல் | வெற்றி உனக்கே..!!!



சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.
ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர்.
போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! — சாத்தியமே கிடையாது!” என கூறினார்
கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன.
மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன
“இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது” — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.
இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது.
எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது
சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது
அனைவரும் வியந்து பொய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினார்கள்
அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.
“முடியாதவர்கள், அவர்களால் முடியாததை
உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள்.
சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ,
செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,”
உன் காதில் சங்கே ஊதினாலும் உன் வழி செல் | வெற்றி உனக்கே..!!!

sm


sm


sm


jeudi 14 août 2014

ss


ss


ss


ss


ss


ss


ss


ss


ss


ss


ss


mardi 12 août 2014

வாழ்க்கை


நாம் வாழும் வரை
நம்மை யாரும் வெறுக்க கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் மறக்க கூடாது...
அது தான் வாழ்க்கை...!(3.2.2012)

உன் வாழ்க்கை



சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே..
நிம்மதியாக வாழ முயற்சி செய்.
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.

தத்துக்கிளி



தத்துக்கிளி எல்லாவற்றையும் தொட்டுப்பார்க்கும் எதிலும் முழுமையாக ஈடுபடாது. எல்லாவற்றுக்கும் பயந்து ஒன்றில் இருந்து ஒன்றுக்குத் தாவி எதையுமே செய்யாதிருக்கும் தத்துக்கிளி போல வாழக்கூடாது. ஏனென்றால் கஷ்டங்களை கண்டு ஒதுங்குவதால் உங்களால் எதையுமே சாதிக்க இயலாது.

நிதி



ஏழைகளுக்கு உதவப்போகிறேன் என்று நிதி திரட்டாதே தான் ஏன் ஏழையாக இருக்கிறேன் என்ற இரகசியத்தை கண்டு பிடிக்கத் தெரியாத ஏழைக்கு நீ எவ்வளவு உதவி செய்தாலும் அவன் இறுதிவரை ஏழையாகவே இருப்பான். பலர் வெளிநாடு வந்தும் கடனாளியாக இருப்பது போல..

வீரமும் விவேகமும்.


என்ன செய்ய முடியும் என்பதை அறிவதைவிட நம்மால் என்ன செய்ய முடியாது என்பதை அறிவதே முக்கியம். வேறு யாராகவும் இருக்க முயலாமல் தானாகவே தன் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வதுதான் வீரமும் விவேகமும்.

lundi 4 août 2014

செயற்படுங்கள்

 
 
 
நீங்கள் வாழ்வை நேசிக்கிறீர்களா.. அப்படியானால் நேரத்தை வீணடிக்காதீர்கள் ஏனென்றால் வாழ்வு அதனால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எழுந்து செயற்படுங்கள், நோக்கத்துடன் செயற்படுங்கள்.
 
 
 உங்களுக்குப் பின்னால் கடந்த காலத்தின் கீழ்ப்பாகமற்ற பாதாளம் இருக்கிறது, முன்னால் எல்லாவற்றையும் விழுங்கிவிடும் எதிர்காலம் இருக்கிறது.. எதை வைத்து இந்த வாழ்வை கவலையாக்குகிறாய் முட்டாள் மனிதனே..
 
 
 நலமின்றி சந்தோஷம் சாத்தியமில்லை.. நம் வாழ்வின் ஆரோக்கியத்தின் ஆயுள் அதையே பொறுத்தது, சந்தோஷம் மனதில் இருந்தே வருகிறது.
 
 
 இந்த வாழ்வில் மன்னிக்க ஏதாவது இருந்தால் உடனே மன்னியுங்கள், மன்னிக்காமல் போவதைவிட மெதுவாகவேனும் மன்னிப்பது நல்லது. 

நேரம் நிற்காது

 
 
 
 
வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே..
உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது..
வாழ்க்கை இருண்டது சிக்கலானது என்றாலும் கலங்காதே..
நேரம் நிற்காது உன் துக்கத்திற்காக தாமதியாது..
இன்றைய கசப்பு நாளை கடந்த காலமாகிவிடும்..
அழாதே.. புதிய நம்பிக்கை.. புதிய கனவுகள்.. புதிய முகங்கள்..
இன்னும் பிறக்காத வருடங்களில் அனுபவிக்காத சந்தோஷங்கள் உள்ளன..

dimanche 6 juillet 2014

சந்தேகிக்கும் பழக்கமாகும்”



வெற்றியின் பாதையில் உள்ள தடைகளில் மிகவும் பெரிய தடைக்கல், ” சந்தேகிக்கும் பழக்கமாகும்” சந்தேகம் எப்போதும் அமைதியைக் குலைக்கிறது.

வெளியே தேடுவது பயனற்றது.


ஒரு மனிதனிடம் என்ன இருக்கிறது என்பதைவிட அவன் என்னவாக இருக்கிறான் என்பதே சந்தோஷத்தைத் தருகிறது.

நம்மில் நாம் திருப்தி காணாவிட்டால் அதை வெளியே தேடுவது பயனற்றது.

வாழும்போதே முழுமையாக வாழ்ந்துவிடுங்கள், எத்தனை வருடங்கள் வாழ்ந்தீர்கள் என்பதில்லை எப்படி வாழ்ந்தீர்கள் என்பதுதான் முக்கியம்.

உங்களைத்தவிர வேறு யாருக்குமே உங்களுக்கான அமைதியைத் தரமுடியாது.
விரோதியை இன்னமும் மறக்காதவர்கள் வாழ்வின் சந்தோஷத்தை இழக்கிறார்கள்.

முக்கியம்.



நாம் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், வல்லமை உடையவராக இருந்தாலும் அன்பு இல்லை என்றால் எதுவுமே இல்லை.
நீங்கள் எதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல, உங்களிடம் இப்போது என்ன இருக்கிறது என்பதே முக்கியம்.

mercredi 4 juin 2014

உளம் கனிந்த வாழ்த்துக்கள்...!



உங்கள் வாழ்வில் துயர்கள் நீங்கி
உற்காகத்துடனும் உல்லாசத்துடனும்
உன்னத வாழ்வு வாழ
உளம் கனிந்த வாழ்த்துக்கள்...!

vendredi 30 mai 2014

சிந்தனைக்கு..!!!



சிந்தனைக்கு..!!! 

மேல் சாதி மனிதன்
கையை அறுக்கும்போது இரத்தம்
சிவப்பாகவும்...
தாழ்த்தப்பட்ட சாதி மனிதன் 
என்று சிலர் குறிப்பிடும் மனிதன் 
கையை அறுக்கும்போது இரத்தம்
கருப்பாகவும்....
வந்தால் நான் நம்புகிறேன்
சாதி உள்ளது என்று.....

மாற்றுத்திறனாளி



கண் தெரியாதவர் - நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது..

காது கேளாதவர் - நான் ஒட்டு கேட்டதே கிடையாது...

வாய் பேசாதவர் - நான் பொய் பேசியதே கிடையாது..

குள்ளமானவர் - நான் யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது..

கை இல்லாதவர் - நான் யார் குறையையும் பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..

கால் இல்லாதவர் - நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை...

அதனால் தான் எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்..
நீயோ ஊனம் என்கிறாய்

நம்புவதில்லை."



குழந்தை வெகுளித்தனமாக 
தன் தாயை கேட்டது, 

"அம்மா! நம் வீட்டு வேலைக்காரியிடம்
உன்னுடைய பர்ஸையும்,
நகைகளையும் கொஞ்ச நேரம்
குடுத்து பார்த்துக்கொள்ள சொல்வாயா?"

அம்மா : "அதெப்படி முடியும்...?
அவளை நான் நம்புவதில்லை."

குழந்தை : "அப்பறம் ஏன் என்னை
மட்டும் அவளிடம் விட்டு செல்கிறாய்...?"

கண்ணீரால் நனைக்காதே.........



வாழ்க்கை புத்தகத்தில் 
முதல் பக்கம் "கருவறை" 
கடைசி பக்கம் "கல்லறை" 
இடையில் உள்ள பக்கங்களை 
புன்னகையால் எழுது.
இடையில் உள்ள பக்கங்களை 
புன்னகையால் எழுது.

கண்ணீரால் நனைக்காதே.........

உண்மை



பொய் சொல்லி தான் தப்பிக்க வேண்டும்
என்றால் , பொய் சொல் !

ஆனால்!
உண்மை சொல்லி மாட்டிக்க வேண்டும் என்றால்
உண்மையை சொல்லி மாட்டி கொள்!

பொய் உன்னை வாழ வைத்து சாகடிக்கும்!
உண்மை உன்னை சாகடித்து வாழ வைக்கும் !

திருமணப் பொருத்தம்



திருமணப் பொருத்தம்

இன்று திருமணம் என்ற உடன் பல இடங்களில் பொருத்தம் பார்ப்பது மிக அவசியம் என்று ஆகிவிட்டது அப்படி இருக்க என் சாதம் தோஷம் அவர் ஜாதகம் தோஷம் இல்லை எப்படி திருமணம் செய்வது என்று அனைவரும் குழம்பி கொண்டு வாழ்கிறார்கள் ஆனால் உண்மையில் பொருத்தம் என்பது அந்த காலத்தில் இல்லவே இல்லை இன்றுதான் இப்படி பத்து பொருத்தம் வேண்டும் பத்தில் ஆறு இருந்தால் பொருந்தும் என்று சொல்கிறார்கள் இதில் மிக முக்கியமாய் இரண்டு பொருத்தம் வேண்டும் அது மாங்கல்யம் அல்லது யோனி இந்த பொருத்தம் இல்லை என்றால் திருமணம் பண்ண கூடாது அது சரி இல்லாதவர்கள் வாழ்வில் இனிக்கத்தான் செய்கிறார்கள்

ஒருவருடைய ஜாதகத்தில் இயற்க்கையாக திருமண தோஷம் இருப்பின் அவர்கள் என்னதான் பொருத்தம் பார்த்து ச்திருமணம் செய்தாலும் அத்திருமணம் தோற்றுத்தான் போகும் அப்படி இருக்கையில் இந்த பொருத்தம் எப்படி  பொருந்தும் யோசிக்கவேண்டிய விசியமே ஆம் அப்படி பொருத்தம் இல்லாமல் எப்படி அந்த காலத்தில் ஜாதகத்தை இணைத்து இருப்பார்கள் ஆமா நாம் பொருத்தம் பார்க்கிறோம் என்று மற்றவர் போல இல்லாமல் அவருகளுடைய ஜாதகத்தில் ப்ராப்தம் என்னும் பொருத்தம் அமைய வேண்டும் ஆம் அப்போருதம் இல்லையேல் திருமண நிகழ்வே நடக்காது ஒருவருடன்

ப்ராப்தம் என்பது இறைவன் வகுத்த ஒன்று அதை யாராலும் தடுக்க முடியாது பிரிக்க முடியாது ஆம் ஒரு பெண் ஜாதகத்தில் லகனத்தின் அதிபதி மற்றும் அவற்றின் சாரம் கொண்ட கிரகமும் இராசியின் அதிபதி அந்த கிரகத்தின் சாரம் அமைப்பை கொண்ட கிரகமும் ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதியின் அமைப்பை அல்லது அந்த ஜாதகரின் தசா புத்திகளின் அமைப்பை பெற்று இருக்க வேண்டும் அல்லது ராசிநாதனின் தொடபுகளை பெற்று வலுவாக அமர்ந்து இருந்தால் அவர்கள் மனமொத்த தம்பதியினர் அதனால் இன்று அவ்வாறு பொருத்தம் பார்ப்பது இல்லை காரணம் இன்றைய சோதிடர்களுக்கு வருமானம் இல்லாமல் போய்விடும் என்று கூட இருக்கலாம்

ஆம் ஒரு பெண் ஜாகத்தின் அமைப்பை நன்றாக ஆராய வேண்டும் அந்த பெண் அமைப்பு என்றும் கெட கூடாது அப்படி கேட்டு இருந்தால் இந்த ஆணின் அமைப்பும் கேட்டு விடும் அதாவது சக்தி இல்லையேல் அதனுள் சிவமும் இல்லாமல் போகும் ஒரு பெண்ணின் அமைப்பு அந்த சாதகரை திருமணம் செய்தால்அந்த குடும்பம் விருத்தி அடையும் அமைப்பு இருக்கவேண்டும் இல்லாத யோகத்தை கூட ஒரு சக்தி என்னும் பெண் வந்தால் தானாக வந்து விடும் அந்த சக்தியை தேர்ந்து எடுப்பதில் மிகுந்த கவனம் வேண்டும்

பெண் என்பவர் மண்ணுடன் ஒப்பிடுவார்கள் ஆண் என்பவர் விதையுடன் ஒப்பிடுவார்கள் மண்ணில் எந்த விதை வேண்டுமானாலும் விதைக்க முடியும் ஆனால் விதை நன்றாக அமைய வேண்டுமே அப்படி ஆணின் பங்கும் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது அவ்வாறு பெண் என்னும் மண் அமைப்பை பெற்று இருப்பதால் அவர்கள் எவ்வித விதை விதைத்தாலும் அந்த விதை நன்றாக வளர அந்த மண்ணின் அமைப்பும் கேட்டு இருக்க கூடாது இப்படி காரகதுவதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் ஏனோ தானோ என்று திருமணம் செய்தாலோ நான் பத்துக்கு பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்தேன் என்றாலும் பின்பு இல்லற வாழ்க்கை வினாகி போகும்

திருமணத்தில் முக்கியமாக காதல் திருமணம் இன்று சில காதல் மற்றும் திருமணம் பணம் வசதி மற்றும் வேலை படிப்பு இப்படியே தகுதிகள் அடிப்படையிலே அமைகிறது அப்படி அமைகிற திருமணம் எவ்விதத்திலும் மனோ திருப்தியை தராது அதனால் துக்கமும் தவறுகள் அதிகம் நடக்க வாய்ப்புக உண்டாகும் மனமொத்த தம்பதி இல்லாத சூழ்நிலையில் வேற்று ஒருவரை தேர்ந்து எடுத்து மறைமுக வாழ்கையை நடத்த வேண்டி வந்து விடும் அவ்வாறான பொருள் பணம் வீடு வசதியை பார்த்து திருமணமும் இக்கட்டான சூழ்நிலையில் நம்மை நிறுத்தி விடும் என்பது பலரும் அனுபவித்த உண்மையே

ஆம் ஒரு திருமணம் வைபோகம் என்பது இன்று காதல் திருமணம் என்றால் கூட அங்கும் பொருத்தம் என்கிற சாதகத்தை தூக்கி கொண்டு அலைகிறார்கள் அப்படி பொருத்தம் பார்க்க முனைந்து விட்டல் அந்த காதல் அமைப்பு துண்டித்து விடுகிறது அதனால் அங்கு காதல் திருமணம் என்னும் நிலை மாறி விடுகிறது அதலால் காதலரை தேர்ந்து எடுக்கும் முன்பே பொருத்தம் பார்த்து காதலிப்பதும் எவ்விதத்திலும் சாத்தியம் ஆகாது அதனால் அவரவர் அமைப்பை அறிந்து கொண்டு அதன் சூச்சமா அமைப்பின் படி நடத்தி கொள்வதே சாத்தியம் இல்லையென்றாலும் அந்த திருமணத்தால் பதிப்பே வரும்

சாதக பொருத்தம் சரியாக இந்த ஜாதகத்தோடு பொருந்தி வரவேண்டும் என்று பார்த்தல் எப்படி முடியும் ஒரே அமைப்பு உடைய ஒருவருடைய சாதகம் போல இன்னொருவர் சாதகம் இருக்காது ஒவ்வொருவருடைய பிறப்பும் ஒவ்வோரு நோக்கத்திற்காக அமைக்க பட்ட ஒன்று ஒவ்வொரு ஆன்மாவும் வெவ்வேறு செயலுக்க படைக்க பட்ட ஒன்று அப்படி இருக்கையில் எப்படி ஒரே அமைப்பு உடைய ஜாதகம் அமையும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் தோஷ அமைப்பு என்பது மட்டும் அல்லாமால் ப்ராப்தம் என்னும் அமைப்பையும் சரி வர  ஆராய்ந்து அந்த கிரக சாராம்சம் சரி வர பொருந்தி அமைந்தால் அந்த சாதகர் இல்லறத்தில் நல்லறம் காண்பார்கள்

உறவில் விரிசல்



உறவுகளிடம் பேசும் போது கண்களில் அன்பை காட்டுங்கள். அவ்வப்போது மன்னிப்பையும், நன்றியையும் சிறு வார்த்தைகளால் சொல்லி பாருங்கள் உறவில் விரிசல் ஏற்படாது.

மன்னிப்பு



எந்தத் தவறுக்காகவும் எவரையும் ஒருமுறை மன்னித்துப் பாருங்கள். மன்னிப்பு என்பது அன்பைத் திறந்து வைக்கிற சாவி. மன்னிப்பு என்பது மற்றவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தேவைப்படுவது. மற்றவை மன்னிப்பது போலவே உங்களையும் நீங்கள் மன்னித்துக் கொள்ள முடியும். இது உங்கள் உடலுக்குக் கேடு தரும் எல்லா உணர்வுகளுக்கும் எதிரி.

இருக்கத்தான் செய்யும்.



ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும், ஓராயிரம் தோல்விகள், இழப்புகள், அவமானங்கள்,ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும்.

போடுபவன்,



வேலையை ஒத்தி போடுபவன் வெற்றியை ஒத்திப் போடுகிறான்; விதைப்பதை ஒத்தி போடுபவன், விளைச்சலை ஒத்திப் போடுகிறான்.