வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே. உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது. நேரம் ஒருபோதும் நிற்காது, உன் துக்கத்திற்காக அது தாமதிக்காது. உன் துக்கத்தினால் ஓடும் நேரத்தை கோட்டைவிட்டுவிடாதே.
வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது. saveiour@gmail.com
dimanche 29 janvier 2012
ஓடும் நேரத்தை கோட்டைவிட்டுவிடாதே.
வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே. உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது. நேரம் ஒருபோதும் நிற்காது, உன் துக்கத்திற்காக அது தாமதிக்காது. உன் துக்கத்தினால் ஓடும் நேரத்தை கோட்டைவிட்டுவிடாதே.
vendredi 27 janvier 2012
உன் மேல்
வண்டுக்கும் காதல் உண்டு
மலர்களின் மேல்!
நண்பர்களுக்கும் காதல் உண்டு
நட்பின் மேல்!
எனக்கும் காதல் உண்டு
தமிழ்த்தாயே உன் மேல்!
jeudi 26 janvier 2012
நட்பு
ஒரு செடியில் பூக்கள் என்பது ,
பூத்துக்கொண்டே இருக்கும் .
அதுபோல், என் இதயத்தில் ,
உங்கள் மீதான நட்பு , என்றும்
உங்களை தொடர்ந்து கொண்டே இருக்கும் .
நான் மண்ணுக்குள் புதையும் வரை ~~~~~
நம் நட்பின் வாசம்
"இறைவன் நினைத்தாலும் மாறாதது, மாற்ற முடியாதது, நம் நட்பினை" !
"பூவின் வாசம் இந்த உலகில், ஒரு நாள் மட்டுமே வீசும்"
"ஆனால், நாம் இறந்தாலும் நம் நட்பின் வாசம், இந்த உலகில் என்றும் வீசும்" !!
mercredi 25 janvier 2012
நட்பு
இருந்தால் வருவேன் என்றது காதல்
பணம் இருந்தல் வருவேன் என்றது சொந்தம்
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன்
என்றது நட்பு
நட்பு என்பது
நண்பர்கள் என்றவர்கள்
காதலர்களாகியிருக்கிறார்கள்
எனக்குத் தெரிய அண்ணன் தங்கை
என்று ஆரம்பித்தவர்களே
கணவன் மனைவியாகவும்
ஆகியிருக்கிறார்கள்
ஆனாலும் சொல்கிறேன்
நட்பு என்பது நம்மைப்போல் என்றும்
நட்பாகவே இருப்பதுதான்
lundi 23 janvier 2012
dimanche 22 janvier 2012
இதயம்
உன் இதயம் துடிக்கும்
ஒவ்வொரு நொடியும்
நான் ரசித்து கொண்டிருப்பேன் ,
ஏன் என்றால் துடிப்பது
உன் இதயம் என்றாலும்
இருப்பது என்னிடம் என்பதால்
vendredi 20 janvier 2012
என் அன்னையின் அன்புக்கு......!!
தன்உயிரை எனக்கு தந்து ,
உயிர் கொடுத்தவள் !!
தன் ரத்தத்தை பாலாய் தந்து ,
பாசத்தை ஊட்டியவள் !!
மசக்கையிலும்,வாந்தியாலும் ,
தான் துவண்டலும் !!
மனதாலும்,வார்த்தைகளாலும் ,
மற்றவர்களை சந்தோஷபடுத்தியவள் !!
நான் உதைத்த உதைகளை
வயிற்றுக்குள் வாங்கி
நெஞ்சத்தில் மகிழ்ந்தவள் !!
நான் அழுத நொடி ,
அவள் கண்ணீர் விட்டவள் !!
நான் சிரித்த நொடியிலும் ,
அவள் கண்ணீர் விட்டவள் !!
ஆனந்த கண்ணீராக...
வளர்ந்துதான் இருக்கிறேன்
உடலளவில்,
நானும் குழந்தைதான் மனதளவில்,
பாசத்துடன் தலை கோதும்
என் அன்னையின் அன்புக்கு......!!
உயிர் கொடுத்தவள் !!
தன் ரத்தத்தை பாலாய் தந்து ,
பாசத்தை ஊட்டியவள் !!
மசக்கையிலும்,வாந்தியாலும் ,
தான் துவண்டலும் !!
மனதாலும்,வார்த்தைகளாலும் ,
மற்றவர்களை சந்தோஷபடுத்தியவள் !!
நான் உதைத்த உதைகளை
வயிற்றுக்குள் வாங்கி
நெஞ்சத்தில் மகிழ்ந்தவள் !!
நான் அழுத நொடி ,
அவள் கண்ணீர் விட்டவள் !!
நான் சிரித்த நொடியிலும் ,
அவள் கண்ணீர் விட்டவள் !!
ஆனந்த கண்ணீராக...
வளர்ந்துதான் இருக்கிறேன்
உடலளவில்,
நானும் குழந்தைதான் மனதளவில்,
பாசத்துடன் தலை கோதும்
என் அன்னையின் அன்புக்கு......!!
காத்தி௫க்கின்றோம்
அன்பு காட்ட அம்மா இல்லை....
அறிவு புகட்ட அப்பா இல்லை....
அன்பே என்று அரவணைக்க ...யா௫மில்லை....
மகனே என்று மடிசாய்க்க யா௫மில்லை....
கண்ணே என்று கட்டியணைக்க யா௫மில்லை...
முத்தே என்று முத்தமிட யா௫மில்லை.....
அப்படியென்றால் நாங்கள் யார்?
அனாதை என்னும் சிறப்பு பட்டம் பெற்ற
பட்டதாரிகளா நாங்கள்...?
எங்களது பிறந்தநாள் என்னவென்று
தெரியாதபோதும்
பணக்காரரின் பிறந்தநாளுக்காக
காத்தி௫க்கின்றோம்
அறிவு புகட்ட அப்பா இல்லை....
அன்பே என்று அரவணைக்க ...யா௫மில்லை....
மகனே என்று மடிசாய்க்க யா௫மில்லை....
கண்ணே என்று கட்டியணைக்க யா௫மில்லை...
முத்தே என்று முத்தமிட யா௫மில்லை.....
அப்படியென்றால் நாங்கள் யார்?
அனாதை என்னும் சிறப்பு பட்டம் பெற்ற
பட்டதாரிகளா நாங்கள்...?
எங்களது பிறந்தநாள் என்னவென்று
தெரியாதபோதும்
பணக்காரரின் பிறந்தநாளுக்காக
காத்தி௫க்கின்றோம்
jeudi 19 janvier 2012
வெண் குஸ்டத்திற்கான புதிய மருந்து கண்டுபிடிப்பு
mercredi 18 janvier 2012
கண்ணதாசனின் அசரிரீ
நான்
நிரந்தரமானவன்
அழிவதில்லை..
ஊற்றாயிருந்திருகிறேன்
கவிதைகளை சுரப்பதில்..
ஆற்றுபடுத்தினேன்
உங்களையெல்லாம் நல்லவை நோக்கி..
எக்கருவும்
என்
கவிதைத் தேரில்
பயணிக்கும்..
அர்த்தமுள்ள
இந்து மதத்தில்
இருந்தும்
இயேசு காவியம்
படித்தேன்
எம்மதமும் சம்மதம்...
நான் போதையில்
தடுமாறியிருக்கிறேன்
ஆனால்
பாதையில்
தடம் மாறியதில்லை..
மரணம் நிகழ்ந்தது
என் உடலுக்கு மட்டும்
நான் எண்ணியாங்குபடி..
யாரும் நினையா
அர்த்த ராத்திரியில்..
அந்தரத்தில்
என் விமான பயணத்தில்..
உயிரோடு இருக்கிறது
என் கவிதைகள்
உங்களிடம் பத்திரமாய் ..
நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை ...
mardi 17 janvier 2012
dimanche 15 janvier 2012
vendredi 13 janvier 2012
vendredi 6 janvier 2012
வாழ்வின் இறுதிதான் சிறப்பானது
ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது.வாழ்வின் அந்திம காலத்தை நம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் அணுகுங்கள். வாழ்வின் இறுதியை ஆர்வத்தோடு அணுகுங்கள், சோகத்தோடு அல்ல. ஏனெனில் வாழ்வின் இறுதிதான் சிறப்பானது, கடவுளை நம்புங்கள்.
தெளிவுடன், தன்னம்பிக்கையுடன் நடந்து செல்லுங்கள், மேலே ஒரு கை உங்களை வழி நடாத்தும்
அடுத்த வருடம் சிறப்பாக வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் இந்த வருடம் முழுமையாக, மனத்திருப்தியுடன், சந்தோஷமாக, மன ஈடுபாட்டுடன் வாழ வேண்டும்.பிரபஞ்சம் ஒரு படைப்பு, ஒரு குழப்பமல்ல. பகல் இரவு போல மனிதனும் பிரபஞ்சத்தில் ஒரு பாகம்தான். நன்றாகத் தேடினால் நீ பெற வேண்டிய அறிவு முழுவதும் இந்தப் பிரபஞ்சத்திலேயே இருப்பதைக் கண்டு கொள்வாய். பிரபஞ்சத்தில் பாடம் கற்க தெரிந்தவனுக்கு பல்கலைக்கழகம் ஏன்..?
நம்பிக்கை இருக்குமிடத்தில் வீரம், மனோபலம், விடா முயற்சி, வலிமை எல்லாமே இருக்கும். கடவுள் நம்மோடு இருந்தால் எவரால் நம்மை எதிர்க்க முடியும் ?
நம்பிக்கையே வாழ்வின் பிரச்சனைகள் ஏமாற்றங்களை கடந்து மேலேறும் தைரியத்தைத் தருகிறது. அது தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக நினைக்குமே அல்லாது அதை ஏற்றுக் கொள்ளாது.
தெளிவுடன், தன்னம்பிக்கையுடன் நடந்து செல்லுங்கள், மேலே ஒரு கை உங்களை வழி நடாத்தும்
பிறந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது
இந்த
தகவலை
வாசிக்கும் ஒவ்வொருவரின் பார்வையிலும், இன்றோ அல்லது நேற்றோ பிறந்த
குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம்
பார்த்திருக்கலாம்.
இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால்
பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
சரி அப்படி
எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன? இதோ
தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில்
இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு
மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக்
கொண்டிருக்குமாம்.
இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு
தீடிரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி
விடுகின்றனவாம். அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி
நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை
உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள்
தகவலை
வாசிக்கும் ஒவ்வொருவரின் பார்வையிலும், இன்றோ அல்லது நேற்றோ பிறந்த
குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம்
பார்த்திருக்கலாம்.
இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால்
பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
சரி அப்படி
எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன? இதோ
தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில்
இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு
மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக்
கொண்டிருக்குமாம்.
இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு
தீடிரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி
விடுகின்றனவாம். அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி
நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை
உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள்
mardi 3 janvier 2012
கருக்கலைப்பு
கருக்கலைப்பு
ஜனனங்களுக்காய்
படைக்கப்பட்ட
கருவறைகள்..
இன்றோ
மரணங்களுக்கான
கல்லறையாய
புதிய பரிமாணம்
உயிரணுக்களின்
உயிர்கள்
அணுவணுவாய்
கொல்லப்படுகிறது
மருத்துவச் சித்ரவதைகளுடன்....
தொப்புள்கொடிகளே
தூக்குக்கயிறுகளாகின்றன
இந்தக்கருக்கலைப்பில்....
"பூக்களை தீயிட்டு
எரிப்பதைப்போல"
என்பதை தவிர
வேறெந்த உவமைகளும்
பொருந்தப் போவதில்லை
இந்த அகால மரணங்களுக்கு...
மனிதாபிமானம்
செத்துப்போய்விட்டதை
பகிரங்கமாய் பறைசாற்றுவதற்கா
சிசுக்கொலைகள்...?
உண்டான பிறகு
சிதைப்பதை விட்டுவிட்டு
உண்டாகும் முன்
சிந்தியுங்கள்
ஏனெனில் நீங்கள்
சிதைப்பது உயிர்களை அல்ல
இவ்வுலகின்
நாளைய விடிவை !(பூரணி)
samedi 31 décembre 2011
jeudi 29 décembre 2011
அவள் அழகு
கல்லில் சிலை அழகு
சொல்லில் தமிழ் அழகு
மானில் விழி அழகு
தேனில் சுவை அழகு
வானில் நிலவு அழகு
இளவேனிலில் தென்றல் அழகு
இதயத்தில் காதல் அழகு
காதலில் மாலை அழகு
மாலையில் மலர் அழகு
மலரில் மது அழகு
மதுவில் அருந்தும் வண்டு அழகு
புருவத்தில் வில் அழகு
புன்னகையில் முத்து அழகு
கண்களில் கயல் அழகு
கற்பனையில் கவிதை அழகு
கவிதையில் பொய் அழகு
பொய்யில் புதுமை அழகு
புதுமையில் அவள் அழகு
(Peratheepan Theepan)
mercredi 28 décembre 2011
mardi 27 décembre 2011
எழு தோழா
எறும்பு போல் வேகம் பெறுவோம்,
மனதில் நிலவை போல் காட்சி தருவோம்
உலகில் கதிரவனாய் இருப்போம்
பகைவருக்கு சந்திரனாய் இருப்போம்
நல்லவர்க்கு அமைதியாய் இருப்போம்
நன்மைக்கு வேகமாய் நடப்போம்
கடமைக்கு துணிச்சலாய் இருப்போம்
பூமிக்கு துணிச்சலாய் இருப்போம்
பூமிக்கு துணிவோடு எதையும் வென்றுவிடுவோம்
நாட்டிற்கு நம் தேசத்திற்கு
எழு தோழா ,எழு தோழா, எழு தோழா
மனதில் நிலவை போல் காட்சி தருவோம்
உலகில் கதிரவனாய் இருப்போம்
பகைவருக்கு சந்திரனாய் இருப்போம்
நல்லவர்க்கு அமைதியாய் இருப்போம்
நன்மைக்கு வேகமாய் நடப்போம்
கடமைக்கு துணிச்சலாய் இருப்போம்
பூமிக்கு துணிச்சலாய் இருப்போம்
பூமிக்கு துணிவோடு எதையும் வென்றுவிடுவோம்
நாட்டிற்கு நம் தேசத்திற்கு
எழு தோழா ,எழு தோழா, எழு தோழா
lundi 26 décembre 2011
vendredi 23 décembre 2011
தூக்கம் பற்றிய ஒரு சுவாரசிய ஆய்வு
தூக்கம் பற்றிய ஒரு சுவாரசிய ஆய்வு ஆழ்ந்த தூக்கம் தான் ஒரு மனிதனை விழிப்பிற்குப் பின் சுறுசுறுப்பாக்கும். அந்த தூக்கத்திற்காக இன்று தடுமாறுபவர்கள் ஏராளம்.
படுத்ததும் தூங்கிப் போனால் அது அவருக்கு வரம். தூக்கம் வராமல் கண்ணை பிராண்டினால் அதுவே சாபம்.
சிலர் படுத்த நீண்ட நேரத்திற்குப் பின்னரே உறங்குவார்கள். இன்னும் சிலர் எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கமின்றி தவிப்பார்கள். தூக்கம் வரும் போது, நேரம் விடியலை நெருங்கியிருக்கும்.
சிலர் தூக்கம் வருவதற்காக 100ல் இருந்து பின்னோக்கி எண்ணுவார்கள். அவ்வாறு எண்ணும்போது அவர்களது முழுக் கவனமும் எண்களில் கரைந்துவிட சிறிது நேரத்தில் தங்களை மறந்து தூங்கிப் போவார்கள். இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அங்குள்ளவர்களுக்கு தூக்கம் வருவதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆவது தெரியவந்தது.
ஆழ்ந்த தூக்கத்திற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்கள். மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம்.
அவர்களில் சிலர் இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பதும் ஆய்வில் தெரியவந்தது. அதாவது சீச்சிடும் பறவைகளின் ஒலிகள், மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு போன்றவை அவர்களது தூக்கத்தை எளிதில் வரவழைக்க பயன்படுகின்றனவாம்.
சிலர் மிகப் பழமையான முறையான புத்தகம் படிப்பதையும் தூக்கம் வருவதற்காக பயன்படுத்துகிறார்களாம். இன்னும் சிலர் துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிப் போகிறார்களாம்.
இவை தவிர கடிகாரத்தின் டிக் டிக் ஓசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தமும் இங்கிலாந்து நாட்டவர்களின் தூக்கத்தை வரவழைக்கும் விடயங்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பதும் ஆய்வில் தெரியவந்தது.
வாழ்வின் இறுதிதான்
ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது.வாழ்வின் அந்திம காலத்தை நம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் அணுகுங்கள். வாழ்வின் இறுதியை ஆர்வத்தோடு அணுகுங்கள், சோகத்தோடு அல்ல. ஏனெனில் வாழ்வின் இறுதிதான் சிறப்பானது, கடவுளை நம்புங்கள்.
lundi 19 décembre 2011
மனித வாழ்வின் நோக்கமும் இறுதி இலட்சியமும்
மனத்தை நீ எப்படி வைத்திருக்கிறாயோ அந்த நிலையைப் பொறுத்தே நீ அடையும் சந்தோஷத்தின் அளவு இருக்கிறது. ஏனென்றால் வாழ்வின் அர்தமும் நோக்கமும், சந்தோஷம்தான். மனித வாழ்வின் நோக்கமும் இறுதி இலட்சியமும் அதுதான். திருப்திக்கான வழிமுறைகள் நம்மிடையே வளர்தெடுக்கப்படாவிட்டால் பொருளாதார வெற்றிகள் முதல் எவ்வளவு வெற்றிகள் வந்தாலும் அவை நம்மை மகிழ்விக்காது. திருப்திப்படத் தெரியாதவனுக்கு தீர்வு என்னவென்று தெரியாது. சந்தோமான வாழ்வுக்கு ஒரு சிலதுதான் தேவை. அவை உங்களிடமே இருக்கின்றன, உங்கள் சிந்தனா முறையில் இருக்கின்றன.
கடவுள் எல்லோரையுமே சந்தோஷமாகத்தான் படைத்திருக்கிறார்.
என்ன செய்ய முடியும் என்பதை அறிவதைவிட நம்மால் என்ன செய்ய முடியாது என்பதை அறிவதே முக்கியம். வேறு யாராகவும் இருக்க முயலாமல் தானாகவே தன் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வதுதான் வீரமும் விவேகமும்.ஒரு மனிதன் சந்தோஷமின்றி இருந்தால் அவனது சொந்தத் தவறுதான் அதற்குக் காரணம் என்பதை நினைவில் வையுங்கள். ஏனெனில் கடவுள் எல்லோரையுமே சந்தோஷமாகத்தான் படைத்திருக்கிறார்.
வாழ்க்கை
வாழ்க்கையைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிகிறது என்பதைவிட நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அடுத்தவர் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறு செய்யாமல் இருப்பவர்கள் துன்பங்களில் சிக்குப்படமாட்டார்கள். நிச்சயமற்ற இந்த உலகில் மனித அனுவம் என்ற கடந்த காலச் சரித்திரமே நமக்கு தெரிந்தவற்றிலேயே நிச்சயமானது, நம்பகமானதுமூட நம்பிக்கைகளை முறியடிக்க வேண்டும்..!
வாழையடி வாழையாக விழுந்த மனக்கோலங்களை நிமிர்த்த வேண்டும்…!
சூழலின் இறுக்கத்தைத் தளர்த்த வேண்டும்..!
குழப்பமுள்ள எண்ணங்களை திருத்த வேண்டும்..!
தளர்ந்துவிட்ட நம்பிக்கைகளை தூக்கி நிமிர்த்த வேண்டும்..!
தாழ்ந்துவிட்ட சுய மரியாதைக்கு உயிரூட்ட வேண்டும்..!
மூட்டமிடும் மூட நம்பிக்கைகளை முறியடிக்க வேண்டும்..!
எதிர்ப்படுகிற தடைகளை தகர்க்க வேண்டும்..!
lundi 12 décembre 2011
ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவது ஏன்?
ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவது ஏன்?
சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ருத்ராட்ச மாலையும், துளசி மாலையும் அணிந்து விரதமிருந்து செல்வார்கள். சிவனும் பெருமாளும் இணைந்து ஒரு மாபெரும் சக்தியாக உருவானவர் ஐயப்பன். இதில் ருத்ராட்சம் என்பது சிவனின் சின்னமாகும். துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது. இது தவிர, துளசியின் கதையில் துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள். ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என நம்பிக்கையும் உண்டு.
கார்த்திகை மாதத்தில் தொடங்கி, தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தத் துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு. சளி, ஜலதோஷம் என்றால் துளசி கஷாயம் சாப்பிடுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள், உடலில் வெப்பம் கொடுக்கத்தான் இந்தத் துளசி மாலையை அணிகின்றனர். மஹாவிஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க, அவர் கழுத்தையும் துளசி மாலை அலங்கரிக்கும். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர்.
சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ருத்ராட்ச மாலையும், துளசி மாலையும் அணிந்து விரதமிருந்து செல்வார்கள். சிவனும் பெருமாளும் இணைந்து ஒரு மாபெரும் சக்தியாக உருவானவர் ஐயப்பன். இதில் ருத்ராட்சம் என்பது சிவனின் சின்னமாகும். துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது. இது தவிர, துளசியின் கதையில் துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள். ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என நம்பிக்கையும் உண்டு.
கார்த்திகை மாதத்தில் தொடங்கி, தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தத் துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு. சளி, ஜலதோஷம் என்றால் துளசி கஷாயம் சாப்பிடுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள், உடலில் வெப்பம் கொடுக்கத்தான் இந்தத் துளசி மாலையை அணிகின்றனர். மஹாவிஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க, அவர் கழுத்தையும் துளசி மாலை அலங்கரிக்கும். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர்.
dimanche 11 décembre 2011
தடையில்லை!
மரங்களின் வேர்கள் மண்ணோடு
மலர்களின் வாசனை காற்றோடு
உறவுகள் இருக்கட்டும் வாழ்வோடு
உணர்வுகள் கலக்கட்டும் வானோடு
இப்படி பூமியில் பிறக்கும்வரை
இருந்தோம் கருவில் கண்மூடி
தொப்புள்கொடியை வெட்டியபின்
தானாய் வளர்ந்தோம் உறவாடி
உனக்கென உறவுகள் அவசியம்தான்
உயர்வுக்கு அலையும் உடனிருக்கும்
தனக்கென மட்டும் வாழாதே
திசைகள் எட்டும் திறந்திருக்கும்
வீடு மட்டும் நீயில்லை
வரவும் செலவும் நீயில்லை
கூடு பறவையின் இடமில்லை
குதித்துக் கிளம்பு! தடையில்லை!
mardi 6 décembre 2011
வேரில் இருந்துதான் பூ வருகிறது.
பூவிலிருந்து வேர் வருவதில்லை, வேரில் இருந்துதான் பூ வருகிறது. காற்றிலோ, விண்ணிலோ அழகாக மலரும் எதுவுமே தன் அழகை, சக்தியை வேரிலிருந்துதான் பெறுகிறது. மண்ணில் புதைந்த ஆழமான வேர்களின் சாறினால்தான் உயிருள்ள எல்லாம் பூத்து நிற்கின்றன. கன்னத்தில் மறைந்திருக்கும் வெட்கம் மண்ணின் வேதியல் பொருட்களில் மறைந்திருக்கும் அமைதியான உயிர் சக்தியில் இருந்துதான் வருகிறது. மண்ணைப் பிரிந்து வானில் பூக்க முடியாது
மண்ணில் இருந்து, பூமியின் அமைதியான மடியில் இருந்துதான் வாழ்வின், சக்தியின் ஊற்று வெளிப்படுகிறது. மண்ணிலிருந்து, மக்களின் அமைதியான இதயத்தில் இருந்து நம்பிக்கையும், உறுதியும் சந்தோஷத்தோடு வெளிப்பட்டு பூமியின் அழகை புதுப்பிக்கிறது.
வாழ்க்கை
வாழ்க்கையைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிகிறது என்பதைவிட நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அடுத்தவர் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறு செய்யாமல் இருப்பவர்கள் துன்பங்களில் சிக்குப்படமாட்டார்கள். நிச்சயமற்ற இந்த உலகில் மனித அனுவம் என்ற கடந்த காலச் சரித்திரமே நமக்கு தெரிந்தவற்றிலேயே நிச்சயமானது, நம்பகமானது.
Inscription à :
Articles (Atom)


















